sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

என் குரல் கடவுள் கொடுத்த வரம்! - உருகும் பாடகி பி.சுசீலா

/

என் குரல் கடவுள் கொடுத்த வரம்! - உருகும் பாடகி பி.சுசீலா

என் குரல் கடவுள் கொடுத்த வரம்! - உருகும் பாடகி பி.சுசீலா

என் குரல் கடவுள் கொடுத்த வரம்! - உருகும் பாடகி பி.சுசீலா


PUBLISHED ON : ஜன 15, 2020

Google News

PUBLISHED ON : ஜன 15, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருகின்றாரோ...', 'அமுதை பொழியும் நிலவே நீ அருகில் வராதது ஏனோ', 'லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் தக்கதிமிதா', 'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து', 'கண்ணன் வருவான் கதை சொல்லுவான்' 'அமைதியான நதியினிலே ஓடம்', 'ஆசையில பாத்தி கட்டி', 'கண்ணுக்கு மை அழகு...' என இசையில் கசிந்துருகி நம் மனதை கொள்ளை கொண்டு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸில் இடம் பிடித்த பின்னணி பாடகி பி.சுசீலா நமக்காக பேசுகிறார்...

* நீங்கள் ரொம்ப நேரம் எடுத்துட்டு பாடுன பாடல் பதிவு ஞாபகம் இருக்கா?

பகலில் ஆரம்பித்து அடுத்த நாள் காலை 6:00 மணி வரை தொடர்ந்து பாடல்கள் பாடியிருக்கிறேன். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் நெப்டியூன் ஸ்டுடியோவில் ஒரு பாட்டும், வாசன் ஸ்டூடியோவில் ஒரு பாட்டும் ரெக்கார்ட் பண்ண ஞாபகம் இருக்கு.

* நடு இரவில் பல நேரங்கள் ரெக்கார்டிங் செய்தது உண்டா ?

எனக்கு சின்ன வயசுலயே கல்யாணம் ஆயிடுச்சு. என் கணவர் தான் கூடவே வருவார். இரவு 1:00 மணிக்கு கூட சாரதா ஸ்டூடியோவில் பாடியிருக்கேன்.

* எப்பவாவது உங்கள மாற்றிக்கொள்ள நினைச்சு இருக்கீங்களா?

எப்பவுமே நினைத்தது இல்லை. 'நிறைய பாடி இருக்கீங்க, கின்னஸ் ரெக்கார்ட் எல்லாம் வாங்கி இருக்கீங்க. ரொம்ப எளிமையா இருக்கீங்களே'ன்னு சிலர் கேட்பாங்க. ஆனால், நான் எப்பவும் எளிமையாக இருப்பதை தான் பெருமையாக நினைக்கிறேன்

* எந்த நடிகைகளுக்கு நீங்க நிறைய பாட்டு பாடி இருக்கீங்க?

ஜெயலலிதா, வாணிஸ்ரீ, சரோஜா தேவி, தேவிகா, ஸ்ரீதேவி... இப்படி நிறைய ஹீரோயின்களுக்கு பாடி இருக்கேன்.

* சில பாடல்களில் நடிகைகளுக்கு குரலை மாற்றி பாடியது ?

சரோஜாதேவிக்கு ஒரு பாட்டு பாடினால் அது சரோஜா தேவியாக நினைத்து பார்ப்பாங்க. அவங்களால் எனக்கு நிறைய பெயர் கிடைச்சது. 'கண்ணா கருமை நிற கண்ணா' பாட்டு விஜயகுமாரிக்கு பாடினேன். அதில் விக்கல் சவுண்ட் எல்லாம் கொடுத்து பாடினேன்.

* தெலுங்கிலிருந்து வந்து எப்படி தமிழ் கத்துக்கிட்டீங்க?

மூன்று வருஷமாக ஏ.வி.எம்., ஸ்டூடியோவில் தான் பாடினேன். அப்போ எனக்கு தமிழாசிரியர் வைச்சு தமிழ் பேச சொல்லி கொடுத்தாங்க. அதனால் தான் இப்போ நான் இவ்வளவு நல்லா தமிழில் பாட முடிஞ்சது.

* உங்களை யாராவது நடிக்க கூப்பிட்டாங்களா?

நிறைய வாய்ப்பு வந்தது. ஆனால் நான் நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன். 'மனதை திருடிவிட்டாய்' படத்தில் ஒரு காட்சியில் வந்தேன்.

* குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு எத்தனை பாடல்கள் பாடுவீங்க ?

'ரொம்ப வருஷத்துக்கு முன் நானும் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் அமெரிக்கா கச்சேரியில் காலையில் ஆரம்பித்து விடிய விடிய 23 பாடல்கள் பாடினோம்.

* யாருடன் சேர்ந்து நிறைய பாடல்கள் பாடினீங்க?

டி.எம்.சவுந்தரராஜனுடன் 1000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கேன். 'சந்திரகாரம்' படத்தில் கோரஸ் பாட வச்சாங்க. வைதேகினு ஒரு பாடகி கூட நிறைய பாடல்கள்

பாடி இருக்கேன்.

* அந்தக்காலத்தில் ஒரு பாட்டுக்கு எவ்வளவு சம்பளம்?

350 ரூபாய் பாடி முடித்ததும் தான் கொடுப்பாங்க. சில பாடல்கள் பாடுவதற்கு பணம் சரியா கொடுக்க மாட்டாங்க. சில நேரம் பணத்தை எண்ணாமல் வாங்கிட்டுவந்து விடுவேன்.

* உங்கள் குரலை பாதுகாக்க ஏதாவது மருந்துகள் ?

அப்படி எதுவும் எடுத்து கொண்டதில்லை. என் குரல் கடவுள் கொடுத்த வரப்பிரசாதமாக நினைக்கிறேன்.

* நடிகைகளில் உங்களுக்கு நெருக்கமான நட்பு இருந்ததா?

சாவித்திரி, சரோஜாதேவி நல்லா பேசுவாங்க. இப்படி நடிகைகள் கொஞ்சம் பேரோட நல்ல பழக்கம் இருந்துச்சு.

* அதிக வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர் ?

விஸ்வநாதன் ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் நிறைய பாடல்கள் பாட வாய்ப்பு கொடுத்தார்கள்.

* அரசியல் பக்கம் உங்களை யாரும் கூப்பிடவில்லையா ?

சுதந்திரம் வாங்கிய பின் நான் ஆந்திராவில் இருந்த போது காந்தி வந்திருக்கிறார். அவரை பார்த்த ஞாபகம் இருக்கு. ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும் நிறைய கட்சிக்காரர்கள் என்னை கட்சி பாட்டு பாட கேட்பார்கள். கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு பாடி இருக்கேன். ஆனால் எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது.

நீங்கள் கலந்து கொண்டதில் மறக்க முடியாத நிகழ்ச்சி?

1960ல் சிவாஜியின் நாடக குழுவுடன் டில்லியில் இருந்து ராணுவ விமானத்தில் ஜலந்தர் போனோம். போர் வீரர்களுக்காக கலைநிகழ்ச்சி நடத்த ஜெயலலிதா, பத்மினி, சாவித்திரி, ஜெமினி கணேசன், ராஜ சுலோச்சனா எல்லாரும் போனோம். நிகழ்ச்சியில முதல் பாட்டு 'சரவண பொய்கையில் நீராடி' பாடினேன். அத்தனை ராணுவ வீரர்களும் கைதட்டினாங்க. அடுத்த பாட்டுக்கு ஜெயலலிதா டான்ஸ் ஆடினாங்க.

கவி






      Dinamalar
      Follow us