sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

வைகை ஆற்று நாகரிகம்..!

/

வைகை ஆற்று நாகரிகம்..!

வைகை ஆற்று நாகரிகம்..!

வைகை ஆற்று நாகரிகம்..!


PUBLISHED ON : ஜன 14, 2017

Google News

PUBLISHED ON : ஜன 14, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்னோர் வாழ்வை செவிவழிச் செய்தியாய் கேட்பதை விட அவர்கள் பயன்படுத்திய பொருட்களை சாட்சியாய் வைத்து பேசும் போது அந்த வாழ்வின் சுவாரஸ்யங்கள் மனதில் ஆழமாய் பதியும். நம் காலத்து பொருட்களின் முக்கியத்துவமும் புரியும்.

மதுரையை தாலாட்டிச் செல்லும் வைகை ஆற்று நாகரிகம், சமீபத்தில் உலக நாகரிகங்களுக்கு இணையாக பேசப்பட்டது.

கீழடியில் கிடைத்த அரிதான பொருட்கள் இதனை உறுதிசெய்தது. இதன் அருகே உள்ள மணலூரில், பழம்பெரும் பொருட்கள் அடங்கிய ஒரு அருங்காட்சியகம் பழங்கால வரலாறுகளை பேசிவருகிறது.

அக்கால பொருட்களின் முக்கியத்துவம் தெரியாமல் பரணிலும், கொல்லைப்புறத்திலும், குப்பைத் தொட்டியில் கொட்டும் பழக்கத்தால் நாம் இழக்கும் பெருமைகள் பல. இதை வெளிக் கொண்டு வரும் வகையில், தமிழ் மரபு அறக் கட்டளை எடுத்து வரும் முயற்சிகளுக்கு வரவேற்பு கிடைத்து

வருகிறது.

சிவகங்கை மாவட்டம் மணலூரில் மானுடவியல் அருங்காட்சியகம் அமைத்து பழங்கால பொருட்களுக்கும் புதிய அத்தியாயம் படைக்க வைக்கின்றனர் அழகுமலர் மெட்ரிக் பள்ளி தாளாளர்கள் மலைச் சாமியும் யோகலட்சுமியும்.

''கீழடி, கொந்தகை, கழுகர்கடை, அல்லிநகரம், காஞ்சிரம்குளம், மாங்குடி, மேலவெள்ளளூர் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வரும் பழங்கால பொருட்களை இந்த அருங்காட்சியகத்தில் சேர்த்துள்ளனர். மரஉரல், சுரைக்கூடு, உப்பு மரவை, காண்டா விளக்கு, ஓலைச்சுவடிகள், ஓலைகிழிப்பான், கத்தி, ஈட்டி, வாள், நாணயங்கள் அஞ்சறைப்பெட்டி இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஓராண்டு சேமிப்பு தான் இவை. இந்த பகுதியில் உள்ள கிராமங்களில் ஒவ்வொரு வீடுகளிலும் இது போல் பல பொருட்கள் உள்ளன.அவை பாழ்பட்டு போகாமல் இந்த அருங்காட்சியகத்தில் சேர்த்து பாதுகாக்க வலியுறுத்தி வருகிறோம். இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளன. அடுத்த ஆண்டிற்குள் 500 பொருட்களாவது சேர்க்க வேண்டும் என திட்டமிட்டுள்ளோம்,'' என்கிறார்கள் இவர்கள்.

இங்கு கிடைத்த பொருட்கள் மூலம் பழங்கால வரலாறுகள் நினைவூட்டப்படுகின்றன, மறு ஆய்வு செய்யப்படுகிறது, எல்லாவற்றையும் விட தலைமுறை ரகசியங்களும் இதனோடு வெளிச்சத்திற்கு வருகின்றன. வாழ்த்த laugmalar1986@gmail.com

-டபிள்யு.எட்வின்






      Dinamalar
      Follow us