தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இரக்கமுள்ள யானை!

இரக்கமுள்ள யானை!

இரக்கமுள்ள யானை!


PUBLISHED ON : ஜூலை 02, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 02, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தரையில் வாழும் விலங்குகளில் மிகப் பெரிய மூளையுள்ளது யானை. நினைவாற்றல் மிக்கது. மனிதர்களுக்கு அடுத்தபடியாக அறிவில் சிறந்தவையாக கருதப்படுகிறது. இரக்க உணர்ச்சி மிக்க இந்த மிருகம் பற்றிய அரிய தகவல்களை பார்ப்போம்.

யானைகள்...

* வினாடிக்கு, மூன்று லிட்டர் தண்ணீரை உறிஞ்சும்

* ஒரு நாளைக்கு, 210 லிட்டர் தண்ணீர் குடிக்கும்

* தும்பிக்கை விரிந்து சுருங்கும் அமைப்பு உடையது

* கர்ப்ப காலம், 22 மாதங்கள்

* பெரும்பாலும் ஒரே குட்டி ஈனும்

* கண் பார்வை, 25 அடி துாரம் மட்டுமே தெரியும்

* மூன்று மணி நேரம் மட்டுமே துாங்கும்

* உணவை தேடி ஒரு நாளில், 16 மணி நேரத்தை செலவிடும். இதற்காக, 35 கி.மீ., நடக்கும்

* தோல் மென்மையைக் காக்க, மண்ணை வாரி உடல் மீது போட்டுக் கொள்ளும்

* முன்னங்காலில், ஐந்து நகமும், பின்னங்காலில், நான்கு நகமும் இருக்கும்

* சிங்கம் தான், இதன் எதிரி. ஏழு பெண் சிங்கங்கள் சேர்ந்தால், ஒரு யானையை கொன்று விடும். உலகில், 50 ஆயிரம் யானைகள் தான், உள்ளதாக ஓர் ஆய்வு கூறுகிறது.

- செல்வ கணபதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us