
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
லாபம் தரும் பேப்பர் கப் தொழில்!
பேப்பர் கப் செய்யும் தொழிலை வீட்டில் இருந்தபடியே செய்யலாம். இதற்கு ஏதேனும் ஒரு பேப்பர் கப் எந்திர விற்பனையாளரை நாம் பரிந்துரைக்கப் போய் அவர் சரியாக செயல்படவில்லை என்றால் அது சிரமத்தை ஏற்படுத்தும்.
பரிந்துரை செய்தவர் மீது கோபம் வரும். மாறாக, பேப்பர் கப் என்றில்லாமல் எந்த தொழில் தொடங்க விரும்புவோரும் அவருக்கான தொழில் நுட்பத்தை பெறுவது எப்படி, மூலதனம் எவ்வளவு தேவைப்படும், பொருள்களை சந்தைப்படுத்துவது எப்படி என்பது பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
தொழில்நுட்பம்: எந்த தொழில் சார்ந்த தகவல்கள் வேண்டுமானாலும் நீங்கள் இணையத்தில் கூகுல், யாஹூ போன்ற தேடு பொறிகள் மூலம் சில விநாடிகளிலேயே பெற்றுவிடலாம். தகவல் திரட்டுவது என்பது முன்பு போல் சிரமமான காரியம் அல்ல.
ஒருவேளை இணைய தகவல் உங்களுக்கு திருப்தி தரவில்லையென்றால், தொலைபேசி டைரக்டரிகள், மத்திய அரசினுடைய குறு- சிறு மற்றும் நடுத்தர தொழில் மையங்கள், மாநில அரசினுடைய மாவட்ட தொழில் மையங்கள், டிட்கோ, சிட்கோ, இட்காட் போன்ற பல அமைப்புகளை தேடிச் சென்று நீங்கள் தொழில் நுட்பங்களை பெறலாம்.
முதலீடு: ஆரம்பத்தில் குறைவான முதலீட்டில் பேப்பர் கப் தொழிலில் ஈடுபடுவது எப்படி என்று யோசியுங்கள். அதாவது, சந்தையில் கிடைக்கும் தரமான பேப்பர் கப்களை அளவு வாரியாக வாங்கி வைத்து கொண்டு அவற்றுக்கு ஆர்டர் எடுக்க முயலுங்கள்.
உற்பத்தியாளரோடு பேசி உங்களுக்கான லாப விகிதத்தை நிர்ணயித்து கொண்டு, உங்களது பிராண்ட் பெயரிலேயே உற்பத்தி செய்துதர ஒப்பந்தம் போடுங்கள். பிறகு மார்க்கெட்டிங்கில் இறங்கி ஆர்டர் எடுங்கள். இதற்கு அவ்வளவாக முதலீடு தேவைப்படாது. சந்தையின் நாடியையும் நீங்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம். இதில் கிடைக்கிற, லாபத்தை கொண்டு சிறிது சிறிதாக தொழிலை விரிவுப்படுத்துங்கள். சிறு தொழில்களுக்கு வங்கிக் கடன், அரசு மானியம் என பல வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆனாலும், வங்கி கடன்களுக்கு பிணையம் அவசியம் தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். விற்பனை உத்தரவாதம் இருந்தால் நீங்கள் தாராளமாக வெளியில் கடன் வாங்கி தொழில் புரியலாம்.
சந்தைப்படுத்துதல்: பேப்பர் கப், கவர், மெழுகுவர்த்தி போன்ற தொழில்களில் போட்டிகள் ஏராளம் என்பதால், இவற்றில் கிடைக்கும் லாபமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
ஆனால், எந்த ஒரு பொருளையும் கண்கவர் வண்ணத்தில் பல புதுமைகளை புகுத்தி தயாரிப்பதன் மூலம் விரைவில் சந்தைப்படுத்தி விட முடியும். அதனால், பேப்பர்கப் பயன்படும் இடங்கள், பயன்படுத்தும் இடங்கள், பயன்படுத்தும் அளவு போன்றவற்றை அறிந்து குறிப்பிட்ட நேரத்தில் அவர்களுக்கு டெலிவரி செய்யுங்கள். அவ்வப்போது உங்களது பொருள்களை சற்று மாற்றி, மக்களின் தேவைக்கேற்ப உருவாக்கி தரலாம். ஏனெனில், உங்கள் பொருளை சந்தையில் விற்க முயல்வதை விட, பிறர் கேட்கும் வகையில் வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப அந்த பொருள்களை தயாரித்து, விற்பனை செய்வதுதான் புத்திசாலித்தனம்.
எவ்வளவு குப்பையடா குப்புசாமி?
இந்திய பெருநகரங்களால் தினமும் இரு நூறு முதல் இருநூற்றைம்பது டன்கள் வரை ப்ளாஸ்டிக் கழிவுகள் உண்டாக்கப் படுகின்றன. இதில் ஐம்பது சதவீதம் ப்ளாஸ்டிக் பைகள் என்றால் அது நான்கு கிலோமீட்டர் பரப்பளவை தினமும் அடைத்து கொள்கிறது. நாம் சாதாரணமாக ப்ளாஸ்டிக் பைகளை இருபது நிமிடங்கள் மட்டுமே உபயோகித்தாலும் அது மக்குவதற்கு சில நூறு ஆண்டுகள் ஆகின்றன.
கடலில் மிதக்கும் குப்பைகளில் தொண்ணூறு சதவீதம் ப்ளாஸ்டிக் கழிவுகள் தான். தற்போது நாம் பயன்படுத்தும் ப்ளாஸ்டிக்குகளில் வெறும் ஏழு சதவீதம் மட்டுமே ரீ-சைக்கிள் (மறு- உபயோகம்) செய்யப்படுகிறது.
மட்கும் காலம்!
ப்ளாஸ்டிக் பைகள் 100 - 1000 வருடங்கள், பயோ-டி- கிரேடபிள் ப்ளாஸ்டிக் பைகள் 60-180 நாட்கள், வாழைப்பழ தோல் 2-10 நாட்கள், கிழிந்த துணிகள் 1-5 மாதங்கள், காகிதம் 2-5 மாதங்கள், கயிறு 3-14 மாதங்கள், ஆரஞ்சு தோல் 6 மாதங்கள், கம்பளி சாக்ஸ் 1-5 வருடங்கள், டெட்ரா பேக்குகள் 5 வருடங்கள், தோல் ஷûக்கள் 25-40 வருடங்கள், நைலான் துணிகள் 30-40 வருடங்கள், டின், கேன்கள் 80-1000 வருடங்கள், டயபர்ஸ் மற்றும் நாப்கின்கள் 500-800 வருடங்கள், ப்ளாஸ்டிக் பாட்டில் அழியவே அழியாது.
பயோ-டி-கிரேடபிள் டெக்னாலஜி என்ற முறையின் மூலம் ப்ளாஸ்டிக்கிலிருந்து கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் இதர கழிவுகள் நீக்கப்பட்டு, அழியும் மற்றும் மட்கும் தன்மையுள்ள பொருட்களால் உருவாக்கப்படுகிறது. தூய மற்றும் மாசு இல்லா சுற்றுச் சுழல் அனைவரின் உரிமை. பயோ-டி-கிரேடபிள் பிளாஸ்டிக்கை பயன்படுத்துங்கள். அது உங்களிடமிருந்தே ஆரம்பமாகட்டும்!
அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது 'தயிர் குறுக்கு' செய்முறை நேரம். இது ஒரு 'சைட் டிஷ்' சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம், (மோர் குழம்பு மாதிரி)
தேவையான பொருட்கள்: நேந்திரங்காய் -1, மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன், தயிர்-1/2 படி (தயிரில் 1 டீஸ்பூன், சர்க்கரை போட்டு கலக்கவும்). தேங்காய் எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய் -கறிவேப்பிலை - தேவையான அளவு, தேங்காய் துருவல்-1 டேபிள் ஸ்பூன், குறுமிளகு-1 டீஸ்பூன் (அவரவர் கார தேவைக்கேற்ப)
செய்முறை: நேத்திரங்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். நறுக்கிய துண்டுகளை தேவையான தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் போட்டு (முக்கால் வேக்காடு) வேக வைக்கவும்.
தேங்காய் துருவல், குறுமிளகு, தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். வேக வைத்த நேந்திரங்காயை தயிரில் கலக்கி, அடுப்பில் வைத்து கலக்கி கொண்டே இருக்கவும். தயிர் பிரியாமல் இருக்க, கலக்கி கொண்டே இருக்கவும். குழம்பு கெட்டியான பின்பு, பூத்து வரும் போது இறக்கி, பிறகு தாளிக்கவும்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.
***