தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஏப் 27, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 27, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!

வேணாம்பா தோழர்களே!

பிடித்த ஐட்டம் தான், ஆனால், இவ்வளவு தீமை இருக்கே... விட்டுடுங்கப்பா!

பீட்சா, பர்கர், பிரைடு ரைஸ், நுாடுல்ஸ் என்று, துரித உணவுகளை வெளுத்துக் கட்டி வந்தவர்கள், இன்று யோசிக்க ஆரம்பித்திருக்கின்றனர். நிச்சயம், இந்த துரித உணவுகள், பல துன்பங்களை ஏற்படுத்துகின்றன.

'பாஸ்ட் புட்' எனப்படும், துரித உணவுகளை, ஆங்கிலத்தில், 'ஜங்க் புட்' என்கின்றனர். தமிழில், சத்தற்ற சக்கை உணவு என்கின்றனர். ஆம்... இவற்றில், புரதம், வைட்டமின், கனிமச் சத்துக்கள் மிக குறைந்த அளவு உள்ளன அல்லது அறவே இல்லாமல் இருக்கின்றன. அதேவேளையில், உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும், உப்பு, கொழுப்பு போன்றவை, மிக அதிகமாக உள்ளன.

துரித உணவுகள் அனைத்திலும், எம்.எஸ்.ஜி., என்று சுருக்கமாக அழைக்கப்படும், மோனோ சோடியம் குளூட்டமேட் என்ற, வேதி உப்பு சேர்க்கப்படுகிறது.

இந்த மோனோ சோடியம் குளூட்ட மேட்டின் வாசனை, மூளையின், 'ஹைப்போதலாமஸ்' பகுதியை துாண்டுகிறது. இப்பகுதி, இன்சுலின், அட்ரினாலின் போன்றவை சுரப்பதை அதிகப்படுத்தும். இதனால், உணவு உண்ண வேண்டும் என்ற உணர்வு அடிக்கடி துாண்டப்படும்.

இளைய சந்ததியினர் அடிக்கடி உணவு உண்பதன் காரணம் இதுதான். இதுமட்டுமில்லாமல், கோதுமையில், தவிடு நீக்கி, சில ரசாயனப் பொருட்களை சேர்த்து, வெண்மையாக்குவர். இதுதான் மைதா. இதில் தயாரிக்கப்படுகிறது பரோட்டா, நுாடுல்ஸ், நாண், ருமாலி ரொட்டி, சமோசா, பீட்சா, குல்ச்சா, பர்கர் போன்றவை. இவற்றில் நார்ச்சத்து இருக்காது.

துரித உணவுகளில் சேர்க்கப்படும் சாயம், பிற வேதிப்பொருட்கள், குடலுக்கு ஆபத்தை விளைவிக்கும்.

துரித உணவுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்த, பகீர் பட்டியல் நீளமானது.

அதிலிருந்து சில...

துரித உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்யாததால், நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில், அலட்சியம் காட்டினால், உடலின் மற்ற உறுப்புக்களும் பாதிக்கப்படும் என்று, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஞாபக சக்தி குறைவு, கவனக்குறைவு, திட்டமிட்டு செயல்படும் திறன் குறைவு என, பல பிரச்னைகள் ஏற்படும். தலைவலி, மனச்சோர்வு, உடல் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு, உணவுக்கு ஏங்குதல் போன்ற வியாதிகள் ஏற்படும்.

உணர்ச்சிகள் கட்டுக்குள் இல்லாமை, வயிற்றுவலி, மூட்டு வலி, நாக்கு வீங்குதல் போன்றவற்றுடன், நரம்பு செல்களும் பாதிக்கப்படும். இதற்கு, பல காரணங்கள் உண்டு என்றாலும், உணவுப் பழக்கத்துக்கு, முக்கிய இடம் உண்டு.

பெண்கள், பருவம் அடைவதற்கு காரணமான, 'ஈஸ்ட்ரோஜன்'

என்னும், ஹார்மோனை அதிகம் சுரக்கச் செய்வதில், துரித உணவுகளுக்கு, முக்கியப் பங்கு உண்டு.

துரித உணவுக் கலாசாரத்துக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு, உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படுவதாக, ஹார்வர்டு, முர்சியா பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இவையெல்லாம் சொல்லும் சேதி, சாப்பிடும் போது சுவையாக இருக்கும், திரும்ப திரும்ப சாப்பிட சொல்லும் துரித உணவுகள், விரும்பத்தகாத பரிசுகள் பலவற்றை தருகின்றன என்பது தான்.

இனி, உணவில், கவனமாக இருப்போம்!

- என்றென்றும் அன்புடன், அங்குராசு!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us