தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஆல் இந்திய ரேடியோ!

ஆல் இந்திய ரேடியோ!

ஆல் இந்திய ரேடியோ!


PUBLISHED ON : அக் 23, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 23, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கன்னியாகுமரி மாவட்டம், சொத்தவிளை அரசு நடுநிலைப்பள்ளியில், 1992ல், 8ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்!

அறிவியல் ஆசிரியர் ரத்தினம், மின்சாதன பொருட்களின் செயல்மாதிரியை அட்டையில் செய்துவர கூறினார். அத்துடன், 'மிக சிறந்த, செயல் மாதிரிக்கு பரிசு வழங்கப்படும்...' என்று அறிவித்தார்.

மின்விசிறி, கிரைண்டர், மிக்சி என, மின் சாதன பொருட்களின் மாதிரியை செய்து எடுத்து வந்தனர் மாணவ, மாணவியர். தெர்மா கூல் அட்டையில், அழகிய வானொலி பெட்டி மாதிரியை உருவாக்கி எடுத்து சென்றேன்.

என்னையும், வானொலி பெட்டி மாதிரியையும் மாறி மாறி பார்த்த ஆசிரியர், 'மக்கா... இது ரேடியோவா... இல்ல சவப்பெட்டியா...' என கேட்டார். கற்பனைகள் உதிர மனம் தளர்ந்து அழுதேன்.

கிண்டல் செய்தனர் சக மாணவர்கள். அவர்களுக்கு மத்தியில், 'உனக்கு முதல் பரிசு வாங்கி தருவது என் வேலை...' என தேற்றிய நண்பன் ராஜகுமாரன், 'வானொலி பெட்டி மாதிரியை ஒப்படைக்கும் போது, அதை, 'ஆன்' செய்வது போல் பாவனை செய்; மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்...' என்றான்.

வானொலி மாதிரியை ஒப்படைத்த போது பட்டனை, 'ஆன்' செய்வது போல் நடித்தேன். மறுகணம், 'ஆல் இந்திய ரேடியோ... செய்திகள் வாசிப்பது...' என குரல் கொடுத்தான் நண்பன்.

அனைவரும் ஒரு கணம் அதிர்ந்து போயினர்; பின், கைதட்டி ஆரவாரம் செய்தனர். முதல் பரிசு எனக்கே கிடைத்தது. உதவும் நோக்கில் குரல் தந்த நண்பனை எண்ணி பெருமிதம் கொண்டேன்.

தற்போது என் வயது, 42; உண்மை நட்பிற்கு பிரிவு என்பதே இல்லை என்பதை இன்றும் உணர்கிறேன். அந்த நட்பு தொடர்கிறது.

- மகேஷ் அப்பாசுவாமி, நாகர்கோவில்.

தொடர்புக்கு: 94870 56476


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us