PUBLISHED ON : அக் 03, 2014

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
அதிசயமே அதிசயம்!
உலக அதிசயம் என்பது, அதுபோல மற்றொன்றை புதிதாக உருவாக்க முடியாது என்பதுதான். தாஜ்மஹால், சீனப் பெருஞ்சுவர் போன்ற இன்றைய உலக அதிசயங்கள் அனைவரும் அறிந்ததே. ஆனால், பழைய உலக அதிசயங்கள் 7 இருந்தன. அதில் ஒன்று மட்டும்தான் இப்போதும் இருக்கிறது. அந்த முதலாவது அதிசயம் எகிப்தில் இருக்கும் சியாபஸ் என்ற மன்னனின் பிரமிடு.
5 ஆயிரம் வருடங் களுக்கு முன்பு கட்டிய அது இன்றும் அழியாமல் இருக்கிறது. 2-வது இடத்தில் இருந்தது, பாபிலோன் தொங்கும் தோட்டம். இது கி.மு.600ல் கட்டப் பட்டது. 335 அடி உயரம் கொண்ட செங்கல் சுவர் இன்று குப்பை மேடாக கிடக்கிறது. நெபுகாத்துநேசர் என்ற அரசன் தனது ராணியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இந்த தோட்டத்தை அமைத்தான். உயரமான சுவர் மேல் அமைக்கப் பட்ட தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு பாய்ச்சுவதற்கு தண்ணீரை எப்படி கொண்டு சென்றனர் என்பது ஆச்சரியமே!
3வது அதிசயம் மோசலசின் சமாதி. ஹெலிகார் நாசஸ் என்ற நகரை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்த மோசலஸ் அரசன் இறந்த பிறகு, அவனது நினைவாக ராணி அழகிய நினைவுச் சின்னம் ஒன்றைக் கட்டினாள். 100 அடி உயரமுள்ள அந்த சமாதியின் மீது அரசனும், அரசியும் புரவிகள் பூட்டிய தேரில் அமர்ந்திருக்கும் சிற்பம் அமைக்கப்பட்டது. இதைக் கட்டி முடித்த சில நாட்களிலேயே அலெக்சாண்டரின் படை யெடுப்பில் அழிக்கப்பட்டது.
4வது அழிந்த அதிசயம் எபிசியஸ் என்னும் இடத்தில் இருக்கும் டயானா தேவதையின் கோவில். கி.மு.350ம் ஆண்டில் கிழக்கு துருக்கியில் கட்டப்பட்டது. மிகவும் புனிதமாக கருதப்பட்ட இந்த கோவிலில் மக்கள் தங்கள் செல்வம், விலை உயர்ந்த பொருட்களை ஒப்படைத்து விட்டு நிம்மதியாக இருப்பர். கி.பி.262ல் இந்த கோவில் கோதஸ் என்ற அரசனால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
5வது அதிசயம் ஹீலியாஸ் என்னும் சூரியக் கடவுளின் வெண்கலச்சிலை. 100 அடி உயர முள்ள இந்த சிலை கிரேட்ஸ் தீவில் அமைந் திருந்தது. சிலையின் வலது கையில் தீபம் மூலம் வீசிய ஒளி, துறை முகத்துக்கு வந்த கப்பல் களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தது. அமைக்கப்பட்ட 56 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட பூகம்பத்தில் இந்த சிலை அழிந்துபோனது.
6வது அதிசயம் ஒலிம்பியாவில் ஜூயஸ் தேவதையின் சிலை. 40 அடி உயரமுள்ள இந்த சிலையின் உடைகள் தங்கத்தாலும், உடல் யானையின் தந்தத்தாலும், கண்கள் விலை உயர்ந்த வைரத்தினாலும் ஆனவை. இந்த கலை அழகு மிகுந்த சிலை மததுவேசத்தால் அழிக்கப் பட்டது.
உலகில் அழிந்து போன 7வது அதிசயம் பரோஸ் தீவில் கி.மு.283ல் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம். 600 அடி உயரத்துடன் ஆயிரத்து 500 ஆண்டுகள் ஒளி வீசிய இந்த கலங்கரை விளக்கம் மிகப்பெரிய பூகம்பத்தினால் அழிந்தது.
டிப்ஸ்!
*வறுவல் அல்லது கூட்டு செய்யும் போது உப்போ, காரமோ அதிகமாகி விட்டால் ரஸ்கை தூளாக்கி அதில் கலந்து விட்டால் போதும். ரஸ்க் இல்லை என்றால் பிரட்டு தூளையும் உபயோகிக்கலாம்.
* அடைக்கு ஊற வைக்கும் போது அரிசி, பருப்புடன் ஒரு கைப்பிடி கொண்டைக் கடலையும், ஊற வைத்து அரைத்து அடை வார்த்தால் மொறுமொறு வென்று இருக்கும்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.
