
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துறவி நண்டின் முன்பகுதி கடினமான நண்டு ஷெல்லை உடையது. அதற்கு இடுக்கியும் உண்டு. மற்றும் இரு ஜோடி பின்னங்கால்களும் உள்ளன. அதன் உடலின் பின்பகுதி மிருதுவாகவும், வளைத்தும் காணப்படும். இது ஏனென்றால், காலியாக உள்ள நத்தையின் ஓட்டினுள் சென்று தங்குவதற்கு வசதியாக இருக்கும். துறவி நண்டு பெரிதாகும் போது, தன் ஓட்டினை மாற்றியாக வேண்டும். அது பெரிய ஓட்டினை அடையும்போது பின்நோக்கி சென்றுதான் அடையும்.

