/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
தை பிறந்தா தாலி கட்ட வழி பிறக்கும்
/
தை பிறந்தா தாலி கட்ட வழி பிறக்கும்
PUBLISHED ON : ஜன 15, 2012

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சீதைக்கும் ராமனுக்கும் திருக்கல்யாணம் நடத்த மிகச் சிறந்த மாதம் தை. அவ்வாறு நடத்தும் போது சீதாராம கல்யாண பாடலைப் பாட வேண்டும். ராமன் பரமாத்மா (கடவுள்), சீதை பிரகிருதி (உலக ஜீவன்). சீதாதேவி ராமனை விட்டு ராட்சஷ சக்தியால் பிரிந்தாள். பதிபக்தியால் மீண்டும் அடைந்தாள். அதுபோல், உலக உயிர்களும் ராட்சஷ குணங்களுடன் கடவுளை நினையாமல் உள்ளனர். இந்தக் குணங்களைக் களைந்தால், உலகிலுள்ள எல்லா ஜீவன்களும் கடவுளை அடையும் என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் சீதாராம கல்யாணம் அமைந்துள்ளது. தை மாதத்தில் ஒரு நல்லநாளை தேர்ந் தெடுத்து சீதா கல்யாணம் நடத்தினால், நம் வீட்டுக் கன்னியரைத் தேடியும் ஒரு ரகுராமன் வருவான் மணமாலையுடன்!

