PUBLISHED ON : அக் 05, 2012

சிலரது வாழ்க்கையில் ஏற்படும் சில சம்பவங்கள் சில பேருடன் ஒத்துப்போவது ஆச்சரியமான விஷயம். அப்படி ஒத்துப்போன இருவரை பற்றி பார்க்கலாமா குட்டீஸ்!
அவர்கள் வேறு யாருமல்ல பட்டூஸ் அமெரிக்க அதிபர்களாக இருந்து மக்கள் மத்தியில் புகழ்பெற்ற ஆபிரகாம் லிங்கன் மற்றும் ஜான் கென்னடிதான். அவர்கள் வாழ்க்கையில் ஒத்துப்போன சுவாரஸ்யமான சம்பவங்களை பாருங்களேன். அதுவும் நூற்றாண்டிற்கு பின்பு பிறந்த மனிதரோடு ஒத்துப்போவது மிகப்பெரிய ஆச்சரியம்!
* ஆபிரகாம்லிங்கன் காங்கிரசில் தேர்வானது 1846ல். கென்னடி காங்கிரசில் தேர்வானது 1946ல்.
* லிங்கன் 1860ல் அதிபரானார், கென்னடி 1960ல் அதிபரானார்.
* வெள்ளிக்கிழமைதான் இருவருமே சுடப்பட்டனர். அதுவும் தலையில் குண்டு பாய்ந்துதான் இறந்தனர்.
* லிங்கனின் உதவியாளர் பெயர் கென்னடி. கென்னடியின் உதவியாளர் பெயர் லிங்கன்.
* அந்நாட்டின் தெற்கு பகுதியை சேர்ந்தவர்கள் தான் அவர்கள் இருவரையுமே கொலை செய்தனர். இவர்களுக்கு பின்பு ஆட்சிக்கு
வந்தவர்களும் அதே தெற்கு பகுதியை சேர்ந்தவர்கள்தான்.
* லிங்கனுக்கு பிறகு அதிபரான ஆண்ட்ரூ ஜான்சன் 1808ல் பிறந்தார். கென்னடிக்கு பிறகு அதிபரான லிண்டன் ஜான்சன் 1908ல் பிறந்தார்.
* ஆபிரகாம்லிங்கனை சுட்டு கொன்ற ஜான் வில்கிஸ்பூத் 1839ம் ஆண்டு பிறந்தவன். கென்னடியை சுட்டு கொன்ற லீ ஹார்லி
ஆஸ்வால்ட் 1939ல் பிறந்தவன்.
* பூத், லிங்கனை ஒரு தியேட்டரில் பார்த்து சுட்டு, பின் ஒரு சேமிப்பு கிடங்கில் சென்று ஒளிந்து கொண்டான். கென்னடியை ஒரு சேமிப்பு கிடங்கின் முன்பு சுட்டுவிட்டு, தியேட்டரில் சென்று ஒளிந்து கொண்டான். லீ ஹார்லி ஆஸ்வால்ட்
* இரண்டு கொலையாளிகளுமே விசாரணைக்கு முன்பே கொல்லப்பட்டனர்.
என்னப் பொருத்தம்!
