தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : பிப் 14, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 14, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

முகம் பளபளக்க கரப்பான் பூச்சியை தடவுங்கப்பா!

என்ன, டைட்டிலை படிச்சதும் தலை சுத்துதா?

இது உண்மைதான்!

சீனாவில் கரப்பான் பூச்சி பண்ணை பிரபலமாகி வருகிறது. கரப்பான் பூச்சி என்றாலே,முகத்தை சுளிப்பவர்கள் மத்தியில், சீனாவில் சிலர், கரப்பான் பூச்சி பண்ணை வைத்து, கோடி, கோடியாக பணம் சம்பாதிக் கின்றனர். சீனாவில் கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, சிலவகை கூட்டு புழுக்களை வறுத்து சாப்பிடுவது, அறுசுவை உணவாக கருதப்படுகிறது.

கரப்பான் பூச்சி களுக்கு, இருட்டான இடங்கள் பிடிக்கும். பழைய கோழி பண்ணைகள், இருட்டான கட்டடங்களில் முட்டை வைக்கும் தட்டுக்கள், இரும்பு தகடுகளுக்கு நடுவே இவற்றை வளர்க்கின்றனர்.

சீனாவில் மட்டும், நூற்றுக்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சி பண்ணைகள் உள்ளன.

'வாங்க் பூமிஸ்' என்ற கரப்பான் பூச்சி பண்ணை உரிமையாளர் மட்டும், தன்னுடைய ஆறு பண்ணைகளில், ஒரு கோடிக்கும் மேற் பட்ட கரப்பான் பூச்சியை வளர்க்கிறார்.

அவர், 2010ம் ஆண்டு பண்ணையை ஆரம்பித்தார். இந்த மூன்று ஆண்டுகளில், உலர்ந்த கரப்பான் பூச்சியின் விலை 10 மடங் காக உயர்ந்து உள்ளது என்கிறார்.

அரை கிலோ உலர்ந்த கரப்பான் பூச்சியின் விலை 120 ரூபாயிலிருந்து, 1200 ரூபாயாக உயர்ந்து உள்ளது. இதற்கு முதலீடும் மிக குறைவு. 61 ரூபாய் முதலீடு செய்தால், 670 ரூபாய் லாபம் பார்க்கலாம்.

பண்ணை ஆரம்பிக்க, கரப்பான் பூச்சி முட்டைகள் இருந்தால் போதும். அதுவும் அமெரிக்க இன கரப்பான் பூச்சிகளை தான் வளர்க்கின்றனர்.

இவை நீளமாக, பெரியதாக கரும்பழுப்பு நிறத்தில் இருக்கும். இதற்கு இறக்கைகள் உண்டு. இவற்றை அழிப்பதும் எளிது என்கிறார் பூமிஸ். அப்படியே அள்ளி அல்லது வாக்யூம் செய்து கொதிக்கும் நீரில் போட்டு, வடகம் போல் காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

கரப்பான் பூச்சி பண்ணையில், பெரிய அளவு லாபம் பார்க்கலாம் என்பதே சீனாவில் பலருக்கும் தெரியாமல் இருந்தது.

ஒருமுறை கோடிக் கணக்கான கரப்பான் கள், ஒரு பண்ணையில் இருந்து எஸ்கேப் ஆகிய பின்பு தான் மக்களுக்கே தெரிய வந்தது. இந்த பண்ணைகளை ரகசியமாக, மக்கள் வசிக்கும் பகுதி களிலிருந்து தொலைவில் வைக்கின்றனர். இப்போது சீன 'டிவி'க்களில் கரப்பான் பண்ணை வளர்ப்பு முறை பற்றிய விளம்பரங்கள் பிரபலமாக உள்ளன.

சீனா மற்றும் தென்கொரியா பல்கலைக் கழகங்கள் கரப்பான் பூச்சியை வைத்து பலவித ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன.

அணு கதிர்வீச்சை கூட தாங்கும் சக்தி உடையது கரப்பான் பூச்சி.

இவை மூலம், எய்ட்ஸ், கேன்சர் போன்ற நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

'லீ ஷீவான்' என்ற 78 வயது சீன வைத்தியர், கரப்பான் பூச்சிகளை அரைத்து, தன் வழுக்கை தலையில் தினமும் தேய்த்து கொண்டதால் முடி வளர்ந்ததாக கூறுகிறார்.

மேலும், முகம் பளபளப்பாக இவற்றை அரைத்து முகத்தில் கூடப் பூசலாம் என்கிறார்.

போதுமா கரப்பான் பூச்சி புராணம்!

என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us