தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : செப் 07, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 07, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!

கன்னமே என் கன்னமே!

முகத்தை, மெருகேற்றிக் காட்டுவது, செழுமையான கன்னங்கள்! ஆப்பிள் போல கன்னங்கள் இருந்தால், அழகில், 'அப்சரஸ்' தான் நீங்கள்! சிலருக்கு, தளதள கன்னங்களே கவலை தரும். ஆம்... முகத்தை, இன்னும் பருமனாக காட்டும்.

அழகு நிலையத்தில் அடிக்கடி, 'பேஷியல், ப்ளிச்சீங்' செய்வதால், தோலின் இறுக்கம் தளர்ந்து, தக்காளி கன்னங்கள் தொய்வடைய வாய்ப்பு உண்டு. 'முகம் குண்டாக தெரியுது...' என்று அலுத்துக் கொள்வோர், கவலைப்பட வேண்டாம்.

கன்னங்களைக் குறைத்து, பொலிவை காக்க...

* தினமும் காலையில், கேரட், தக்காளி சாறு குடிக்கலாம்

* பார்லி பொடியுடன், கேரட் சாறு கலந்து, வாரம் இருமுறை, முகத்தில் பூசிக் கழுவலாம்

* கேரட் சாறுடன், கால் டீஸ்பூன் முல்தானி மட்டி துாள் கலந்து, வாரம் ஒருமுறை பூசலாம்

தொடர்ந்து, செய்து வந்தால், உப்பிய கன்னங்கள் உள் வாங்கி, பளபளப்பும், பொலிவும் கூடும்.

வயது ஏறுவதாலோ, அழகுநிலையம் தந்த பரிசாலோ கன்ன சதை இளகி தொங்குகிறதா...

அதை சரிசெய்ய...

* சர்க்கரை, வெள்ளரி விதைகளை சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். அந்த பொடியில், ஒரு டீஸ்பூன் எடுத்து, ஒரு சிட்டிகை மஞ்சள் துாள் கலந்து, முகத்தில் சீராகப் பூசுங்கள்.

* தேங்காய் எண்ணெய், 50 கிராம் காய்ச்சி, அதில், 25 கிராம் கஸ்துாரி மஞ்சள் துாள், 10 கிராம் விராலி மஞ்சள் துாள், சிறு துண்டாக்கிய, 10 வெட்டி வேர் சேர்த்து மூடி வையுங்கள்.

தினமும் குளிக்கும் முன், இந்த தைலத்தை கன்னங்களில் மேலிருந்து கீழாக தேய்த்து விடுங்கள். இப்படி செய்வதால், வறண்டு தொய்ந்த தோலில், எண்ணெய்ப் பசை ஏறி, கன்ன சதை இறுகும்.

சிலருக்கு, தலையில் நீர் கோர்த்துக் கொண்டாலும், முகம் பெரிதாக தெரியும். இதற்கு, கறிவேப்பிலை சாறு அருந்தலாம்; வாழைத்தண்டு, முள்ளங்கி வேக வைத்த தண்ணீர் அருந்துவதும் அருமருந்து. அது, முகத்தில் நீரை வற்றச் செய்து, சீரான வடிவம் கொடுக்கும்.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us