/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
லிட்டில் ஸ்டார் யாருன்னு கேட்டா... - 'அட..டா' என அசத்தும் அத்வைத்
/
லிட்டில் ஸ்டார் யாருன்னு கேட்டா... - 'அட..டா' என அசத்தும் அத்வைத்
லிட்டில் ஸ்டார் யாருன்னு கேட்டா... - 'அட..டா' என அசத்தும் அத்வைத்
லிட்டில் ஸ்டார் யாருன்னு கேட்டா... - 'அட..டா' என அசத்தும் அத்வைத்
PUBLISHED ON : ஜன 14, 2022

துருதுருவென அங்குமிங்குமாக விளையாட்டு பிள்ளையாக ஓடிக்கொண்டிருக்கிறார். 'ஷாட் ரெடி' என அழைப்பு வர நல்ல பிள்ளையாக கேமரா முன் வந்து நிற்கிறார். இயக்குனர் சொன்னதை அப்படியே உள்வாங்கி தேர்ந்த நடிகனாக நடித்து காட்டுகிறார் 'லிட்டில்' ஸ்டார் அத்வைத்.
வயது ஒன்பது என்றாலும் இதுவரை இவர் நடித்துள்ள விளம்பர படங்கள் நுாறை தாண்டும். இப்போது திரைப்படங்களில் பிளாஷ்பேக்கில் சின்ன வயது ஹீரோவாக 'மாஸ்டர்' ரோலில் நடிக்க இவரைதான் எல்லோரும் தேடுகிறார்கள். மதுரையில் படப்பிடிப்புக்கு வந்திருந்த அவரோடு 'விளையாட்டு பிள்ளையாக' நாமும் மாறி தினமலர் பொங்கல் மலருக்காக ஓடி ஓடி பேட்டி எடுத்தோம்.
* ஷூட்டிங்கில் 'பிஸி'யாக இருக்கிறீர்களே. நடிப்பால் படிப்பு பாதிக்காதா?
4ம் வகுப்பு படிக்கிறேன். ஷூட்டிங் இருந்தால் ஸ்கூல்ல தகவல் சொல்லிட்டு 'பேக்கிங்' செய்து கொண்டு கிளம்பிடுவேன். ஷூட்டிங் 'பேக்கப்' ஆனதும் பாட்டியோடு வீட்டிற்கு கிளம்பிடுவேன்.
ஷூட்டிங்கில் ப்ரீயாக இருக்கும்போது ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் பண்ணுவேன். அதைபார்த்து நீங்க வீடியோ கேம் விளையாடுறேன்னு நினைச்சீங்கன்னா அது என் தப்பில்லை. ஷூட்டிங் இல்லாத சமயத்தில் ஸ்கூலுக்கு போயிடுவேன்.
* நடிகனானது எப்படி?
எங்கப்பா வினோத். அம்மா நந்தினி. அவுங்கதான் என்னை மோட்டிவேட் பண்ணிட்டு வர்றாங்க. 4 வயசிலிருந்தே நடிக்க ஆரம்பிச்சிட்டேன். முதல்ல தயக்கமா இருந்துச்சு. அடுத்தடுத்து ஆடிஷன் போனேன். செலக்ட் ஆனேன். பென்குயின், சுல்தான், உடன் பிறப்பு, சபாபதி என்று அடுத்தடுத்து படங்களில் நடிச்சேன். இப்போது அயோத்தின்னு படம் நடிச்சிட்டு இருக்கேன்.
* விளம்பர படங்கள்தான் ஆரம்பமா...
ஆமாம். இதுவரை எத்தனையோ விளம்பரங்களில் நடித்துவிட்டேன். என் பிரெண்டின் அப்பா வர்மா சினிமா ஒளிப்பதிவாளர். அவர்தான் என்னை ஆடிஷனுக்கு போக சொன்னார். அதன்மூலம் விளம்பரங்களில் நடிக்க சான்ஸ் கிடைச்சது. அப்படியே சினிமா சான்ஸ்ம் வந்தது.
* நடிப்பு, படிப்பு தவிர...
ஷூட்டிங், ஸ்கூல் மத்தியில மியூசிக், டான்ஸ்ம் போயிட்டு இருக்கிறேன். நடிப்புக்கான ேஹமா கார்த்திக் பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வருகிறேன்.
* இன்னும் 10 ஆண்டுகளில் ஹீரோ ஆயிடுவீங்க தானே...
இப்போதே 'மாஸ்டர்' ரோலில் ஹீரோவாகதானே நடித்தேன். காலேஜ் எல்லாம் போகனும்னு ஆசை. இவ்வாறு கூறிய அத்வைத், 'ஷாட்' ரெடி அழைப்பு வர ' சீ..யு..அங்கிள்' என கேமராவை நோக்கி ஓட்டம் பிடித்தார்.
கே.ராம்குமார்