தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஒரு கவிஞனின் கதை!

ஒரு கவிஞனின் கதை!

ஒரு கவிஞனின் கதை!


PUBLISHED ON : ஜன 31, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 31, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கட்டுமஸ்தான அந்த மனிதர் மருத்துவமனையில் நோயாளிகளிடம் இன்முகத்துடன் நலன் விசாரிப்பார். அவர் முகத்தில் கனமான தாடி அடர்ந்து வளர்ந்திருந்தது. அது ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை. காயமடைந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் வீரர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, கனிவோடும், கருணை முகத்துடனும் உரையாடினார் அவர்.

அப்போது, அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. அந்த மருத்துவமனை இருந்தது வாஷிங்க்டனில். நோயாளிகளிடம் அன்போடு பேசிய அவர் ஒரு கவி. வால்ட் விட்மன் என்று கேள்விப் பட்டிருப்பீர்களே, அந்த புகழ் பெற்ற கவிதான் அவர். அவருடைய சகோதரன் ஜார்ஜ் காயமடைந்து அங்கு சேர்க்கப் பட்டிருந்தான். அவனைக் காணச் சென்ற விட்மன், அங்கு இருந்த காயமுற்ற மற்ற நோயாளிகளின் நிலையைக் கண்டு மனம் இளகி, உள்நாட்டுப் போர் முடியும் வரை அங்கேயே தங்கி ஊனமுற்ற, காயமுற்ற வீரர்களுக்கு உற்சாகமூட்டி வந்தார்.

வால்ட் விட்மன் மிகவும் இளகிய மனம் கொண்டவர். எல்லாருக்கும் நண்பர். சில போது, 'பஸ் கண்டக்டர்கள் ஓய்வில்லாமல் உழைக்கிறார்களே. அவர்களுக்கு முழு நாள் ஓய்வு வேண்டும்' என்று கருதி, அவர்கள் பணியைத் தான் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

ஒரு சமயம் பஸ் டிரைவர் நோய் வாய்ப்பட, அவருடைய பணியை ஏழு மாதங்களுக்குத் தான் ஏற்று, அவர் பணி நீக்கம் செய்யப்படாமல் உதவி இருக்கிறார். அப்போதெல்லாம் தொழிலாளர் நலத்திட்டங்கள் கிடையாது.

விட்மன் யாருக்கும் உதவக் கூடியவர். தன்னைத் தவிர! பள்ளியில் பயிலும் போது ஆசிரியர் இவரைச் சோம்பேறி என்றும், எதையும் கற்க அருகதை அற்றவர் என்றும் ஏசினார். விட்மனின் தந்தை அவர் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி, ஒரு அச்சாபீஸில் வேலைக்கு அமர்த்தினார். அங்கும் அவருக்கு கெட்ட பெயர்தான். அச்சடிப்பதில் ஆர்வம் காட்டாமல், தச்சு வேலை செய்தார். பள்ளி வாத்தியாராகப் பணியாற்றினார். பிறகு எழுத்தாளராக மாறினார்.

1841ல் விட்மன் தன் முதல் புத்தகத்தை வெளியிட்ட போது, அவருக்கு வயது 22. அவர் நூலை இலக்கியவாதிகள் மூன்றாம் தரம் என்று மதிப்பிட்டனர். ஆனால், அதுவோ மிகப்பிரபலமாகி வெற்றி கண்டது. அந்தப் புத்தகத்தை எழுதியதற்குப் பிராயச்சித்தம் போல கவிதை எழுதுவதில் முனைப்போடு ஈடுபடலானார். ஆனால், கவிதை எழுதி வாழ்க்கை நடத்த முடியவில்லை. ஆகவே, விட்மன் அமெரிக்க உள்ளூர் பத்திரிகை ஒன்றில் சேர்ந்து பணியாற்றலானார். அந்தப் பத்திரிகையில், 'உங்கள் அடுத்த வீட்டுக்காரரை நேசியுங்கள். மனிதர்கள் அனைவரும் சமமே, இம்மாதிரியான போதனைகளை எழுதினார். அதன் பலன் பத்தரிகையின் முதலாளி அவரை வேறு இடத்தில் வேலை தேடிக் கொள்ளும்படி கூறிவிட்டார்.

சமத்துவம் சகோதரத்துவம் இவற்றில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் விட்மன். இவருடைய புகழ்பெற்ற நூலான புல்லின் இலைகள் என்னும் கவிதை நூலில் இதை அழுத்தமாகக் கூறியிருக்கிறார். கவிதை வரிகள் கட்டுக்கோப்பின்றி இருக்கும். அதில் சந்தமிருக்காது. ஆனால், மிகச் சிறந்ததோர் தனித்தன்மை அவற்றில் பளிச்சிடும்.

விட்மனின் கவிதைகளைப் படித்துப் புரிந்து கொள்ளுவது எளிதல்ல. அமெரிக்க இலக்கியத்தில் விட்மன் ஒரு ஒளி விளக்கு முன்னோடி. அவருக்குப் பின் வந்த பல பிரபல இலக்கிய கர்த்தாக்களும் விட்மனின் பாணியை பின்பற்றினர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us