PUBLISHED ON : ஜன 03, 2014

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
குளியல் தரும் சுறுசுறுப்பு!
பூமியில், பெரும்பாலும் தண்ணீர்தான் மூன்று பக்கமும் சுற்றிப்பரவியுள்ளது. அதேபோல் மனித உடலும் முக்கால்வாசி தண்ணீரால்தான் உருவாக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வைத்தியம் என்பது சக்தி வாய்ந்த ஒன்றாகத் திகழ்கிறது. எனவே, உடலுக்கும், உள்ளத்திற்கும் சக்தி தேவை என்றால் குளிர்ந்த தண்ணீரில் தினமும் குளிக்க வேண்டும்.
இதற்காகப் பத்து அங்குல ஆழமுள்ள தொட்டியில், 'ஜில்'லென்று குளிர்ந்த தண்ணீர் நிரப்பிக் கொண்டு தொட்டிக்குள் உட்காருங் கள். ஒரு நிமிடம் தண்ணீருக்குள் முழு உடலும் இருக்கும் விதத்தில் மூழ்கிக் கொண்டு உடலை ஆங்காங்கே தேய்த்து விடவும். ஒரு நிமிடம் முதல், மூன்று நிமிடங்கள் வரை இப்படி குளிர்ந்த தண்ணீரில் சோப் இன்றித் தேய்த்துக் குளிக்கும்போது நிணநீர் மண்டலம் சுறு சுறுப்பாக இயங்கி உள்ளே உள்ள உறுப்புகளை சுத்தம் செய்து விடுகிறது. இதனால் இதயமும் சுறுசுறுப்படைகிறது.
குளித்ததும் உடலை நன்கு துடைத்து விடுங்கள். இதனால் அடுத்த பல மணி நேரம் சுறுசுறுப்பாகப் பணிபுரியலாம். வெளியூர் சென்று திரும்பியதும் உடனே அலுவலகம் செல்ல வேண்டும் எனில், பிரிட்ஜில் உள்ள ஐஸ்கட்டிகளை தொட்டியில் போட்டு குளிர்ந்த நீராக மாற்றி குளிக்கலாம்.
நூறிலும் பறக்கும் மனிதர்!
இங்கிலாந்து நாட்டில் வெஸ்ட் சூச்செஸ் பகுதியில் வசிக்கும் 100 வயது நிரம்பிய ஒரு முதியவர் விளையாட்டில் தீவிர ஆர்வலராக இருக்கிறார். அவருடைய பெயர் டோமிதாம்ஸன். விமான பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தனது 67வது வயதில் பேட்மிட்டன் போட்டியில் பங்கேற்றார். அடிக்கடி காயம் ஏற்பட்டதால் அது ஒத்துவரவில்லை.
பிறகு மகனின் அறிவுரைப்படி கோல்ப் விளையாட்டில் இறங்கி அதில் சாதனையாக பல கோப்பைகளை தட்டினார். தற்போது 100 வயதாகி விட்டாலும் அதிகாலையில் தவ றாமல் மைதானத்துக்கு சென்று விடுகிறார்.
வாரத்தில் 3 போட்டிகளில் பங்கேற்கிறார்.
நமது உடலின் வெளிப்புறத்தையும், உள்புறத்தையும் தண்ணீர் தூய்மைப் படுத்து கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. அது மட்டுமின்றி, தண்ணீர் மனிதனின் உடல் ஆரோக்கியத் திற்கு மேலும் பல நன்மைகளை தரு கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
குறிப்பாக அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது சாலச் சிறப்பாகும்.
தண்ணீர்-தண்ணீர் தான்!
நமது உடலில் நாள்தோறும் புதுப்புது திசுக்கள் உருவாகின்றன. இத்தகைய புதிய திசுக்களை வேகமாக உருவாக்கி தசைகளை வலுவடைய செய்ய தண்ணீர் உதவுகிறது. உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது திசுக்கள் தளர்ந்து சோர்வு ஏற்படும். தண்ணீர் குடிப்பதால் வயிறு முட்ட உணவு சாப்பிடுவதை குறைப்பதுடன் நீரிழிவு, இதய கோளாறு வருவதை தடுக்க இயலும். உடல் பகுதியில் தேங்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றி ஜீரணம் எளிதாக நடக்க உதவி புரிகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகள் தருகிறது என்றால் அது மிகையாகாது.
என்றென்றும் அன்புடன், அங்குராசு
