sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : செப் 13, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 13, 2013


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

மேம் மாறுதுங்கோ!

அமெரிக்கா கண்டம் முன்பை விட இப்போது அளவில் குறைந்துள்ளது. கடல் மட்டம் சுமார் 17 செ.மீ., உயர்ந்ததே இதற்கு காரணம்.

துருவப்பகுதியில் உள்ள பனி உருகத் தொடங்கி இருக்கிறது. இப்படியே போனால் இந்த நூற்றாண்டு இறுதிக்குள் கடல் மட்டம் ஒரு மீட்டர் வரை உயரும் என்று நிபுணர்கள் கணித்து இருக்கின்றனர்.

இதன் விளைவாக புளோரிடா, வங்காளதேசம் போன்றவை கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக வரைபடமே மாறலாம்.

அமெரிக்காவில் இருக்கும் 10 பெரிய நகரங்களில், 8 நகரங்கள் கடற்கரை ஓரத்திலேயே உள்ளன. இவற்றில் சுமார் 2 கோடி மக்கள் வாழ்கின்றனர்.

இவர்கள் அனைவரும் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அடுத்த நூற்றாண்டில் இயற்கை இடம் மாற்றிவிடும். இதற்கெல்லாம் அடிப்படை காரணம் கார்பன் வெளியேற்றம் தான்.

பனிமலைகளில் உள்ள ஒரு சதவீத பனியும், கிரீன்லாந்தில் உள்ள 9 சதவீத பனிப் பாறைகளும் அண்டார்டிகாவில் உள்ள 90 சதவீத பனிப்பாறைகளும் உருக நேரிடும். இவையெல்லாம் உருகத் தொடங்கினால் கடல் மட்டம் நம்மை பயமுறுத்தும் அளவுக்கு 65 மீட்டர் உயர்ந்து விடுமாம்.

அப்படி நடக்க சில நூற்றாண்டுகள் பிடிக்கும். ஆனாலும் பயம் கொள்ளாமல் இருக்க முடியாது. முன் எப்போதையும் விட பயங்கர புயல்கள் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

பனிப்பாறை உருகும் வேகம் அதிகமாகக் காரணம், உருகும் தண்ணீர் பவளப்பாறை களின் அடிப்பகுதியை சென்று அடைகிறது.

அங்கு அந்த நீர் பனிப்பாறைக்கும், அதன் கீழுள்ள தரைப்பகுதிக்கும் இடையே எண்ணை போன்று செயல்பட்டு உராய்வை குறைக்கிறது.

இதனால் பனிப்பாறை சுலபமாக வழுக்கிக் கொண்டே கடலுக்குள் சென்று விடுகிறது. நிலப்பகுதியில் உள்ள பனிப் பாறை 6.5 லட்சம் வருடம் பழமையானது. அவை இப்போது உருகத் தொடங்கியுள்ளன.

இதில் மற்றொரு கெடுதல் என்ன வென்றால் பனி உருகுதல் காரணமாக நல்ல நீர் கடலை கலக்கிறது.

நல்ல நீர் கடல்நீரை விட அடர்த்தி குறை வானது. இதனால் தண்ணீர் கடலின் மேல் பரப்பிலேயே தங்கிவிடுகிறது.

இதன் விளைவாக கடலுக்குள் நிகழும் வளைகுடா நீரோட்டம் தடைபடும் அபாயம் உள்ளது. அப்படி நடந்தால் ஐரோப்பா முழுவதுமே உறைந்து விடும்.

ஏனென்றால், இந்த நீரோட்டம் தான் குளிர் காலத்தில் ஐரோப்பிய பகுதியில் வெப்பத்தை பெருக்குகிறது. இதனால்தான் ஐரோப்பிய பகுதிகள் கடும் குளிரில் இருந்து தப்புகின்றன.

என்னதான் நாம் விழிப்புணர்வாக இருந்து கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தி னாலும், ஏற்கனவே உருகியிருக்கும், தற்போது உருகிக்கொண்டு இருக்கும் பனிப் பாறைகளை மீண்டும் உருவாக்குவது மிகக் கடினம்.

ஆந்தை தடுக்குமா கழுத்து முறிவு!

ஆந்தை தன் கழுத்தை நாலாபுறமும் திருப்ப முடிவது எப்படி என்ற கேள்விக்கு அமெரிக்க விஞ்ஞானிகள் விடை கண்டுள்ளனர்.

இரவில் வேட்டையாடும் பறவையான ஆந்தை, தன் கழுத்தை 270 டிகிரி வரை திருப்பும் அபூர்வமான திறமை கொண்டது.

இதே அளவுக்கு மனிதன் தன் கழுத்தை திருப்பினால், ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு, ஆபத்தான நிலை ஏற்படும்.

இது தொடர்பாக ஆராய்ச்சி செய்த அமெரிக்காவின் ஜானஸ் ஹாப்கின் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், ஆந்தையின் அபூர்வ சக்தி பற்றிய ரகசியத்தை கண்டறிந்து உள்ளனர்.

இறந்த ஆந்தைகளை பரிசோதனைக்கு எடுத்துக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள், ஆந்தையின் தலையை கைகளால் நன்கு திருப்பி சோதனை செய்தபோது, அதன் தலையின் அடியில், தாடையில் எலும்புக்கு சற்று கீழே உள்ள ரத்த நாளங்கள் விரிவடை வது தெரியவந்தது. இதன் மூலம் ஆந்தை களின் கழுத்து அதிகபட்சம் திருப்புவதால், அவற்றின் ரத்த நாளங்களின் பாதிப்பு ஏற்படுவ தில்லை என்பதுடன், அதிக அளவில் நாளங் களின் தேங்கும் ரத்தம், அளவில் பெரிதான அவற்றின் மூளை மற்றும் கண்களின் செயல் பாட்டுக்கு பெரிய அளவில் உதவுவது தெரியவந்துள்ளது.

இந்த கண்டுபிடிப்பு மூலம், விபத்துகளில் சிக்கி கழுத்து முறிவு போன்ற பாதிப்புகளை எதிர் கொள்ளும் மனிதர்களுக்கு, சிகிச்சை அளிப்பதில் முன்னேற்றம் ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

தொலைநோக்கி கண்!

இப்படியொன்றை ஜோசப் போர்ட் தலைமையிலான சாண்டியாகோ பல்கலைக் கழக விஞ்ஞானிகள் உருவாக்கி யுள்ளனர்.

தெளிவாக சொல்லப் போனால், அது ஒரு தொலை நோக்கி கான்டாக்ட் லென்ஸ் (Telescopic Contact lens).

இந்த கான்டாக்ட் லென்ஸ் அணிந்து பார்க்கும் போது சராசரி மனித கண் பார்ப்பதை விட 2.8 மடங்கு பெரிதாக பார்க்க முடியும். இந்த லென்சின் சிறப்பே, நமக்கு தேவையான அளவுக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்வதுதான். நமக்கு தேவை எனும்போது மட்டும் பெரிதாய் காட்டும்படி இதை செட் செய்து கொள்ளலாம். மற்ற நேரங்களில் சாதாரண லென்ஸ் போலவே இது செயல்படும்.

வெறும் 1.17 மில்லி மீட்டர் அடர்த்தி உள்ள இந்த லென்சில் சிறுசிறு அலுமினிய கண்ணாடி கள் பொருத்தப்பட்டுள்ளன. தேவைக்கு ஏற்ப பெரிதாக்கி காட்டவும், சுருக்கி காட்டவும் 3D கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. இன்னும் இந்த லென்சை மனித கண்ணில் பொருத்தி சோதனை செய்யப்படவில்லை.

வயதானவர்கள் பெரும்பாலும் மாக்குலர் திசு செயலிழப்பு (Macular Degeneration) நோயால் கண் பார்வை குன்றி கஷ்டப் படுகின்றனர். அவர்களுக்காகவே இது உருவாக்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு பெரிதும் உதவியாய் இருக்கும்.

இம்முயற்சி முழு வெற்றி அடைந்தால் வான கிரகங்களை காணும் அளவுக்கு சக்தி வாய்ந்த லென்சை உருவாக்குவோம் என்று கூறுகின்றனர் இதன் கண்டுபிடிப்பாளர்கள்.

புற்றுநோயை தடுக்க அரிசி தவிடு!

உலகமெங்கும் மக்களின் உயிர்களை பறிப்பதில் புற்றுநோய் முக்கிய பங்கு வகிக்கிறது.

இன்றைய வாழ்க்கை சூழல் மாற்றம், ரசாயனங்களின் தாக்கம், உணவில் கூட ரசாயன சேர்க்கை, புகையிலைப் பயன்பாடு பெருக்கம் என பல்வேறு காரணங் களால் புற்றுநோய் மனித சமூகத் தில் தன் ஆதிக்கக் கொடியை நாட்டி வருகிறது.

இந்த நிலையில், பெருங்குடல் புற்று நோயை தடுப்பதில் அரிசி தவிடுக்கு முக்கிய இடம் உண்டு என விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கின்றனர்!

பெருங்குடல் பகுதியில் புற்றுநோய் செல்கள் பரவுவதை தடுக்கிற பொருள் அரிசி தவிடில் அடங்கி இருக்கிறது.

இதை மேல்நாட்டு விஞ்ஞானியான டாக்டர் எலிசபெத் ரேயான் கண்டுபிடித் திருக்கிறார். அந்த காலத்தில் நமது முன்னோர்கள் தவிடு நீக்காத கைக்குத்தல் அரிசியை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

தவிடு நீங்காத அரிசியை உணவாக உண்டு பெருங்குடல் புற்றுநோயையும் தடுத்துவிடலாம்.

என்றென்றும் அன்புடன், அங்குராசு.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us