தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : நவ 16, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 16, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

விரல் சொல்கிறது விலை!



விரல் நுனியில் இணையதளத்தில் வியாபாரத்தை முடித்து விடும் இன்றைய சூழலில், இன்றும் விரல் பிடித்து நடக்கிறது மிளகாய் வியாபாரம். தூத்துக்குடியின் விளாத்திக்குளத்தில், மானாவாரி பயிர் சாகுபடி பகுதியான விளாத்திக்குளம், புதியம் புத்தூர், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், கயத்தாறு, புதூர், நாகலாபுரம், அக்கநாயக்கன்பட்டி, வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் மிளகாய் வத்தல் சாகுபடி பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடந்து வருகிறது.

தமிழகத்தில் மற்ற மாவட்டங் களில் மிளகாய் வத்தல் சாகுபடி செய்யப்பட்டாலும், விளாத்திக்குளம் வட்டாரத்தில் விளையும் வத்தலுக்கு தனிச் சுவையுடன் கூடிய காரத்தன்மை உண்டு.

தனித்தன்மையுடன் கூடிய காரத்தன்மை வாய்ந்த மிளகாய் வத்தலை வாங்குவதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் விளாத்திக்குளத்துக்கு வருகின்றனர். மிளகாய் வத்தலானது குண்டு, சுண்டு வத்தல், நீள வத்தல் எனப் பிரிக்கப் பட்டு அதற்கென விளாத்திக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. சந்தையில் இருந்து ஏற்றுமதியாகும் வத்தல்கள் வெளிநாடுகள் மட்டுமல்லாது ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங் களுக்கும் ஏற்றுமதியாகிறது. ஆடு, மாடு விற்கும் மாட்டுச் சந்தையில் கூட விரல் பிடித்து வியாபாரம் செய்யும் பழக்கம் இன்று காணாமல் போய்விட்டது. ஆனால், விளாத்திக்குளம் மிகளாய் வத்தல் விற்பனைச் சந்தையில் துண்டுக்குள் கைகளை மூடிக் கொண்டு விரல்களைப் பிடித்து வியாபாரம் செய்வது என்பது இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது. வாரத்தில் செவ்வாய் (ம) சனிக்கிழமைகளில் விளாத்திக்குளம் மிளகாய் வத்தல் சந்தைக்குச் சென்றால், பழமை மாறாத விரல் பிடித்து விலைபேசும் வினோதக் காட்சியைக் காணலாம்.

அன்பு கலாம் காலம்!



'ஆரம்ப கல்வியை ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமையாக மாற்ற வேண்டும். படைப்பாற்றல் திறனை வளர்க்கும் வகையில் ஆரம்ப கல்வியை மாற்றி அமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.

மேலும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் குழந்தைகளை வளர்க்க வேண்டும். குழந்தைகள் அனுபவித்து படிக்கும் வகையிலும் தங்களை முழுவதுமாக அதில் ஈடுபடுத்தி கொள்ளும் வகையிலும் பாடத்திட்டம் இருக்க வேண்டும்.

மேலும், லட்சியத்தை அடைவதற்கு மிகவும் அடிப்படையான நேர மேலாண்மை குறித்து குழந்தைகளுக்கு கற்று தருவது அவசியம். அதன்படி, சிறு வயதிலேயே ஒவ்வொருவருக்கும் ஒரு குறிக்கோள்களை ஏற்படுத்தி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவற்றை அடைவதற்கான ஊக்கத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டும்' என்கிறார் அப்துல் கலாம் அவர்கள்.

பலன்களை அள்ளித் தரும் பழம்!



மனிதன் ஆரோக்கியமாக நோயின்றி நீண்ட நாள் வாழ இயற்கை நமக்கு ஏராளமான செல்வங்களைத் தந்திருக்கிறது. அதிலும் எல்லாப் பருவங்களிலும் கிடைக்கக்கூடிய நிறைய பலன்களைத் தரக்கூடிய எலுமிச்சம்பழம் மிகச் சிறந்தது. உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளாக எலுமிச்சம் பழத்தை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

உடலுக்குத் தேவையான சக்தியை இதன் மூலம் எளிதில் பெறலாம். இதில் 17.7 கலோரி அடங்கி உள்ளது. உடல் சூட்டைத் தணிக்கவும், பித்தக் கிறுகிறுப்பைப் போக்கவும் இந்தப் பழரசம் அருந்திய உடனேயே உடலில் கலந்து, புதுத் தெம்பை ஏற்படுத்துகிறது. தாது உப்புக்கள் இதில் மிகுதியாக இருப்பதால் வாத நோயால் அவதிப்படுபவர்கள் தினமும் இந்தப் பழச்சாறை மூன்று (அ) நான்கு வேளை தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் வாதம் குணம் அடையும். இதில் இருக்கும் மாங்கனீசியச் சத்து பற்களில் உள்ள எனாமலை மேலும் வலுப்படுத்துகிறது. உடலின் வளர்ச்சி குறையாமல் இருப்பதற்கும், உயிர் அணுக்கள் சிதையாமல் இருப்பதற்கும் பாஸ்பரஸ் மிக அவசியம். இது எலுமிச்சையில் அதிகமாக உள்ளது.

எலுமிச்சம்பழத்தைப் பயன்படுத்தி நிறைய நோய்களிலிருந்து நாம் நிவாரணம் பெறலாம். உடல் அரிப்பு, தடிப்பு, அலர்ஜி இவைகளுக்கு எலுமிச்சைச்சாறு 30 மி.லி., தேன் 30 மி.லி., தண்ணீர் 150 மி.லி., கலந்து காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இவைகள் நீங்கி விடும். கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சம் பழச்சாறை தினசரி தக்காளிப்பழம், தேன், தண்ணீர் இவைகளுடன் கலந்து ஒரு நாளைக்கு 2 (அ) 3 வேளை குடித்து வந்தால் கல்லீரலினால் ஏற்படும் சீரழிவை அகற்றி மூளை, இதயம், இரைப்பை, சிறுநீர்ப்பை, ஜீரண மண்டலம் முதலிய உறுப்புகளை நல்ல நிலையில் இயங்கச் செய்யலாம்.

பல் ஈறுகளில் ரத்தம், சீழ் வடிந்தால் ஒரு துண்டு எலுமிச்சம் பழத்தை பல் ஈறுகளில் நன்றாக அழுத்தி தேய்த்தால் துர்நாற்றம் வராததுடன் ரத்தம் வருவதும் தடுக்கப்படும். பசி மந்தம், ருசியின்மை, வாயுப் பிரச்சனை, உடல் மதமதப்பு, நரம்புத் தளர்ச்சி, மந்த புத்தி இவைகளுக்கு நீர் மோரில் ஒரு எலுமிச்சை பழச்சாறு, இஞ்சி, பெருங்காயம், கொத்துமல்லி இலை இவைகளைப் போட்டு தினமும் 3 (அ) 4 முறை அருந்தினால் பலன் தெரியும். பேதி, வாந்தி ஏற்பட்டு சரீரத்தில் நீர்த்தன்மை குறைந்து உடலில் அபாய நிலை ஏற்படுவது உண்டு. இதற்கு கஞ்சியில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து அடிக்கடி கொடுக்க வேண்டும். இதனால் நோயாளிக்குத் தெம்பு ஏற்படும். எலுமிச்சம்பழச் சாற்றில் சிறிது உப்புக் கலந்து தலைக்கு தேய்த்து ஊறிய பிறகு குளித்து வந்தால், தலை அரிப்பு, பேன், முடி கொட்டுதல், செம்பட்டை முடி இவைகள் குணமாகும்.

தினசரி உணவில் எலுமிச்சை ஊறுகாயை சேர்த்துக் கொண்டால் நரை, திரை அண்டாது. ஆகாரமும் நன்கு ஜீரணமாகும்.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!



இது, 'பேக்டு பீன்ஸ் சாண்ட்விச்' செய்முறை.

என்னென்ன தேவை: சால்ட் பிரெட் ஸ்லைஸ்-தேவைக்கேற்ப, வெண்ணெய் தேவைக்கேற்ப, துருவிய சீஸ்-அரை கப், பீன்ஸ் (அ) சோயா மசாலா (செய்முறை தனியே)-ஒரு கப்.

எப்படி செய்வது?: பிரெட் ஸ்லைஸ்களை வட்டமாகவோ, விருப்பமான வடிவிலோ வெட்டிக் கொள்ளவும். ஒரு ஸ்லைஸின் மீது வெண்ணெயைத் தடவி, அதன் மேல் 3 டீஸ்பூன் பீன்ஸ் (அ) சோயா மசாலாவைப் பரப்பவும். அதன் மேல் சீஸ் துருவல் சேர்த்து சூடான தோசைக் கல்லின் மீது வைத்து லேசாக சூடாக்கிப் பரிமாறவும்.

மசாலா செய்முறை: வேக வைத்த பீன்ஸ் விதை (அ) சோயாவுடன், தக்காளி விழுது, உப்பு, மிளகாய் தூள், வெண்ணெய் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்தால் மசாலா ரெடி. பெரிய கடைகளில் வேக வைத்து, பதப்படுத்தப்பட்ட பீன்ஸ் கிடைக்கும். அதையும், வாங்கி அப்படியே உபயோகிக்கலாம்.

என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us