தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : நவ 14, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 14, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

ஐஸ்கிரீம்!

கோடை விடுமுறை ஆரம்பிக்கிறதோ இல்லையோ, அதற்கு முன்னாலேயே வெயில் கொளுத்தத் தொடங்கிவிடும். வெயிலுக்கு இதமாகச் சாப்பிட எத்தனையோ இருக்கிறது. ஆனால், முதலில் நினைவுக்கு வருவது என்ன? ஐஸ்கிரீம் தானே? அது எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?

ஐஸ்கிரீம் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பின்னால் நிறைய கதை இருக்கிறது. ரோம் மன்னன் நீரோவில் தொடங்கி, சீனர்கள் வரை பலருக்கும் ஐஸ்கிரீம் கண்டுபிடிப்பில் தொடர்பு உண்டு. இவர்களிடம் இருந்துதான் ஐரோப்பிய மாலுமி மார்க்கோபோலோ, ஐஸ்கிரீம் தயாரிப்பு முறையைக் கற்றுக் கொண்டார் என்று சொல்வர்.

பண்டைய கிரேக்க, லத்தீன் நாடுகளில் பழத் துண்டுகளுடன் ஐஸ்கட்டியைச் சேர்த்துப் பல உணவு வகைகளைத் தயாரித்து இருக்கின்றனர். இவைதான் ஐஸ்கிரீமின் முன்னோடி. நவீன கருவிகளைப் பயன்படுத்திப் பலர் ஐஸ்கிரீம் தயாரித்திருக்கின்றனர். இருந்தாலும் பெரும் பாலான வரலாற்று ஆய்வாளர்கள், நான்ஸி ஜான்சன் என்பவரின் கண்டுபிடிப்பைத் தான் அங்கீகரித்திருக்கின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த நான்ஸி, 1843ம் ஆண்டு கையால் சுழற்றி இயக்கக்கூடிய ஐஸ்கிரீம் மிஷினை முதன் முதலில் கண்டுபிடித்தார்.

நான்ஸியின் ஐஸ்கிரீம் மிஷினில் சிறியதும் பெரியதுமாக இரண்டு உருளைகள் இருக்கும். பெரிய உருளையினுள் சிறிய உருளை நுழைகிற மாதிரி அமைந்திருக்கும். சிறிய உருளையின் உள்ளே பால், சர்க்கரை, மண மூட்டும் பொருட்கள் ஆகியவை இருக்கும். பெரிய உருளையில் பனிக்கட்டியும், உப்பும் இருக்கும். பால் கலவைக்கு நடுவே தயிர் கடைகிற சிறிய மத்து போன்ற ஒன்று இருக்கும்.

மிஷினைச் சுற்றும் போது, மத்தும் வேக மாகச் சுழன்று பால் கலவையைக் கூழாக்கும். பனிக்கட்டியில் இருக்கும் உப்பு, அதை உரு காமல் வைத்திருக்கும். இப்படியே தொடர்ந்து செய்தால், ஐஸ்கீரிம் கிடைத்து விடும்.

இத்தனை அரிய கண்டுபிடிப்பை நான்ஸி தனக்குச் சொந்தமாக்க விரும்பவில்லை. தன் மிஷினை வில்லியம் யங் என்கிறவருக்கு 200 டாலருக்கு விற்றுவிட்டார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் சமையல் கலை வல்லு நராக இருந்த அகஸ்டஸ் ஜாக்ஸன் என்பவர், நான்ஸிக்கு முன்னரே ஐஸ்கிரீம் செய்து விட்டதாக சொல்கின்றனர்.

1832ம் ஆண்டிலேயே வெள்ளை மாளிகை விருந்தினர்களுக்குப் பலவகை ஐஸ்கிரீம்களை அவர் பரிமாறியிருக்கிறார் என்று சொல்கிறார் கள். இவருடைய தயாரிப்பிலும் பனிக்கட்டியும் உப்பும் இடம் பெற்றிருந்தன. இருந்தாலும் இவர் தன் தயாரிப்பு முறையை வெளிப் படுத்தத் தவறிவிட்டதால், நான்ஸி அந்த இடத்தைப் பிடித்துவிட்டார்.

இனி ஐஸ்கிரீம் சாப்பிடும்போது, அது எப்படி வந்தது என்பதையும் நினைத்துக் கொள்வீர்கள் அல்லவா?

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!

இது, வல்லாரை துவையல் செய்முறை

தேவையானவை: வல்லாரை கீரை - 1 கட்டு, உளுந்து-1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய்-3, மிளகு - அரை டீஸ்பூன், வெல்லம்-சிறிதளவு, புளி-நெல்லிக்காய் அளவு, எண்ணெய், உப்பு -தேவைக்கு.

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய், மிளகு, உளுத்தம் பருப்பைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் சுத்தம் செய்த வல்லாரை கீரையைச் சேர்த்து வதக்கி எடுக்கவும். ஆறியதும் கீரையுடன் வறுத்த பொருட்கள், தேவையான அளவு உப்பு, புளி சேர்த்து விழுதாக அரைக்கவும். மிளகு வாசனையுடன் அருமையாக இருக்கும் இந்தத் துவையல்.

என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us