தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு !

அதிமேதாவி அங்குராசு !

அதிமேதாவி அங்குராசு !


PUBLISHED ON : ஆக 20, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 20, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அனைவருக்கும் எனது அன்பு.

* ஒரு வரி ; ஒரே வரி !

நாம் சிலவற்றை முடியாது என்று நினைத்து கொண்டு இருந்தால், நம்முடைய ஆழ்மனதும் அதை அப்படியே ஏற்று கொண்டு செயலாற்ற தொடங்கிவிடுகிறது. 'முடியும்' என்று உறுதியான நம்பிக்கை கொள்ளும் போது ஆழ்மனதிலிருந்து எல்லா உதவிகளும் நமக்கு கிடைத்து கொண்டே இருக்கிறது.

* நம்ப முடியாத நிஜங்கள் ! - தவளையை கண்டு ஓடும் பாம்பு!

பொதுவாக பாம்புகளுக்கு தவளை என்றால் பாதாம் அல்வா. ஆனால், அமெரிக்காவின் காட்டு பகுதியில் உள்ள, 'டார்ட் பாய்வின்' என்ற தவளையை பார்த்து விட்டால் பாம்புகள் ஒதுங்கி போய் விடும். காரணம் அது ஒரு விஷத் தவளை. பச்சை நிறத்தில் சிறிய அளவே இருக்கும் இந்தத் தவளையின் உடம்பிலிருந்து எடுக்கப்பட்ட இரண்டு துளி விஷத்தை, குடிநீரில் கலந்து ஆயிரம் பேர் குடித்தால் ஆயிரம் பேரும் அவுட்தான்.

நாமும் சுத்தறோம்!

பூமி சுழன்று கொண்டிருக்கிற விஷயம் தெரிந்ததுதான். ஆனால், பூமி சுழல்வது நமக்கு தெரிவது இல்லை. காரணம் என்ன தெரியுமா? பூமியோடு சேர்ந்து நாமும் ஒரு விநாடிக்கு 460 மீட்டர் வேகத்தில் அதனோடு சேர்ந்து சுற்றி கொண்டு இருக்கிறோம்.

சாகாம இருக்கும்படி செய்யலாம்!

ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சி 2 வயது வரைதான் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைகிறது. மேற்கொண்டு 6 வயது வரை சிறிய அளவிலான வளர்ச்சிதான் இருக்கும். மூளை ஒரு சூப்பர் கம்ப்யூட்டர். அதனுடைய திறமை 100 சதவீதம் இருந்தும் மனிதர்களால் 10 சதவீதம் மட்டுமே பயன்படுத்த முடிகிறது.

மனிதன் தன்னுடைய மூளையை 50 சதவீதம் பயன்படுத்தினாலே போதும், மரணத்தை வெல்லும் மார்க்கத்தை தெரிந்து கொள்வான். அந்த அதிசயம் நடக்க இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகள் போக வேண்டும். அதாவது 3010-ல்.

* பாலையில் பயிர் செய்யும் பறவை !

கண்ணுக்கு எட்டிய தூரம்வரை மணற்பரப்பு; உடம்பே எரிவது போல் 120 டிகிரி வெயில். இந்த இரண்டையும் கொண்ட பாலைவனங்களில், சில இடங்களில் மட்டும் பசுமையான சோலைகள் இருப்பது எப்படி? மழை என்பதையே அறியாத பாலைவனப் பகுதிகளில் இந்த பாலைவனச் சோலைகளுக்கு மட்டும் நீர் எப்படி கிடைக்கிறது?

பாலைவனத்தின் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு நீர் ஊற்று இருந்தாலோ அல்லது எப்போதாவது பெய்யும் மழை பாலைவனத்தின் தாழ்வான பகுதியில் மணலுக்கு கீழே உள்ள பாறை இடுக்குகளில் போய் சேர்ந்து, ஒரு சின்ன நீர் நிலையை உண்டாக்கினாலோ இந்த நீர் நிலையை தேடிவரும் பறவைகள், தங்கள் எச்சங்களால் விட்டு செல்லும் விதைகள் அந்த பகுதியில் வளர்ந்து பசுமையை ஏற்படுத்திவிடுகின்றன.

*ஒரு வரியில் ஒண்டர்கள் !

* அண்டார்ட்டிகா கண்டத்தில் எந்த தாவரமும் கிடையாது.

* அர்ஜென்டினாவின் ஒரு பகுதியில் மழை இதுவரைக்கும் பெய்ததே கிடையாது.

* பிறந்த குழந்தைக்கு தண்ணீர் சுரப்பிகள் கிடையாது.

* யானையின் துதிக்கையில் எலும்பே கிடையாது.

லேசர் என்றால் என்ன ?

லேசர் ஒரு சக்தி வாய்ந்த ஒளிக்கதிரை உண்டாக்கும் என்பது நமக்குத் தெரியும். ஆனால், LASER என்பதன் விரிவாக்கம் என்ன என்று தெரியுமா? இதோ அதன் விரிவாக்கம்...

Light Amplification Stimulated Emission Of Radiation.

* அழகும் அம்மாவும் ஆண்தான் !

ஆண் மயில்களுக்கு அழகான நீண்ட தோகை இருக்கும். இதன் நீளம் 2 மீட்டர். பெண் மயில்களுக்கு தோகை ஒரு மீட்டர்தான். ஆண் மயிலின் தோகைக்கு ஆங்கிலத்தில் ட்ரெய்ன் பெதர்ஸ் என்று பெயர்.

பெண் மயில்களுக்கு முட்டையிடும் வேலை மட்டுமே. அந்த முட்டைகளை கூட்டில் வைத்து பாதுகாப்பதும், குஞ்சுகள் வெளியே வந்ததும் அவைகளுக்கு உணவு கொடுத்து வளர்ப்பதும் ஆண் மயில்கள்தான். ஒவ்வொரு ஆண் மயிலும் தன்னுடைய பாப்பாக்களுக்கு நல்ல அப்பாவாக, அம்மாவாக இருக்கும்.

* நாய் வால் ஒய்-கட் ?

நாய்க்கு தன்னிடம் இருக்கிற உறுப்புகளில் பிடிக்காத உறுப்பு அதனுடைய வால்தான். தனக்கு வேண்டாத உறுப்பு என்று நினைத்து அதை வளைத்து வளைத்து கழுத்தை சட்... சட்டென்று திருப்பி கடித்திட முயற்சி செய்யும். இந்த முயற்சியில் நாயின் வாய்க்கு அதனுடைய வால் கிடைக்காதது ஒருபுறம் இருந்தாலும், அது அடிக்கடி கழுத்தை திருப்பும் முயற்சியில் நாளா வட்டத்தில் அதனுடைய கழுத்து எலும்புகள் தேய்ந்து போய்விடும் வாய்ப்பு உண்டு.

இதன் காரணமாகத்தான் நாய் வளர்ப்பவர்களில் பெரும்பாலோர் நாயின் வாலை வெட்டி விடுகின்றனர். நாய் தனது உடம்பை குறுக்கி, தனது தலையையும் வாலையும் அருகருகே கொண்டு வர செய்யும் முயற்சி, செம காமெடியாகத்தான் பார்ப்பதற்கு இருக்கும். டாக்டரிடம் ஆலோசனை பெற்று உடனே இந்த வால் கடியை தடுங்கள்.

மருந்து கொடுத்து அந்த உணர்வை தடுக்கலாம். உடனே வால் வெட்ட வேண்டும் என்பது இல்லை. எப்போதாவது உங்கள் நாய் வால் கடி செய்தால் பிரச்னை இல்லை. அடிக்கடி, தினம் தினம் செய்தால் டாக்டரை சந்தியுங்கள்.

என்றென்றும் அன்புடன், உங்கள் அங்குராசு.

அதிமேதாவி அங்குராசு !



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us