தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : அக் 31, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 31, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

2018 வரை வளரும் கட்டடம்!

உலகிலேயே உயரமான கட்டடம் சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவில் செங் கடலின் ஓரத்தில் கட்டப்பட்டுக் கொண்டி ருக்கும் 'த கிங்டம் டவர்' என்பதே. இந்தக் கட்டடத்தில் வீடுகள், அலுவலகங்கள், உணவு விடுதிகள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டடத்தின் உயரமே இதற்குப் பெருமை சேர்க்கிறது. இது போதாதென்று இதற்கு மற்றொரு பெருமையும் சேரப் போகிறது.

உலகிலேயே உயர்ந்து நின்றால் போதுமா, உயரத்தையும் விரைவாக எட்ட வேண்டும் என்ற ஆசை வருமல்லவா? அதுதான் அடுத்த பெருமை. இங்கு அமையவிருக்கும் லிப்ட் உலகின் மிக வேக மானது என்கின்றனர். இது வினாடிக்கு 32 அடி, 10 மீட்டர் உயரம் செல்லும் வகையில் அமைக்கப் படுகிறது. இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த லிப்ட் பின்லாந்து நாட்டில் தயாராகிறது.

மின் தூக்கிகள் தயாரிப்பில் பிரசித்தி பெற்றுள்ள கோன் நிறுவனம் இந்த லிப்டை உருவாக்கி வருகிறது. சுமார் 660 மீட்டர் உயரத்திற்கு மேல் பயணிக்கப் போகிறது இது. 'அல்ட்ரா ரோப்' தொழில்நுட்பம் என்று அழைக்கப் படும் உயர் தொழில்நுட்ப கார்பன் கேபிள் இந்த லிப்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உயரத்தை நோக்கி லிப்ட் விரைவாகச் சென்றாலும், அதில் பயணிக்கும் நபர்களுக்கு எந்த விதப் பயமும், காதடைப்பது போன்ற உணர்வும் ஏற்படாமல் பயணம் இதமானதாக இருக்கும்படி பார்த்துக் கொள்வோம் என நம்பிக்கையுடன் சொல்கின்றனர் கோன் நிறுவனத்தினர். இந்த லிப்டில் பயன்படும் கேபிள்களை ஆய்வகத்தில் நன்கு சோதனை செய்த பின்னரே பயன்படுத்தியுள்ளனர். எடை குறைந்த ஆனால், உறுதியான இந்த உயர் தொழில்நுட்ப கேபிள்கள் லிப்டின் இனிமையான பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்கின்றனர் இன்ஜினியர்கள். இந்தக் கட்டடத்தில் மொத்தம் 65 லிப்ட்கள் அமைய உள்ளன. இதில் ஏழு லிப்ட்கள் இரண்டு அடுக்குகளைக் கொண்டவை. இத்தனை சிறப்பம்சங்களைக் கொண்ட இந்தக் கட்டடம் 2018ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என்று தெரிகிறது.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!

இது மணத்தக்காளி பொரிச்ச கூட்டு செய்முறை நேரம்!

தேவையானவை: மணத்தக்காளி கீரை - 1 கட்டு, பாசிப் பருப்பு - 1 கப், காய்ந்த மிளகாய் -4, தேங்காய்த் துருவல் - கால் கப், உளுந்து - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, கடுகு, நெய் - தலா 1 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கு.

செய்முறை: மணத்தக்காளி இலைகளைச் சுத்தம் செய்து, நறுக்கி, வேக விடவும். பாசிப் பருப்பை வேக வைத்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுந்து ஆகியவற்றை வறுத்தெடுக்கவும். ஆறியதும், இவற்றுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து நைசாக அரைக் கவும். வேக வைத்த கீரை, அரைத்த விழுது, வேக வைத்த பாசிப் பருப்பு இவற்றுடன் போதுமான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கெட்டியானதும் நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்துச் சேர்த்து இறக்கி வைக்கவும். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம். வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி மணத்தக்காளிக்கு உண்டு.

என்றென்றும் அன்புடன், அங்குராசு!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us