தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு! - கோழி புராணம்!

அதிமேதாவி அங்குராசு! - கோழி புராணம்!

அதிமேதாவி அங்குராசு! - கோழி புராணம்!


PUBLISHED ON : செப் 10, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய நிலப்பரப்பில் ஏராளமான கோழி இனங்கள் உள்ளன. கொண்டை, இறகின் நிறம், உருவ அமைப்பைக் கொண்டு அவற்றை பிரித்து அறியலாம்.

தலையின் மேல் பகுதியில் உள்ள சதை கொண்டை. அதன் அளவு, இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சியைப் பொறுத்து அமையும். இனத்துக்கு ஏற்ப கொண்டை அமைப்பு மாறுபடும். சில இனக் கோழிகள் மரபு வழியாக மிகவும் தனித்தன்மையுடன் காட்சி தரும். இந்தியாவில் உள்ள சில கோழியினங்கள் பற்றி பார்ப்போம்...

அசீல்:

உண்மை அல்லது துாய்மை என்பதே இதன் பொருள். இந்தியாவின் பெருமை மிக்க பெரிய இனம். ஆந்திரா மற்றும் தமிழகத்தின் கொங்கு மண்டலத்தை தாயகமாக கொண்டது. வலிமையான உடல் அமைப்புள்ளது. ஆக்ரோஷமாக சண்டையிடும். இது அழகிய கொண்டை அமைப்பு, சிவப்பு நிற தாடி மற்றும் காது மடல்களை கொண்டிருக்கும். இந்த இனத்தில் பல வகை உண்டு. அவற்றில், 'பீலா' என்பது தங்கத்தில் அடர் சிவப்பு வண்ணம் கலந்தது போல் தோன்றும். யாகப் என்பது கருப்பும், சிவப்பும் கலந்து காணப்படும். நியூரி என்ற கோழி வெள்ளை நிறத்தில் இருக்கும். காகர் கருப்பாகவும், சிட்டா, கருப்பில் வெள்ளை நிறப் புள்ளிகளுடனும் காணப்படும். ரசிக்கத் தக்க வண்ணங்களுடன் இந்த வகை கோழிகள் மிளிரும்.

சிட்டகாங்:

இது, மலாய் என்றும் அழைக்கப்படுகிறது. இறைச்சி, முட்டைக்காக வளர்க்கப்படுகிறது. இந்த இன கோழிகள், வெள்ளை, கருப்பு, அடர் பழுப்பு, சாம்பல் நிறத்தில் காணப்படும். சிவப்பு காது மடலும், நீண்டு தொங்கும் கண் இமையும், இறகுகள் அற்ற கொண்டையும் இதன் தனித்தன்மையை பறைசாற்றும்.

கடக்நாத்:

இதை கருங்கால் கோழி என்பர். கலாமாசி என்றும் அழைப்பர். கருப்பு சதையுள்ள பறவை என்பது இதன் பொருள். மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதி இதன் தாயகம். இந்த ரக சேவல், கோவில்களுக்கு நேர்ச்சை விடப்படுகிறது. அதிக வெப்பத்தையும், குளிரையும் தாங்கி வளரும். குஞ்சுகள் நீலம் மற்றும் கருப்பு நிறத்தில், பின்பகுதியில் கருப்பு கோடுகளுடன் காணப்படும். பருவம் அடைந்ததும் இறகுகள் கருநீல நிறத்தில் மாறும். இறைச்சி, கருப்பு வண்ணத்தில் சுவையாக இருக்கும்.

பர்சா

: நடுத்தர உடல் வாகுடையது இந்த இனம். எப்போதும், கவனமுடன் பரபரப்பாக இருக்கும். குறைந்த அளவில் தான் முட்டையிடும். இதன் தோல் நிறம் வேறுபட்டு காணப்படும்.கிளி மூக்கு: கோழி இனங்களில் கிளியைப் போன்ற அலகை உடையது. தமிழகத்தை தாயகமாக கொண்டது. வால் மிகவும் நீளமாக அழகாக காட்சி தரும். அழியும் நிலையில் உள்ள இந்த இனம், அழகுக்காக அதிகம் வளர்க்கப்படுகிறது. வளர்ந்த சேவல் எடை, 5 கிலோ வரை இருக்கும்.

கலப்பினங்கள்:

துாய கோழினங்களை மூன்று மற்றும் நான்கு முறை கலப்பு செய்தால் புதிய இனங்கள் உருவாகும். வணிக ரீதியாக, முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்காக கலப்பினக் கோழி வளர்க்கப்படுகிறது. கோழி இறைச்சி தமிழகத்தின் முக்கிய உணவாக உள்ளது.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us