தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : டிச 13, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 13, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

செயற்கை மூளையா?

உடல் பாகங்கள் பாதிக்கப்பட்டவர் களுக்கு செயற்கை கால், செயற்கை கை என்று உருவாக்கி பொருத்துவது சாதாரணமாக நடந்து வருகிறது. செயற்கை இதயம், செவி போன்ற வையும் உருவாக்கப்பட்டு விட்டன. இப்படிப் பட்ட பாகங்களை ஒன்றிணைத்து ஒரு மனிதனை உருவாக்க வேண்டும் என்பது அறிவியல் உலகின் நீண்ட நாள் ஆசை. அதையும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் சாதித்து விட்டனர்.

செயற்கை மூளை மட்டும் சாத்தியமில்லாத தாக இருந்து வருகிறது. அந்த இடத்தை கம்ப்யூட்டர்களின் நினைவகங்களை வைத்து சரிக்கட்டி ஒரு செயற்கை மனிதனை இங்கிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்கி யுள்ளனர். எந்திரன் சினிமாவில் வரும் சிட்டி போன்று இயந்திர பாகங்களால் இந்த மனிதன் உருவாக்கப்பட்டுள்ளான். உடலின் பாகங்கள் அனைத்தும் சாதாரண மனிதனைப்போலவே உள்ளன. சிந்தடிக் வகை ரத்தம் செலுத்தப் பட்டுள்ளது.

விரல், நகங்கள், கை, கால்களின் இயக்கம் போன்றவை ரோபாடிக்கை அடிப்படையாக கொண்டவை. செயற்கையான இதயத்தில் ரத்த ஓட்டமும் நடைபெறுகிறது. மூளைக்கு கம்ப்யூட்டர் சிப் உதவுகிறது.

இந்த செயற்கை மனிதனால் பேசவும் முடியும். எளிமையான கேள்விகளுக்கு பதில் தருவான். நீண்ட நேரம் பேச வைக்க சோதனை களை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த மனிதனை உருவாக்க இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு 5 லட்சம் டாலர் செலவாகியுள்ளதாம். லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தில் இந்த செயற்கை மனிதன், பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளான். 'பயோனிக் மேன்' எனப்படும் இந்த செயற்கை மனிதனுக்கு 'ரெக்ஸ்' என பெயரிட்டுள்ளனர்.

ஈழத் தமிழர்களின் துயரங்களை உலகிற்கு எடுத்துக்காட்டிய சேனல்-4 தொலைக்காட்சி நிறுவனம், இந்த ரெக்ஸ் பற்றிய ஒரு தொலைக்காட்சி படத்தையும் தயாரித்துள்ளது.

அதை விரைவில் நாம் வீடுகளில் பார்க்கலாம்.

தேளே! என்னையா கடிச்சே...

கொடிய விஷம் கொண்டது தேள். அது கொட்டினால் வலியை தாங்க இயலாது. இந்த தேள்களை ஈராக் நாட்டில் சமார்ரா என்ற ஊரில் வசிக்கும் இஸ்மாயில் ஜாசிம் முகமது (34) என்பவர் பிடித்து சாப்பிடுகிறார். விவசாயியான இவர் தினமும் உயிருள்ள ஒரு தேளை பிடித்து முறுக்கு பலகாரத்தை கடித்து தின்பது போல வாயில் போட்டு மென்று சாப்பிடுகிறார்.

இவ்வாறு கடந்த 15 ஆண்டுகளாக கொடிய தேள்கள் எல்லாம் இவருக்கு இரையாகி வருகின்றன. ஒருமுறை தேள் இவரை சீண்டி வலி தாங்க முடியாமல் அவதியுற்று இருக் கிறார். அதனை அடுத்து ஒரு சபதம் எடுத்து இதில் இறங்கிவிட்டார்.

கொய்யாவிற்கு அடுத்துதான் ஆப்பிள்!

கொய்யாப் பழத்தில் ஏகப்பட்ட நன்மை கள் உள்ளன. விலை உயர்ந்த ஆப்பிளை விட விலை குறைந்த கொய்யாப் பழத்தில் மருத்துவக் குணங்கள் அதிகம். வைட்டமின் களும், மினரல்களும் நிறைந்தது. இதன் இலை, பட்டைகள் என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.

வைட்டமின் பி,சி ஆகிய உயிர்ச் சத்துக் களும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்றவையும் உள்ளன. கொய்யாவின் இலைகள் திசுக்களை பெருக்கும், ரத்தப் போக்கை கட்டுப்படுத்தும், மலச்சிக்கலை போக்கும். இந்த இலையை கசாயமாக அருந்தினால் வாந்தியை தடுக்கும். இலையை காய்ச்சி அந்த நீரால் வாயை கொப்பளித்தால் ஈறுகளின் வீக்கம் குணமாகும்.

கொய்யா இலையை அரைத்து காயத்தின் மீது தடவினால் காயம் விரைவில் குணமாகும். மரத்தின் பட்டை அல்சர் மற்றும் பல் வலியை தடுக்கும். பாக்டீரியா அழுகலை தடுக்கும்.

காய்ச்சலை போக்கும். வேர்ப்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கை குணப் படுத்தும். கொய்யாப் பழத்தை அறுத்து சாப்பிடுவதை விட நன்றாக கழுவிவிட்டு பற்களால் கடித்து மென்று சாப்பிடுவதே பற்களுக்கும், ஈறுகளுக்கும் பலம் கொடுக்கும். கொய்யாவின் தோலில்தான் அதிகமான சத்துக்கள் உள்ளன.

தோலை நீக்கி கொய்யாவை சாப்பிடக் கூடாது. மதுவுக்கு அடிமையானவர்கள் கொய்யாவை தொடர்ந்து சாப்பிட்டால், மதுவின் மீது இருக்கும் மோகம் நீங்கி, வெறுப்பு ஏற்படும். காலப்போக்கில் மதுவை விட்டுவிடுவர். வேறு எந்த பழத்திலும் இல்லாத உயிர்ச்சத்துக்கள் கொய்யா வில் அதிகம் உள்ளன. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யா ஒரு வரப்பிரசாதம். கொய்யாவால் உடல் நன்கு வளரும். எலும்புகள் பலம் பெறும். முகத்திற்கு பொலிவையும், அழகையும் தரும். தோல் வறட்சியை நீக்கும். முதுமை மறைந்து இளமை மேலிட வைக்கும்.

கொய்யாவை உணவுக்கு முன் சாப்பிடக் கூடாது. அதேபோல் இரவிலும் சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் வயிற்று வலி வரும்.

கொய்யாவை அளவாகத்தான் சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிட்டால் பித்தம், வாந்தி, மயக்கம் ஏற்படும். அதனால் அளவோடு சாப்பிட்டு வளமாக வாழுங்கள்.

ரவுண்டு ரவுண்டா!

நமது வான்வெளி மண்டலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கிருக்கும் நட்சத் திரங்கள் எல்லாம் உருண்டை வடிவிலேயே இருக்கின்றன. நமது சூரிய மண்டலத்தில் சூரியனை சுற்றும் பூமி உள்பட ஒன்பது கோள்களும் உருண்டை வடிவில் உள்ளன.

பொதுவாக நம்மை சுற்றியுள்ள அனைத்து கிரகங்களும், நட்சத்திரங்களும் உருண்டை யாகவே உள்ளன.

ஏன் சதுரமாகவோ, செவ்வகமாகவோ, முக்கோணமாகவோ இல்லை. விஞ்ஞானம் இதற்கு விளக்கம் சொல்கிறது.

அறிவியல் விதிப்படி விண்வெளியில் உள்ள ஒவ்வொரு பொருளும், பெரிய ஆற்றல் நிலையை அடைய முயற்சிக்கின்றன. மனிதன் எப்படி குறைந்த அளவு உழைத்து அதிக ஊதியம் பெற வேண்டும் என்று நினைக் கிறானோ... அதேபோலத்தான் கிரகங்களும்.

குறைவான ஆற்றலை பயன்படுத்தி அதிக காலம் வாழ விரும்புகின்றன. இதன் காரணமாக பெரும் நிலைப்பாட்டுத்தன்மை அந்த பொருளுக்கு கிடைக்கிறது.

அதாவது ஆற்றலை குறைவாக பயன் படுத்துவதால், அதிக காலம் வாழ முடிகிறது. ஒரு பொருள் உருண்டையாக இருந்தால் அதனுடைய கீழ்தளத்தின் பரப்பளவு வேறு எந்த வடிவ உருவத்தையும் விட குறைவாக இருக்கும்.

எனவே, பொருட் கள் அதிக காலம் வாழ சிறிய ஆற்றல் நிலையை உடைய உருண்டை வடிவில் இருக்கின்றன.

கிரகங்கள் மட்டுமல்லாமல் பெரும்பாலான பொருட்களும் உருண்டை வடிவிலேயே உள்ளன. மேகத்தில் இருந்து பொழியும் மழைத்துளியும் உருண்டை வடிவமானதே.

உருண்டையான நீர்த்துளிக்கு குறைந்த பரப்பாற்றல் போதுமான தாக இருப்பதால் மழைத்துளி யாகவே இருக்கும் நேரம் அதிக மாகிறது.

இதன் காரணமாகவே மேகத்தில் இருந்து பூமியை அடையும்போது உருண்டையான மழைத் துளியாகவே விழுகிறது.

நீர்த்துளியை வேறு வடிவமாக மாற்ற முயன்றாலும் அது மீண்டும் உருண்டை வடிவத்திலேயே உருவாகிறது. இவற்றைப் போலவே அணுவின் மூலக்கூறும் உருண்டை வடிவமானதே. அது மட்டுமல்லாமல் அணுவில் அடங்கியுள்ள எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான்களும் உருண்டை யாகவே உள்ளன.

என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us