தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : பிப் 03, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 03, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

எங்களுக்கு தெரியும் மழை, புயல், பூகம்பம் - வருவது!

மழை வருவது, புவியியல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுவது, நம்மை சுற்றி இருக்கும் எல்லா உயிரினங்களுக்கும் தெரியும். வானிலை அறிக்கைகள் பொய்த்தாலும், இவை உணர்த்தும் உண்மைகள் பொய்க்காது.

வானிலை ஆராய்ச்சி கணிப்புகள் இல்லாத காலத்தில், சுற்றி இருக்கும் இயற்கையின் மாறுதலை வைத்து தான், மழை, புயல் வருவதை நம் முன்னோர் யூகித்தனர். ஆனால், இன்றைய நவீன யுகத்தில், நம்மை சுற்றி இருக்கும் இயற்கையை ரசிக்கவோ, கவனிக்கவோ பலரும் விரும்புவதில்லை.

* பறவைகள் வெகு உயரத்தில் பறந்தால், பருவநிலை இயல்பாக இருக்கிறது என்று அர்த்தம். தாழ்வாக பறந்தாலோ அல்லது பறக்கவே இல்லை என்றாலோ மழையோ அல்லது புயலோ வரப்போகிறது என்று அர்த்தம். இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், பறவைகள் இரை எடுக்கும் நேரத்தை தவிர்த்து, வேறு ஒருபோதும் தாழ்வாக பறக்காது

* புயல் வருவதை பறவைகள் முன்கூட்டியே யூகித்துவிடும். அப்போது, உச்சத்தில் சத்தம் எழுப்பும். அவற்றின் செயல்களும், வழக்கத்திற்கு மாறாக இருக்கும்

* சிட்டுக் குருவிகள் மண்ணில் விளையாடினால், மழை வரப்போகிறது என்று உணர்ந்து கொள்ளலாம்... அவை தண்ணீரில் குளித்து மகிழ்ந்தால், வெப்பம் அதிகரித்துவிட்டது என்று அர்த்தம்

* சேவல் வழக்கத்திற்கு மாறாக அதிகாலை தவிர்த்து, வேறு நேரத்தில் தொடர்ந்து கூவுவது, மழை வரப்போவதின் அறிகுறி

* மைனா, தண்ணீரில் புரண்டு விளையாடினால், மழை நிச்சயம் வந்துவிடும்

* நீர் பறவைகள் பொதுவாக கரையோரத்தில் இருக்கும் புதர்களில் அல்லது மண்ணில் ஆழமாக குழி தோண்டி முட்டையிடும். வழக்கத்திற்கு மாறாக மரத்தின் மேல் முட்டையிட்டால், நிச்சயம் மழையை எதிர்பார்க்கலாம்

* இரவில் தான் எப்போதும் ஆந்தைகள் அலறும். பகலில் அலறினால், அந்தப் பகுதியில் மழை பெய்யக்கூடும். அதே வேளையில், அலறல் சத்தம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தால், சூறாவளி ஏற்படப் போகிறது என்று அர்த்தம்

* இரவில் மட்டுமே பறக்கும் வவ்வால்கள், அதிக உயரத்தில் வெகு நேரம் பறந்து கொண்டிருந்தால், அடுத்த நாள் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. மழை, புயல் வரப் போவதற்கு முன், பாம்புகள் அதனுடைய வளையிலிருந்து வெளியே வந்துவிடும்

* தவளை உரத்த குரலில் சத்தமிட்டால், மழை வரப்போகிறது என்று அர்த்தம். அத்தோடு சற்று உயரமான இடத்திற்கு சென்று பதுங்கிக் கொள்ளும். மழை வரப்போவதை மற்ற தவளைகளுக்கு தெரியப்படுத்தி பத்திரமாக இருக்க சொல்லும் அறிவிப்பே தவளைகளின் கூச்சல்

* ஓடும் நதியில் உலாவும் மீன்கள் திடீரென்று நீரின் மேற்பரப்பிற்கு வந்து மழைக்கான முன் எச்சரிக்கையை தெரியப்படுத்தும். பின், நீரின் மேற்பரப்பில் இருக்கும் உணவை சாப்பிட்டு விட்டு, மழை வந்தவுடன் அமைதியாக கீழ் பரப்பிற்கு சென்றுவிடும்

* புயல் வருவதற்கு முன், காற்றழுத்தம் குறையும். இதை புரிந்து கொள்ளும் பசுக்கள், தரையில் படுத்துக் கொள்ளும். சில சமயம் பசுவும், ஆடும் ஒன்றாக ஒரே இடத்தில் பக்கத்தில் நின்று கொள்ளும். புயல் வரப்போகிறது... நம்மை யாராவது வேறு இடத்திற்கு பாதுகாப்பாக கொண்டு போக மாட்டார்களா... என்று செய்கை மூலம் தெரியப்படுத்தும்

* பூனைகள் திடீரென்று வாலை உயர்த்தி வைத்து கொள்ளும். சட்டென்று வாலில் மின்சாரம் பாய்ந்ததை போல உதறும். இது மழை வருவதற்கான அறிகுறி; பூனைகள் நாக்கால் கால் பாதங்களை நக்குவதும், மழை வரவை எதிர்பார்த்து தான்

* புயல், மழை வருவதற்கு முன் கிளிகள் மரத்தில் கூடுகட்டும். அதற்கு தேவையான குச்சிகளை பொறுக்கி செல்வதை பார்த்தே மழை வரப் போவதை அறியலாம்

* மழை வருவதற்கு சரியாக, 45 நாட்களுக்கு முன் சரக்கொன்றை மரங்களில் பூக்கள் கொத்து கொத்தாக பூத்துக் குலுங்கும். அதுபோல், எலுமிச்சம் செடிகள் பூத்து குலுங்கினாலும் மழை வரும்

* சுவற்றில் பல்லிகள் தொற்றிக் கொண்டிருந்தால் மழை வராது. ஒன்று கூட கண்ணில் படாமல் ஓடி ஒளிந்து கொண்டிருந்தால், மழை வரும் என்று பொருள்

* எறும்புகள் சாரை சாரையாக எதையாவது எடுத்து வளைக்குள் சென்றால் மழை வரப்போகிறது என்று அர்த்தம். அவை தனித் தனியாகப் பிரிந்து இருந்தால் மழை வராது என்று புரிந்து கொள்ளலாம்

* எறும்புகள் ஒற்றுமையாக உழைப்பது மழைக்காலத்தில் மட்டும் தான். சில எறும்புகள் மழை வருவதற்கு முன் வேகமாக சென்று, மற்ற எறும்புகளை, 'உஷார்'படுத்தும். வெப்பமான நாட்கள் எறும்புகளுக்கு பிடிக்காது; அந்த சமயங்களில் சண்டை போட்டு கொள்ளும்

* நிலவு எப்போதும் கொஞ்சம் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் தான் தென்படும். காற்று மண்டலத்தில் தூசுகள் அதிகம் சேர்ந்திருப்பது தான் அதற்கு காரணம். காற்று மண்டலத்தில் அழுத்தம் மாறுபடும் போது, அந்த தூசுகள் நீங்கி நிலவு பளிச்சென்று இருக்கும். அதுவும் மழை வருவதற்கான அறிகுறி

* சில நேரங்களில் நிலவை சுற்றி ஒரு வளையம் போல தோன்றும். அது, ஓரிரு நாளில் மழை வரும் என்பதை சுட்டிக்காட்டும்

* குளிர் பிரதேசங்களில் வசிப்பவர்கள், இரவில் நெருப்பு மூட்டி குளிர் காய்வது வழக்கம். அந்த நெருப்பு நேராக உயர எழுந்தால் பருவம் சீராக இருக்கிறது என்று பொருள். அப்படி அல்லாமல் கீழ்நோக்கி சுற்றி சுழன்றால் காற்றழுத்தத்தில், மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்

* எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் ஈக்கள், காற்றில் ஈரப்பதம் அதிகமானால் சோம்பேறியாகிவிடும்; அதிகம் பறக்காது; பக்கத்தில் உள்ளவர்கள் மீது மொய்க்கும். பொதுவாக ஈக்கள் கடிக்காது; மழை வரப்போகும் அறிகுறி தெரிந்தால் மட்டுமே கடிக்கும். அதை வைத்தே மழையின் வருகையை கணித்துவிடலாம்

* பூகம்பம் வருவதை பறவைகள், விலங்குகள் முன்கூட்டியே நன்கு அறியும். பறவைகள் தம் இருப்பிடத்தை விட்டு திறந்தவெளி மைதானத்திற்கு போய் ஒன்று கூடிவிடும். ஆசியாவில் சுனாமி வருவதற்கு முன், கடற்பறவைகள் பறந்து போய் உயரமான இடங்களில் தஞ்சம் புகுந்தது. அந்த நேரம் மிருகங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று அடைக்கலம் புகுந்தன

* பல வீடுகளில் இருந்த வளர்ப்பு பிராணிகளும் வெளியே ஓடி வந்தன. சங்கிலியால் கட்டப்பட்டிருந்த யானைகள் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடின. விலங்குகளின் இந்த வித்தியாச நடவடிக்கைக்கு பிறகு தான் பயங்கரமான சுனாமி வந்தது

* பூகம்பம் வருவதற்கு முன், பறவைகளும், விலங்குகளும் மிகவும் அமைதியாகிவிடும். பூச்சிகள், வண்டுகள் கூட சத்தம் போடாது. நாய் மட்டும் வித்தியாசமாக குரைக்கும்.

என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us