sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

புல்லாங்குழல் புகழ்பாடும் குடும்பம்

/

புல்லாங்குழல் புகழ்பாடும் குடும்பம்

புல்லாங்குழல் புகழ்பாடும் குடும்பம்

புல்லாங்குழல் புகழ்பாடும் குடும்பம்


PUBLISHED ON : ஜன 14, 2022

Google News

PUBLISHED ON : ஜன 14, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'மாதவா... மதுசூதனா... மன்னவா... மாயவா... கம்பிகளை சுட்டு, மூங்கிலை குடைந்து, துளைகளிட்டு புல்லாங்ழல் படைத்து விட்டோம்... இனி நீயே எங்கள் சுவாசத்தில் இறங்கி, துளைகளில் நுழைந்து, இசையாகி வேணுகானம் இசைப்பாய்' என பகவான் கண்ணனே கதியென கிடந்து 42 ஆண்டுகளாக பாரம்பரிய முறையில் புல்லாங்குழல் தயாரிக்கும் மதுரை கைவினைக் கலைஞர்கள் பி.வி.கிருஷ்ணராம் குடும்பம் புகழையும் 'புருதோஷத்தமன் புகழ் பாடும் மூங்கில்கள் பாட வேண்டும்' என்றே சொல்லத்தோன்றும்.

புல்லாங்குழல் குடும்பத்தின் ஷாலினி கிரிஷ் சந்தர் பேசுகிறார்...

''என் தந்தை கிருஷ்ணராமின் தாத்தா பரசுமன்னா நாகய்ய பாகவதர் ஸ்ரீமத் நடன கோபால நாயகி சுவாமிகளின் பிரதான சிஷ்யர். அவரிடம் இருந்து தந்தைக்கு இசை ஆர்வம் பிறந்தது. 1985ல் புல்லாங்குழல் இசைக்க கற்றதோடு 42 ஆண்டுகளாக தயாரித்தும் வருகிறார்.

தந்தையிடம் இருந்து நான் இசைக்க, தயாரிக்க கற்றேன். அக்கா சுபாஷினி தயாரிக்க மட்டும் கற்றார்.

பாரதத்தின் தாய் வாத்தியமான புல்லாங்குல் எந்த இணைப்பு உபகரணமும் இணையாத இயற்கையான இசைக் கருவி. கேரளா, அசாமில் இருந்து மூங்கிலை வாங்கி ஹிந்துஸ்தானி, கர்நாட்டிக், வெர்ஸ்டர்ன் என 3 வகைகளில் கீழ், மத்திம, மேல் ஸ்தாயி என 29 புல்லாங்குழல் 'செட்' தயாரிக்கிறோம். பகவான் கண்ணன் அருகேயுள்ள பசுக்களை அழைக்க 'வேங்குழலில்' இசைப்பது மத்திம ஸ்தாயி, துாரத்து பசுக்களை அழைக்க 'சீங்குழலில்' இசைப்பது மேல் ஸ்தாயி, சோகத்தில் 'மென்குழலில்' இசைப்பது கீழ் ஸ்தாயி. இதுவே புல்லாங்குழின் 'டெசிபல்' அளவீடு.

மூச்சு பயிற்சிக்கு பேருதவி செய்யும்

புல்லாங்குழல் படிப்பது இன்று அரிதாகி வரும் போது தயாரிப்பும் அரிதாகி வருகிறது. இந்நிலையில் கேரளா மாநிலம் பாலக்காடு இசை வித்வான் கே.எல்.ஸ்ரீதர் 'ஸ்ருதி சாகர் பன்சாரி' என்ற எங்கள் முகநுால் பக்கத்தில் புல்லாங்குழல் இசை, தயாரிப்பு குறித்து பார்த்து புகழ்ந்து வீடியோ வெளியிட்டார். அதற்கு பின் தான் வெளியுலகிற்கு அடையாளம் தெரிந்தோம். தற்போது சிங்கப்பூர், அமெரிக்கா, ஸ்பெயின் என 15 நாடுகள் கடந்து செல்கிறது எங்கள் புல்லாங்குழல். ஆனால் தமிழகத்தில் வளரும் தலைமுறையினர் ஆர்வம் காட்டுவதில்லை. மூங்கில்களை எடுத்து வரவும் போதிய வசதியில்லை. மத்திய, மாநில அரசுகள் ஆவன செய்தால் புல்லாங்குழல் புகழை இவ்வுலகமே பாடும் என... பேசி முடித்தபடி வேணுகானம் இசைக்க தொடங்கினார்.

இசை குடும்பத்தை வாழ்த்த 94434 54322 க்கு பேசலாம்.

த.ஸ்ரீனிவாசன்

எம்.கண்ணன்







      Dinamalar
      Follow us