தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஜூலை 20, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 20, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!

மிகப் பெரிய பறப்பான்!

உலகின், மிகப் பெரிய விமானம், சில மாதங்களில், தன் சேவையை துவங்க உள்ளது. 'ஸ்டிராட்டோலாஞ்ச்' என்ற பிரம்மாண்ட விமானத்தை வடிவமைத்தார், அமெரிக்காவை சேர்ந்த பால் ஆலன். இவர், பிரபல கணினி மென்பொருள் நிறுவனமான, மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை, பில்கேட்ஸ்சுடன் இணைந்து நிறுவியவர்.

இவர் வடிவமைத்துள்ள விமானம், மற்ற விமானங்களில் இருந்து, அனைத்து விதங்களிலும் வித்தியாசமாக உள்ளது. இதன் இறக்கைகள் கால்பந்து மைதானத்தை விடப் பெரியவை; நீளம், 385 அடி.

இவ்விமானம், 28 சக்கரங்கள், ஆறு, 'இன்ஜின்கள்' உடையது. ஒவ்வொரு இன்ஜினின் எடையும், 4,000 கிலோ. ஒவ்வொர் இன்ஜினும், ஆறு போயிங் விமானங்களின் இன்ஜின் திறனுக்குச் சமமாக உள்ளன.

இரண்டு விமான உடற்பகுதிகள்; இரண்டிலும், ஒவ்வொரு விமானி அறை உள்ளது. ஆனால், வலது பக்க அறையில் உள்ள விமானி தான் விமானத்தை செலுத்துவர். இடதுபுற அறையில் உள்ள விமானி, கண்காணிப்பை மட்டுமே மேற்கொள்வார்.

இந்த விமானத்தின் மொத்த எடை, 2 லட்சத்து, 26 ஆயிரம் கிலோ. இது, 6 லட்சம் கிலோ எடையுள்ள சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறன் பெற்றது.

விண்வெளிக்கு செயற்கைக் கோள்களைக் கொண்டு செல்லும், போக்குவரத்து ராக்கெட்டாகவும், இந்த விமானம் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், விண்வெளியில் அமைக்கப்படும் சர்வதேச விண்வெளி மையங்களுக்கு, சரக்குகள் எடுத்துச் செல்லவும் பயன்படும்.

இதன் மூலம், விண்வெளி வீரர்கள், பூமியின் உயரமான சுற்று வட்ட பாதைக்கு செல்ல முடியும். அமெரிக்காவில் உள்ள கொலராடோவில் நடந்த, 34வது விண்வெளிக் கருத்தரங்கில், 'ஸ்டிராட்டோலாஞ்ச்' விமானத்தின் முதல் பயணம், சில மாதங்களில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த விமானத்தை தயாரிப்பதற்கான செலவு, 2 கோடி ஆயிரம் ரூபாய் என கடந்த, 2011ல் மதிப்பிடப்பட்டது. உண்மையில் எவ்வளவு செலவாகியிருக்கிறது என்ற விவரம் வெளிவரவில்லை.

காற்று மாசு!

உலகில், 95 சதவீத மக்கள், சுத்தமற்ற காற்றைச் சுவாசிப்பதாக, சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. நகரமயமாக்கல் காரணமாக, வளரும் நாடுகளில், இப்பிரச்னை அதிகம் காணப்படுவதாக, அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள, காற்று துாய்மை அளவை, 60 சதவீத நாடுகள் இன்னும் எட்டவில்லை என்றும், அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசால், கடந்த ஆண்டு இறந்த, 50 லட்சம் பேரில், பாதிக்கும் மேற்பட்டோர், இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த, 2016ல், உலகில், 200 கோடிக்கும் மேற்பட்டோர், காற்று மாசு தாக்குதலுக்கு ஆளாயினர் என்றும், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காள தேச நாடுகளில், 2010ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, காற்று மாசுபாட்டின் அளவு, மிக அதிக அளவில் அதிகரித்து உள்ளது என்றும் கூறுகின்றனர்.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us