PUBLISHED ON : ஜூலை 22, 2011

ஸ்டார்பிஷ் என்பது நட்சத்திர வடிவில் இருக்கும். ஆனால், இது மீனல்ல. இது முது கெலும்பு இல்லாத உயிரின வகையை சேர்ந்தது. ஸ்டார்பிஷ்ஷிற்கு முதுகுத்தண்டு போன்ற பகுதி உண்டு. இதனால் நீந்த முடியாது. ஊர்ந்து செல்ல முடியும். இந்த உயிரினத்தால் தண்ணீரில் இருக்கும் தாவரங்களில் ஏற முடியும். பாறைகளில் ஊர்ந்து இறங்க முடியும். மிகவும் ஆழமான, இருளான கடலின் பகுதிகளில் இந்த ஸ்டார் பிஷ் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும்.
இந்த ஸ்டார் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு அளந்தால் 20 செ.மீட்டருக்கு சற்று குறைவாக இருக்கும். ஸ்டார் பிஷ்ஷின் சில வகைகள் இதுபோல அளந்தால், அகலத்தில் ஒரு காரின் அகலம் இருக்கும். இந்த ஸ்டாருக்கு கண்கள் கிடையாது. ஆனால், இவைகளில் நீண்ட கைகள் போன்ற பகுதிகளில் பார்வைக்கான பகுதிகள் இருக்கின்றன. இந்த பிரத்யேக பார்வை பகுதிகளால், அதாவது செல்களால் வடிவங்களை பார்க்க முடியாது. ஆனால், பார்க்கப்படும் பொருள் வெளிச்சமாய் பார்வைக்கு புலப்படும் வகையில் உள்ளதா இருளாய் பார்வைக்கு புலப்படாத வகையில் உள்ளதா என சொல்ல முடியும்.
இந்த ஸ்டாரின் கைகள் எப்படி வேண்டுமானாலும் மடக்க கூடியவை. இதற்கு காரணம், இவைகளின் எலும்புகூடு வடிவம் மிக நுண்ணிய தட்டுகளால் ஆனது. இந்த தட்டு அமைப்பினால் ஸ்டாரால் எந்த திசையிலும் நகர முடியும். ஸ்டார் தன் பாதத்தால் சுவாசிக்கிறது. மற்றும் அதன் உடம்பு முழுவதும் உள்ள சிறிய குழாய்களாலும் சுவாசிக்கிறது.
பெரும்பான்மையான ஸ்டார்பிஷ்களுக்கு ஐந்து கைகள்தான். இந்த ஒவ்வொரு காலிலும் உறிஞ்சும் அமைப்பு உண்டு. காலின் முனையில் உள்ள இந்த அமைப்பால் உணவை பிடிக்கும்; உறியும், பாறையை பிடித்து கொள்ளும்.
ரசித்து உண்பேன்!
ஸ்டார்பிஷ்வின் உணவு சிப்பி மீன், ஒரு சிப்பி மீனை-கண்ட பின், ஸ்டார் பிஷ் அதன் ஓட்டை தன் நுண்ணிய ட்யூப் போன்ற பாதத்தால் பிய்த்து எடுக்கும். பின் சதைப்பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து தின்று முடிக்கும்.
சில ஸ்டார்பிஷ்களுக்கு ஐந்து கைகளுக்கு மேல் இருக்கும். இதோ இந்த நட்சத்திர மீனிற்கு எத்தனை கைகள் உள்ளன!
கடலின் முள்ளம்பன்றி!
கடல் அர்ச்சினும் நம்ம ஸ்டார்பிஷ்ஷூம் நெருங்கின பாசக்கார பசங்க. இந்த அர்ச்சினின் நீண்ட முட்கள் போன்ற சில சமயம் விஷமிக்கவை. இவை, பார்க்க முள்ளம் பன்றி போல இருக்கும்.
நட்சத்திரத்திற்கு பின்னால்!
ஒரு ஸ்டார்பிஷ் அல்லது கடல் அர்ச்சின் எப்படி இருக்கிறது என்பதை எளிதில் சொல்லலாம். இவைகளின் வாய் எப்போதும் கீழேதான் இருக்கும். இந்த ஸ்டார்பிஷ் தன் நிலையில் இருந்து மேல்-கீழ், கீழ்-மேலாக பிரண்டால் சரியானபடி தன் நிலைப்படுத்த தன் கைகளை பயன்படுத்தும்.
ஸ்டாரின் வகைகள்!
ஸ்டார்பிஷ் வகைகள் 6,000 விதங்களில் உள்ளன. ஆனால், இவைகள் எல்லாமே ஐந்து பிரதான பிரிவுகளில் அடங்கிவிடும்.
ஒரு கை போதும்!
இந்த ஸ்டார் புதிதாக இருகைகளை வளர்க்கிறது. இதன் பழைய கைகள் ஒரு மீனால் கடிக்கப்பட்டு விட்டது. மத்திய மண்டலமும், அதோடு ஒரேயொரு கையும் மட்டுமே இருந்தால் போதும், இந்த ஸ்டார் உயிர் வாழும்.
