தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : அக் 10, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 10, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

வரிக்குதிரை - வரி வரியாய்!

* குதிரைக் குடும்பத்தைச் சேர்ந்தது வரிக்குதிரை.

*ஒவ்வொரு வரிக்குதிரையும், தனித்துவமான கருப்பு வெள்ளை வரி வடிவங்களைக் கொண்டது.

*வரிக்குதிரையின் தனித்துவ வரிவடிவமைப்பைப் புரிந்து கொள்ள நிறைய விளக்கங்கள் சொல்லப் படுகின்றன. அவற்றின் வரிகள் கண்களை ஏமாற்றும் தன்மையுடையவை. புல்லுக்குள் மறைந்திருக்கும் போது அதன் கோடுகள் அவற்றை இனம் கண்டு கொள்ளாதவாறு மறைத்துவிடும்.

* ஆப்பிரிக்காவில்தான் வரிக்குதிரைகள் வசிக் கின்றன. சமதளத்தில் வாழும் வரிக்குதிரைகளின் வால் அரை மீட்டர் நீளம் இருக்கும். பாதசாரிகள் சாலையைக் கடக்கப் போடப்படும் கருப்பு- வெள்ளைத் தடங்கள் 'ஜீப்ரா கிராசிங்' என்று அழைக்கப்படுகின்றன.

* வரிக்குதிரையை வேட்டையாடப் புலியோ, சிங்கமோ துரத்தும்போது அது குறுக்கும், நெடுக்கு மாக ஓடித் தப்பிக்க முயலும். கூர்மையான பார்வை, செவித்திறன் உண்டு. நின்றுகொண்டே தூங்கும் இயல்புடையது. புல் மட்டுமே சாப்பிடும். வரிக்குதிரையின் காதுகளை வைத்து அதன் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியும்.

* இவை கூட்டம் கூட்டமாக வாழ்பவை. வரிக்குதிரை கூட்டம், 'ஹரம்' என்றழைக்கப்படு கிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு ஆண் வரிக் குதிரையும், ஆறு பெண் குதிரைகளும் இருக்கும்.

* வேட்டையாடும் விலங்கு அருகில் வந்தால் கூட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு வரிக்குதிரை மற்றதை எச்சரிக்கை செய்யும். சகாக்களை எச்சரிக்க அவை குரைக்கும்.

* மார்ட்டி என்ற பெயருடைய வரிக்குதிரை மடகாஸ்கர் திரைப்படத்தில் நடித்துள்ளது.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!

இது 'மண் கல் தோசை செய்முறை' நேரம்.

பழைய தென் வட ஆற்காடு மாவட்டங்களில் குயவர்கள் மண்ணால் அழகிய தோசைக் கற்கள் செய்து விற்பர். நம் பாரம்பரியத்தைச் சொல்லும் அந்த மண் தோசைக்கற்கள் இப்போதும் தீவனூர், மேல்சித்தாமூர் போன்ற ஊர்களின் தேர்த் திருவிழாக்களின் போது கிடைக்கிறது. இவற்றை வாங்கி வந்து தண்ணீரில் குறைந்தது ஒரு வாரமாவது ஊற வைக்க வேண்டும். பின் அதில் விளக்கெண்ணெய், கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒரு எண்ணெயைத் தடவி ஊற வைக்க வேண்டும்.

பிறகு அவ்வப்போது அதில் தோசை ஊற்றி கல்லைப் பழக்க வேண்டும். பழகிவிட்டால் தோசை நன்றாக வரும். தோசை மாவை மிருதுவாக அரைக்க வேண்டும். கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை ஊற்றி நன்றாகப் பரப்பி விட வேண்டும். திருப்பிப் போட்டு எடுக்க வேண்டும். இந்த தோசை இரண்டு நாட்கள் ஆனாலும் கெடாது. இந்த மண் கல்தோசை சமணர்களின் வீடுகளில் மிகவும் பிரசித்தமானது. இதற்குத் தொட்டுச் சாப்பிட, தாளித்துக் கொட்டிய துவையல் மற்றும் தேங்காய்த் துவையல் நன்றாக இருக்கும்.

தாளித்துக் கொட்டிய துவையல் செய்யத் தேவையானவை:

மிளகாய் வற்றல் -10, புளி- எலுமிச்சை அளவு, கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன், சீரகம், வெல்லம் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு, தேவைக்கு.

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மிளகாயைச் சேர்த்து வறுக்கவும். அதிலேயே கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் போட்டுத் தாளிக்கவும். வறுத்த மிளகாய், புளி, உப்பு, சிறிது தண்ணீர், வெல்லம் இவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கொர கொரப்பாக அரைக்கவும். அதில் தாளித்ததைப் போட்டு இரண்டு சுற்று சுற்றி மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். இது ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us