தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : அக் 17, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 17, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

டவர் கதிர் - நோ பயம்!

செல்போன் கோபுர கதிர் வீச்சால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உடல் நல நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செல்போன்களின் ஆதிக்கம் மேலோங்கி நிற்பதன் காரணமாக இன்று ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு செல்போன் கோபுரங்கள் முளைத்து நிற்கின்றன. இவற்றில் இருந்து வெளியேறும் மின்காந்த அலைகளால் மனிதர்களின் உடல் நலம் பாதிக்கப்படுவதுடன், புற்று நோயும் தாக்குகிறது என்ற தகவல் ஆழமாக பதிவாகி உள்ளது.

இது குறித்தான கவலைகளை தெரிவிக்கும் வகையில் சுற்றுச்சூழல் அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும், நடிகர் - நடிகைகளின் விளம்பர படங்கள் மூலம் நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

இதற்கு மாறாக, செல்போன் கோபுர மின்காந்த அலைகளால் மனிதர்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்ற பிரசாரத்தை இந்திய செல்போன் இயக்குபவர்கள் சங்கத்தினர் தற்போது தீவிரப்படுத்திவருகின்றனர். இதற்கு வலுசேர்க்கும் விதமாக கொல்கத்தாவில் உடல் நல மருத்துவ நிபுணர்கள் பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது அவர்களில் சிலர் தெரிவித்த கருத்துகள் வருமாறு.

மும்பையைச் சேர்ந்த பிரபல கதிரியக்க நிபுணரும், இந்திய கதிரியக்க சங்க தலைவருமான டாக்டர் பாவின் ஜங்காரியா கூறுகையில், 'செல்போன் கோபுரங்கள் நாம் நினைப்பது போல், மனிதர்களின் உடலுக்கு கேடு விளைவிக்கும் கதிர் வீச்சை வெளிப்படுத்தவில்லை. அதில் இருந்து வெளியேறும் ஒரு விதமான கதிர்வீச்சை வைத்து அதனை புற்றுநோயுடன் தொடர்புபடுத்தி கூறுவது அடிப்படை ஆதாரமற்றது' என்றார்.

இந்திய செல்போன் இயக்குபவர்கள் சங்கத்தின் தலைமை இயக்குனர் ரஞ்ஜன் மேத்யூஸ் கூறும் போது, 'அனைத்து விதமான விஞ்ஞான ஆய்வுகளும் செல்போன் கதிர்வீச்சு உடல் ஆரோக்கியத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றே கூறுகின்றன' என்றார்.

டாடா மூலாதார ஆய்வு நிறுவனத்தின் ரசாயனத்துறை பேராசிரியர் ஆர்.வி.ஹோசூர் கூறும்போது, செல்போன் கோபுர கதிர் வீச்சு அதன் பயன்பாட்டிற்கு ஏற்ப உள்ளூரின் தட்ப வெப்ப நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

அமெரிக்காவில் வசிக்கும் பிரபல இந்திய மருத்துவரான சித்தார்த்த முகர்ஜி, மின்காந்த அலைகளுக்கும், புற்று நோய்க்கும் எந்த தொடர்பும் இருப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை என்றார்.

மூளை கட்டிகள் நோய் சிறப்பு நிபுணர் டாக்டர் ராஜேஷ், மொபைல் போன் தொழில் நுட்பத்தில் ரேடியோ அலைவரிசைக்கு பயன்படுத்தப்படும். அதே அளவிலான மின்காந்த அலைகள்தான் உபயோகப்படுத்தப் படுகின்றன. இதுவும் மிக மிகக் குறைவான கதிர்வீச்சுதான். எனவே, இது மனிதனின் மரபணுவை எந்த விதத்திலும் பாதிக்காது என்றார்.

உடனடி வடை!

எளிமையான வடை தயாரிக்கலாமா? அரை டம்ளர் பயத்தம் பருப்பை, பத்து நிமிடங்கள் ஊற வையுங்கள்.

ஊறிய பிறகு, ஐந்தாறு மிளகு, தேவையான உப்பு சேர்த்து, கொரகொரவென்று அரைத்து, சின்ன சின்ன வடைகளாக பொரித்து சூடாக பரிமாறுங்கள்.

மொறு மொறு வடைகள், மளமளவென்று தீர்ந்துவிடும். விருப்பப்பட்டால்... கறி வேப்பிலை, வெங்காயத்தையும் வடை மாவுடன் சேர்த்து கொள்ளலாம்.

என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us