sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

அதிமேதாவி அங்குராசு!

/

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஜூலை 08, 2016

Google News

PUBLISHED ON : ஜூலை 08, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

'க்ளூ' கிடைக்குமா?

ஒரு குற்றவாளியை கண்டுபிடிக்க மிகவும் தேவைப்படுவது, 'துப்பு.' காட்டுக்குள் மனித நடமாட்டம் இருந்தால் குருவி கூவி மற்ற விலங்குகள், பறவைகளை எச்சரிக்கை செய்யும். வீரப்பனை தேடி காட்டுக்குள் போலீஸ் நுழையும் போதெல்லாம், இந்த குருவி கத்துவதை வைத்துதான் வீரப்பன் தப்பித்து வந்தான்.

இயற்கை பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு, விலங்குகள் மனிதர்களுக்கு, 'துப்பு' கொடுக்கும். நாய்கள் சம்பந்தமே இல்லாமல் குரைக்கும்; பறவைகள் ஒரு குழுவாக இரைச்சலோடு பறந்து செல்லும்.

துறவி நண்டு என்ற ஒருவகை நண்டு பின்பக்கமாக நடக்கும். இதெல்லாம் நடந்தால், பூகம்பமோ, சுனாமியோ வரப்போகிறது என்று அர்த்தம். மனிதனுக்கு தெரியாத இந்த, 'க்ளூ' மற்ற உயிரினங்களுக்கு மட்டும் எப்படி தெரிகிறது என்பதுதான் புரியாத புதிர்.

உலகின் மிக மோசமான போர் வாகனம் நீர்மூழ்கி கப்பல்கள். இரண்டாம் உலகப்போரில், நீர்மூழ்கிப் கப்பலை குறிவைத்து தாக்குபவர்களால் அது தப்பித்ததா? அழிந்ததா? என்பதை கண்டுபிடிக்க முடியாது.

அழிந்தாலும், இருந்தாலும் அது நீரின் மேலே வராது. ஒரு சின்ன, 'க்ளூ'வை வைத்து தான் நீர்மூழ்கி கப்பல் அழிந்ததை கண்டுபிடிப்பர். தாக்குதலில் பாதிப்படைந்த நீர்மூழ்கி கப்பல், நீரில் மூழ்கியதும் அதில் இருந்து வெளிவரும் எரிபொருள் நீரின் மீது மிதக்கத் துவங்கும். இதை வைத்துதான் தாக்கப்பட்டதை உறுதி செய்வர்.

நன்றாக பயிற்சி பெற்ற குற்றவாளிகளால் தங்கள் கையெழுத்தை கூட அடிக்கடி மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், எழுத்துப் பிழைகள் அவர்களை காட்டிக் கொடுத்து விடும். திறமையான தீவிரவாதிகளாக கருதப்படும் பலரும் அடிப்படையில் சரியான கல்வி அறிவு இல்லாதவர்கள். இதனால், அவர்கள் எழுத்துப்பிழையோடு தான் எழுதுவர். உலகம் முழுவதும் போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்கும் பலருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அவர்கள் உருவாக்கும் போலி பாஸ்போர்ட்டில், 'கவர்ன்மென்ட்' என்று வரும் ஆங்கில வார்த்தையில், 'ஆர்' என்ற ஆங்கில எழுத்தை மட்டும் விட்டு விடுவர். இந்த சின்ன, 'க்ளூ'வில் சிக்கிய குற்றவாளிகள் நிறைய பேர்.

களவாணி நோட்டு!

கள்ள நோட்டு பிரச்னையை சமாளிக்க ரிசர்வ் வங்கியின் யோசனைகள் இதோ...

* நோட்டின் முன்பக்கத்தில் ரூபாய் நோட்டின் மைய உச்சியில் 'ரிசர்வ் வங்கி' என இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். அதற்குக் கீழ், 'கியாரன்டீட் பை தி சென்ட்ரல் கவர்மென்ட்' என்ற வாக்கியம் இருமொழிகளிலும் இருக்கும்.

* ரூபாய் நோட்டின் மேல் வலது மூலையிலும், கீழ் இடது மூலையில் அசோக சக்கரத்தின் அருகிலும் ரூபாய் நோட்டின் எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

* நடுப்பகுதியில் எவ்வளவு ரூபாய் என்பது எண்ணாலும், எழுத்தாலும் இருக்கும். அதற்கு கீழே ரிசர்வ் வங்கி கவர்னர் (ஆங்கிலம், இந்தியில்) கையெழுத்திருக்கும்.

* இடது கீழ் மூலையில் அசோக சக்கரம், வலது கீழ் மூலையில் ரிசர்வ் வங்கி சின்னம். வலப்புறம் தேசத்தந்தை காந்தியடிகளின் உருவம், எதிர்ப்புற வெள்ளைப் பகுதியிலும் நிழலாகத் தெரியும்.

* வெளிச்சத்தில் பார்த்தால் சங்கேதக் குறியீடுகள் அடங்கிய கோடு போன்ற நூலிழை தெரியும்.

* பின்பக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கி என (இந்தியில்) குறிப்பிடப்பட்டு கீழ்ப்பகுதியில் வலது, இடது மூலைகளிலும் ரூபாய் மதிப்பு எழுத்தால் ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டிருக்கும்.

* இடது புறத்தில், 15 இந்திய மொழிகளில் ரூபாய் மதிப்பு எழுத்தால் குறிப்பிடப்பட்டிருக்கும். வலதுபுறம் வெள்ளைநிற வெற்றிடப் பகுதி.

* ரூபாயின் கனம் சீரான விகிதத்திலேயே இருக்கும். தாளின் கனத்தில் லேசான சந்தேகம் வந்தாலே புகார் செய்யப்பட வேண்டும்.

என்றென்றும் அன்புடன், அங்குராசு.






      Dinamalar
      Follow us