sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

இளைஞர்களின் 'நம்ம சந்தை'

/

இளைஞர்களின் 'நம்ம சந்தை'

இளைஞர்களின் 'நம்ம சந்தை'

இளைஞர்களின் 'நம்ம சந்தை'


PUBLISHED ON : ஜன 14, 2018

Google News

PUBLISHED ON : ஜன 14, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிராமங்களில் பொங்கலுக்காக கூடும் சந்தைகளில் கரும்பு, மஞ்சள், பானைகள், கால்நடைகளுக்கு தேவையான பொருட்கள் விற்பனையில் களைகட்டும்.

அதே போன்று பட்டதாரி இளைஞர்கள் ஒன்றிணைந்து தமிழகத்தில் 'நம்ம சந்தை' என்ற பெயரில் சந்தை நடத்தி, அங்கு உடலுக்கு பாதிப்பில்லாத பனை, தென்னை பாகில் தயாரித்த கருப்பட்டியால் இனிப்பு, காரம் உள்ளிட்ட உணவு பொருட்களை தயாரித்து விற்று வருகின்றனர்.

சென்னை உட்பட பல இடங்களில் சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றுவோர் உட்பட 40 பட்டதாரிகள் இணைந்து, 'பதம் குடும்பம்' என்ற பெயரில் இயங்குகின்றனர். இவர்கள், இயற்கையாக கிடைக்கும் கருப்பட்டியில் கோதுமை மாவு ஜிலேபி, லட்டு, பூந்தி, தினை, சிறுதானியம் மூலம் மாவு உருண்டை, முறுக்கு, அதிரசம் தயாரித்து சந்தையில் விற்கின்றனர்.

இந்த ஆண்டின் பொங்கல் சிறப்பு உணவாக கருப்பட்டியால் செய்த எள் உருண்டை, சீடை, காரம், இனிப்பு சேவுகள் என இயற்கையாக தயாரித்து 'நம்ம சந்தையை' அசத்தி வருகின்றனர். இக்குடும்பத்தினர் ஒவ்வொரு மாதமும் 2 வது ஞாயிற்றுக்கிழமை மாவட்டந்தோறும் சென்று 'நம்ம சந்தையை' ஏற்படுத்தி கருப்பட்டியால் ஆன உணவு பொருளை விற்று வருகின்றனர். இது தவிர, தினை, குதிரைவாலி, சாமை, கேழ்வரகு, வரகு உள்ளிட்ட தானியங்களாலும் உணவுகளை தயாரித்து, கிராமம் போன்று சந்தையை ஏற்படுத்தி, விற்கின்றனர்.

முற்றிலும் இயற்கை விவசாயம் மூலம் தயாரான தானியங்களை வைத்துதான் உணவு பொருட்களை தயாரிக்கின்றனர்.

இது குறித்து 'பதம் குடும்ப' உறுப்பினர் சி.தாஸ் கூறியதாவது: எங்கள் நோக்கம் வியாபாரம் அல்ல. இயற்கையாக, உடலுக்கு பாதிப்பில்லாத கருப்பட்டி மற்றும் இயற்கை விவசாயம் மூலம் பெற்ற அரிசி, பருப்பு, காய்கறி, கீரைகள் மற்றும் நாட்டுகோழி முட்டையை மக்களுக்கு வழங்குவது தான். கிராமத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி எனக்கூறியவர் காந்தியடிகள். அவர் நினைவாக 2017 அக்.2ம் தேதி காந்திஜெயந்தி அன்று, இக்குடும்பத்தை ஏற்படுத்தினோம். அந்த மாதத்தில் மட்டுமே சென்னை, திருப்பூர் உட்பட 7 இடங்களில் 'நம்ம சந்தை' நடத்தியுள்ளோம்.

மதுரையை மையமாக வைத்து நடத்த திட்டமிட்டுள்ளோம். இது தவிர கல்லுாரி, முக்கிய அலுவலக விழாக்களில் பனை, தென்னை ஓலையால் தயாரித்த அலங்கார பெட்டியில் கருப்பட்டியால் செய்த உணவு பண்டங்களை பரிசு பொருளாக விற்கிறோம், என்றார்.

தொடர்புக்கு: 98841 66631






      Dinamalar
      Follow us