தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஜூலை 12, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 12, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கமும் டாலரும்!

ஒவ்வொரு நாட்டிலும், வங்கிகளுக்கான, தலைமை அமைப்பு இருக்கும். அந்தந்த நாட்டு பொருளாதாரத்தைச் சீராக பராமரிக்கும் பொறுப்பு அதற்கு உண்டு.

இந்த தலைமை அமைப்பை, 'மத்திய வங்கி' என்பர். அது, பலவாறாக பணத்தை முதலீடு செய்யும். அதில், தங்கத்துக்குப் முக்கிய இடம் உண்டு.

உலக நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள், 1977 க்குப்பின், 2018ல் தான், மிக அதிக அளவில், தங்கத்தை வாங்கிக் குவித்திருக்கின்றன என்பதை, உலகத் தங்க கவுன்சில் கூறுகிறது.

கடந்த ஆண்டு, உலகில் உள்ள மத்திய வங்கிகள், வாங்கிய தங்கத்தின் அளவு, 651.5 டன். ஆசியா, ஐரோப்பா கண்டங்களில் விரிந்துள்ள ரஷ்யா, ஆசியாவில் உள்ள இந்தியா, கஜகஸ்தான், ஐரோப்பாவில் உள்ள துருக்கி, போலந்து போன்ற நாடுகள் தான் அதிக அளவில், தங்கத்தை வாங்கி குவித்துள்ளன.

அமெரிக்க பொருளாதார வலிமையைக் காட்டும் சின்னம், அவர்களது ரூபாயான, டாலர் தான். டாலர் விலை ஏறினால், தங்கம் விலை இறங்கும்; தங்கம் ஏறினால் டாலர் இறங்கும். அதனால் தான், டாலருக்கு இணையாக, தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.

இந்தியாவின் தலைமை வங்கி, ஆர்.பி.ஐ., என்ற ரிசர்வ் வங்கி. இந்த வங்கியிடம், 500 ரூபாய் மதிப்பில் டாலரும், 500 ரூபாய் மதிப்பில் தங்கமும் இருப்பதாக, வைத்துக் கொள்வோம்.

அமெரிக்க - சீன வர்த்தகப் போரால், டாலர் விலை, 45 ரூபாய்க்கு சரிந்து விட்டது என்றால், தங்கம் விலை, 55 ரூபாயாக அதிகரிக்கும். வர்த்தகப் போர் சீராகி, டாலர், 60 ரூபாய் என, மதிப்பு அதிகரித்தால், தங்கத்தின் விலை சரியும்.

இப்படி, டாலர் விலை மாற்றங்களை அனுசரித்து, சொத்து மதிப்பை சரி செய்து கொள்ளத்தான் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.

ஜன., 1, 2018ல், ரிசர்வ் வங்கியில் பரிமாற்றப்படி, அமெரிக்க டாலரின் மதிப்பு, 63.66 ரூபாய். ஜனவரி 1, 2019ல், அமெரிக்க டாலர் மதிப்பு, 69.43 ரூபாய். கிட்டத்தட்ட, 9.06 சதவீதம், இந்திய மதிப்பில் அதிகரித்திருக்கிறது.

ஜனவரி 1, 2018ல், 22 கேரட் தங்கம், 1 கிராம் விலை, 2,821 ரூபாய். அதே தங்கம், இந்த ஆண்டு, ஜன., 1ல், 3,246 ரூபாய். ஓராண்டு முதலீட்டில் லாபம், 15.06 சதவீதம் அதிகரித்துள்ளது.

எனவே, டாலரில் முதலீடு செய்வதற்கு பதில், தங்கத்தில் முதலீடு செய்து, அந்த லாபத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாய், ஏற்ற இறக்கத்தைச் சரி செய்து கொண்டு வருகிறது, நமது ரிசர்வ் வங்கி.

அதனால் தான், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, 9.06 சதவீதம் அதிகரித்த போதும், தங்கத்தின் மூலம் கிடைத்த, 15.06 சதவீத லாபத்தால் சமாளிக்க முடிந்தது.

இப்படி, ஒரு முதலீட்டில் ஏற்படும் நஷ்டத்தை, வேறு முதலீட்டைக் கொண்டு சமாளிப்பதற்கு, 'ெஹட்ஜிங்' என்று பெயர். இதே நுட்பத்தைத்தான், ஆசியா, ஐரோப்பாவில் விரிந்துள்ள ரஷ்யா, ஐரோப்பாவில் உள்ள அர்ஜென்டினா, போலந்து போன்ற நாடுகளும் பின்பற்றி வருகின்றன.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us