PUBLISHED ON : ஜூலை 11, 2014

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டுடாவோம்!
சுறுசுறுப்பு!
ஒருவர் வாரத்திற்கு குறைந்தது இரண்டரை மணி நேரமாவது ஏதாவது வேலைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாலே இதய நோய்கள், ரத்தக் கொதிப்பு, மூளையில் ரத்தஅழற்சி போன்ற நோய்கள் வராமல் தடுத்துவிடலாம் என்கிறது மருத்துவம்.
*வீட்டில் உள்ள இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனங்களைத் துடைக்கலாம்.
*வீட்டில் சக்கர நாற்காலி இருந்தால் அதில் அமர்ந்து அதனை நம் கைகளால் இயக்கலாம்.
*வீட்டிலுள்ள ஜன்னல், கதவுகள், தரைகளைத் துடைக்கலாம்.
*கூடைப்பந்து, கைப்பந்து, இறகுப் பந்து போன்ற விளையாட்டுகளில் ஈடுபடலாம்.
*சைக்கிள் ஓட்டுவது அல்லது நிற்க வைத்த சைக்கிளில் ஏறி 45 நிமிடங்கள் சுற்றுவது, 3 கிலோ மீட்டர் தூரத்தை 30 நிமிடங்களில் நடப்பது.
*நீச்சல் குளம் அருகில் இருந்தால் அதில் நீச்சலடிக்கலாம்.
இதில் ஏதாவது ஒன்றை ஒரு நாளைக்கு 30,45 நிமிடங்கள் செய்தாலே போதுமானது. உடலும், மனமும் சுறுசுறுப்பாய் இருக்கும்.
சிக்கான சிக்கன ஐடியா!
*மோட்டரிலிருந்து தண்ணீர் தொட்டிக்கு செல்லும் குழாய்களை அதிக வளை வில்லாமல் பொருத்தினால் தண்ணீர் விரைவாக மேலேறும்; மின்சாரமும் மிச்சமாகும்.
*காய்ந்த துணியில் தண்ணீர் தெளித்து அதன்மீது இஸ்திரி போட்டால் மின்சாரம் அதிகமாக செலவாகும்.
*தானாக 'டீப்ராஸ்ட்' ஆகாத ப்ரிட்ஜாக இருந்தால் ஐஸ்கட்டி அதிகமாக பிடித்துப் போகாமல் அடிக்கடி டீப்ராஸ்ட் செய்யுங்கள். இல்லாவிட்டால் அதிக மின்சாரம் செலவாகும்.
*கோடை காலங்களில் வாஷிங் மெஷினில் துவைக்கும் பகுதியை மட்டும் பயன்படுத்தவும். டிரையரை குளிர், மழை காலங்களில் மட்டும் பயன் படுத்தினால் மின்சாரம் மிச்சமாகும்.
*ஏசி-யை வருடத்திற்கு இருமுறை சுத்தம் செய்யுங்கள். ஏசி பில்டரை மாதா மாதம் சுத்தம் செய்யுங்கள். இதனால் மின்சாரம் விரயமாவதைத் தவிர்க்கலாம்.
*ப்ரிட்ஜின் கதவு சரியாக மூடாமலிருந்தாலும், அடிக்கடி ப்ரிட்ஜின் கதவைத் திறந்து மூடினாலும் மின்சாரம் பாழாகும்.
*பயன்படுத்தாத போது கம்ப்யூட்டர் மானிட்டரை 'குஃஉஉக MOஈஉ' ல் வைப்பதால் 40 சதவீத மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.
*பல்புகளின் மீதுள்ள தூசியை துடைத்து வைத்தால் அதிக வெளிச்சம் கிடைப்பதோடு, மின்சாரமும் மிச்சமாகும்.
*பயன்படுத்திய விளக்குகள், மின்விசிறி, 'டிவி', கம்ப்யூட்டர் என அனைத்தையும் அணைத்த பிறகே அறையை விட்டு வெளியேறுங்கள்.
*கூடியவரை வீட்டில் பலர் ஒரே அறையில் இருந்து படிப்பது, 'டிவி' பார்ப்பது என திட்டமிட்டால் மின்சார செலவு குறையும்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.
