sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

'மாடுங்க நம்மளோட பிறந்த நாலு காலு அண்ணன் தம்பிண்ணே!' - மல்லுக்கட்டுகிறார் சூரி

/

'மாடுங்க நம்மளோட பிறந்த நாலு காலு அண்ணன் தம்பிண்ணே!' - மல்லுக்கட்டுகிறார் சூரி

'மாடுங்க நம்மளோட பிறந்த நாலு காலு அண்ணன் தம்பிண்ணே!' - மல்லுக்கட்டுகிறார் சூரி

'மாடுங்க நம்மளோட பிறந்த நாலு காலு அண்ணன் தம்பிண்ணே!' - மல்லுக்கட்டுகிறார் சூரி


PUBLISHED ON : ஜன 15, 2015

Google News

PUBLISHED ON : ஜன 15, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''பொங்கல்னு ஒரு பண்டிகை இல்லைன்னா இன்னிக்கு சூரி இல்ல... என்ன இப்புடி பாக்குறீங்க? ஒரு கலைஞனா, காமெடியனா, வம்பு தும்புக்காரனா என்னைய மாத்துனதே பொங்கல் கொண்டாட்டங்கள் தான். பொங்கலுக்காக நடந்த மாறுவேஷப் போட்டியில பொம்பள வேஷம் போட்டு ஆடுன ராமன் தான், இன்னிக்கு 'சூரி'யா சினிமாவுல வெதவிதமா வேஷம் போட்டுக்கிட்டு இருக்கான்,'' என பொங்கல் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் நடிகர் சூரி.

ராமன், சூரியான சுவாரஸ்யத்தை சொல்லுங்க?

மதுரை ராஜாக்கூர் நான் பொறந்த மண்ணு. பொங்கப் பண்டிகை வந்துட்டா வயதுப் பொண்ணு மாதிரி ஊரே மினுமினுப்பாயிடும். நாங்க எங்க குலசாமி சங்கையா சாமிக்கு குடும்பத்தோட பொங்கல் படைப்போம். அத்துன வீடுகள்லயும் சாணம் தெளிச்சுக் கோலம் போட்டு,

புள்ளையார் புடிச்சு, கன்னிப்பூ செருகி, மாலையும், கரும்புமா கொண்டாட்டம் இருக்கும். தொடர்ச்சியா மூணு நாளும் ரணகளம் தான். மூணாவது நாளு நைட்டு மாறு வேட போட்டி, வள்ளி திருமணம் நாடகம் நடக்கும்.

மாறுவேடப் போட்டியில் நீங்கள் பங்கேற்பீர்களா?

அப்போ எனக்கு லேடிஸ் கெட்டப்ப போட்டு விட்டு எங்க ஊரு மாறுவேட போட்டியில எறக்கி விட்டாங்க. நாங்க அண்ணன் தம்பி ஆறு பேரு. வீட்டுல மருந்துக்கூட பொண்ணு இல்ல. என்னய பொண்ணா பார்த்துட்டு அம்மா பூரிச்சு போயிட்டாங்க... அதுல கெடைச்ச மொத பரிசு தான் இன்னிக்கு கோடம்பாக்கம் வரைக்கும் கொண்டு வந்து சேத்திருக்கு.

மறக்க முடியாத பொங்கல் விழா சொல்லுங்களேன்?

ஒண்ணா, ரெண்டா அவுத்துவிட்டா வவுத்து வலிக்கு நான் பொறுப்பில்ல... பொங்கலோட சிறப்பே மூணு நாளும் நடக்கிற போட்டிகள் தான். மொத நாளு எங்கூர்ல 'ஜோக்கியம்'ங்கிற பேர்ல கபடி நடத்துவாங்க. வயசான பெரிசுங்க ஒரு பக்கம்... எளவட்ட பயலுக ஒரு பக்கம்னு தொடை தட்டி நிப்பாங்க... 'அவய்ங்ககிட்ட போயி அடி படாதிய' ன்னு ஊரே பெரியவங்களப் பாத்து எச்சரிக்கும்.

'ஹே நாங்க பாக்காத கபடியா'ன்னு பெரிசுக முறுக்கிட்டு நிக்குங்க. நாங்க கபடி பாடி போறப்ப பெரிசுகளுக்கு நேரா காலு தூக்கி ஆட மாட்டோம். விளையாட்டா இருந்தாலும் வயசுக்கு மரியாதை கொடுக்கிற வழக்கம் அது. மாமன், மச்சான், பெரியப்பன், சித்தப்பன்னு பலரும் கபடி பாடி வர்றப்ப அவங்களோட வேட்டிய அவுத்துவுட்டு ரகளை பண்ணுவோம். ஊரே கொல்லுன்னு சிரிக்கும். ஸ்லோ ரேஸ், பன்னு திங்கிற போட்டி, பானை உடைத்தல்னு விதவிதமா போட்டி நடக்கும். பன்னு திங்க முடியாம விக்கிகிட்டு தண்ணி தண்ணின்னு அலறுவானுங்க...வெளையாட்டு ஒரு பக்கம்னா நாடகம், திரை கட்டி சினிமா ஓட்டுறதுன்னு இன்னொரு பக்கம் கொண்டாட்டமும் தூள் பறக்கும்.

மாடு பிடித்ததுண்டா?

உண்டாவா? எங்க வீட்டுல அப்பவே அறுவது எழுவது மாடுக இருக்கும்ணே... பொங்கலோட ஹைலைட்டே மாடுபுடிதான்... மாடி மேலயும் மரத்து மேலயும் ஏறி ஊரே வேடிக்கை பார்க்க, நாங்க பெரிய சூரய்ங்க மாதிரி களத்துல நிப்போம். 'ஏம்பா எளந்தாரிப்

பயலுகளா... குத்துற மாடு வர்றப்ப குறுக்கால போயிடாதீக. படாத எடத்துல பட்டுறப் போவுது'ன்னு பெரிசுக மைக்க புடிச்சு கிண்டல் பண்ணுங்க... நாங்க ஒதுங்கி நின்னாலும், எவனாச்சும் சண்டியனா காளைய அடக்குறப்ப, மொத்தமா அவன் மேல விழுந்து இருபது

முப்பது பேரு சேந்து காளைய அடக்குன மாதிரி கணக்கு காட்டிருவோம். முதல்ல காளைய அடக்குனவன் மூச்சுமுட்டி எந்திரிச்சு வரதுக்குள்ள எங்காளுக, 'நாந்தான் அடக்குனேன்' சொல்லி பாத்திரம் பண்டத்தை பரிசா வாங்கிட்டு போயிருப்பானுங்க.






      Dinamalar
      Follow us