தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஜன 11, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 11, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

கையை தட்டி நோயை விரட்டுவோம்!



பொது நிகழ்ச்சிகளில் ஒருவரை பாராட்ட கை தட்டுகிறோம். இப்படி கைதட்டி ரசித்து சிரிப்பதன் மூலம், எந்த நோயும் நம்மை அண்டாமல் விரட்டலாம். இந்தியாவில், ஒரு மணி நேரத்தில் 90 பேர் மாரடைப்பு வந்து மரணமடைகின்றனர். இதய நோய் பாதிப்புக்கு ஆளாவதில், உலகத்திலேயே இந்தியர்களுக்குத் தான் முதலிடம். இந்தியர்களுக்கு நோய் வர உடலியல் காரணங்களை விட உளவியல் காரணங்களே அதிகம். எதற்கும் உணர்ச்சி வசப்படாமல், அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனநிலை வந்தாலே, நம்மை எந்த நோயும் அணுகாது.

வெற்றிதான் மகிழ்ச்சியின் திறவுகோல் என்பதை விட, மகிழ்ச்சியாக இருப்பதே வெற்றிதான் என்று எண்ண வேண்டும். இதற்கு நன்றாக மனம்விட்டு சிரிப்பதும், கைதட்டி ரசிப்பதும் அவசியம். கை தட்டுவதால் உடலில் ஒரு வகையான, 'அக்குபிரஷர் ட்ரீட்மென்ட்' ஏற்படுகிறது. மூளையும், பிற உறுப்புகளும் உற்சாகமாய் இயங்குகின்றன. கைகளில் உள்ள நரம்புகள், இதயம், ஈரல், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகளுடன் தொடர்பு கொண்டவை.

இரண்டு கைகளையும் இணைந்து தட்டுவதன் மூலம், நரம்புகள் தூண்டப்படுகின்றன. தைவான் நாட்டில், கை தட்டுவதன் மூலம் எலும்பு புற்று நோயினை குணப்படுத்தியுள்ளனர். எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் திபெத் சென்று தலாய்லாமாவை சந்தித்தார். அப்போது தலாய்லாமா, புற்று நோயால் பாதிக்கப்பட்டவரை 20 நிமிடங்களுக்கு இரண்டு கைகளையும் சேர்த்து தட்டச் சொன்னாராம். இப்படி தினமும் 20 நிமிடங்கள் கை தட்ட பயற்சி செய்தால் போதும் என்றாராம். இதில், ஆச்சரியம் என்னவென்றால், புற்று நோய் அவருக்கு முற்றிலுமாக குணமாகிவிட்டது. நம் உடலில் உள்ள ரத்த நாளங்கள் வெறும் 2 மி.மீ., குறுக்களவு கொண்டவை. நாம் டென்ஷன் ஆகும்போது அட்ரினலின், கார்ட்டிசால் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும். இவை அந்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும். இந்த சுரப்பை கட்டுப்படுத்தும் சக்தி நம் உடலில் இயல்பாகவே இருக்கிறது. சீரான உணவு, முறையான உடற்பயிற்சி, நல்ல பழக்கங்கள், மனமகிழ்ச்சி இவையெல்லாம் எண்டார்பின், மெலட்டோனின், செரட்டோனின் ஹார்மோன்களும் எச்.டி.எல்., என்கிற நல்ல கொழுப்புகளும் உருவாகும். இதனால் 99 சதவீத அடைப்பு இருந்தால் கூட தானாக கரைந்துவிடும் என மருத்துவ நிபுணர்கள் சொல்கின்றனர்.

தினமும் 20 நிமிடங்களுக்கு ஜோராய் கை தட்டுங்கள் நோய் வரவே வராது. காசா... பணமா... சும்மா தட்டித்தான் பாருங்களேன்.

பூமி ஓர் அற்புத கிரகம்!







நமது பூமி தோன்றி 460 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. சூரியன் மற்றும் இதர கிரகங்களை போலவே, பூமியும் தூசு வாயுக்களின் படலங்களில் இருந்து தோன்றியது. பூமி தோன்றுவதற்கு முன்பு, எரியும் கோளமாக இருந்தது. அதைச் சுற்றியும் எரியும் வாயுக்கள் அடங்கிய மண்டலமும் இருந்தது. வெப்பமான கோள நிலையில், பூமி சூரியனைச் சுற்றி வந்து கொண்டே இருந்தது. அதிலிருந்து விலகிச் சென்று கொண்டே இருந்தது. அது சூரியனை விட்டு விலகிச் செல்ல செல்ல அதன் வெப்பநிலை குறைந்து கொண்டே வந்தது. இவ்வாறு பூமி குளிர்ச்சி அடையத் தொடங்கியது. அதன் மேல்பாகம் இறுகி ஓடுபோல் ஆனது. இந்த மேலோடுகள் இறுக இறுக, அதில் வெடிப்புகள் தோன்றின. இவ்வெடிப்புகளின் வாயிலாக, பூமிக்குள் இருந்து பொருட்கள் உருகிய நிலையில் குழம்பாக வெளியே பீறிட்டுக் கொண்டு வந்தன. இதுபோல், கோடிக்கணக்கான ஆண்டுகள் செல்லவே, இந்த குழம்புகள் இறுகி மலைகளாகவும், பள்ளத்தாக்கு களாகவும் உருவெடுத்தன. காலம் செல்லச் செல்ல பூமிக்கு மேலே அதைச் சுற்றிலும் கவிந்து இருந்த வெப்பமான வாயுக்களின் அடர்ந்த பகுதி குளிர்ச்சி அடையத் தொடங்கி இறுதியில் மேகங்களாக மாறியது. இம்மேகங்கள் பூமியின் மீது நீண்ட காலமாக மழையைப் பொழிந்து கொண்டே இருந்தன. இதனால் பூமி குளிர்ந்தது. பூமியின் தாழ்வான பகுதியில் விழுந்த மழைநீர் சேர்ந்து இறுதியில் கடலாக மாறியது. இவற்றிலும் கொந்தளிப்பு ஏற்பட்டு மேற்பரப்பு மேல் நோக்கி உந்தப்பட்டது. சிலபகுதியில் கீழ் நோக்கி தள்ளப்பட்டது. இதனால் பல எரிமலைகள் ஏற்பட்டன.

மெதுவாக பூமி குளிர்ந்து மலைகளும், கடலும் நிலையான உருவங்களைப் பெற்றன. 57 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் நுண்ணுயிர்கள் பெருகத் தொடங்கின. முதல் 34.5 கோடி ஆண்டுகளில் கடல் வாழ் உயிரினங்கள் தோன்றின. அதன்பிறகு பூமியில் ஊர்வன வற்றின் தோற்றம் ஏற்பட்டது. சுமார் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் பூமியில் தோன்றியது. பூமி ஓர் அற்புதக் கிராமம். அதில், உயிர் வாழ்வதற்குத் தேவையான சூழ்நிலைகள் சிறப்பாக உள்ளன. அதைச் சுற்றிலும் காற்று மண்டலம் உள்ளது. இது உயிர் வாழ்வதற்கு மிகமிக அவசியமானது. பூமியைப் பற்றி பல வியத்தகு விவரங்கள் உள்ளன. பூமியின் விட்டம் பூமத்திய ரேகையின் வழியே சராசரியாக 12,756 கி.மீ., ஆகவும், துருவங்கள் வழியே இதன் விட்டம் 12,714 கி.மீ., ஆகவும் உள்ளது.

பூமியின் மேற்பரப்பில் 70.92 சதவீதம் தண்ணீர் உள்ளது. மீதி பரப்பில் நிலம் அமைந்துள்ளது. பூமியின் மொத்தப் பரப்பு 51 கோடி சதுர கிலோ மீட்டர் ஆகும்.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!



இது, 'காலிப்ளவர் 65’ செய்முறை நேரம்.

காலிப்ளவரை பெரிய, பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கொதிக்கும் நீரில் ஒரு சிட்டிகை உப்பு, சிறிதளவு மஞ்சள் தூள் இரண்டையும் போட்டு, பிறகு காலிப்ளவர் துண்டுகளையும் போடவும். (புழுக்கள் இருந்தால் போய்விடும்) இரண்டு நிமிடத்தில் காலிப்ளவர் துண்டுகளை வெந்நீரில் இருந்து எடுத்து ஆறவிடவும்.

ஒரு டேபிள் ஸ்பூன் தயிர், எலுமிச்சை சாறு-2 டீஸ்பூன், 1/4 ஸ்பூன் மஞ்சள்,1/2 டீஸ்பூன் கரம் மசாலா, 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, சோளமாவு ஒரு டேபிள் ஸ்பூன். கடலை மாவு ஒரு டேபிள் ஸ்பூன், ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது. இவை எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். இதில், காலிப்ளவர் துண்டுகளை அரை மணிநேரம் ஊறவைத்து, மேலே இருக்கும் மாவை லேசாக உதிர்த்து விட்டு, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். காலிப்ளவர் 65 தயார்.

என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us