தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஆக 30, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 30, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உருளையில் குண்டு!

உருளைக் கிழங்கு மூட்டையில் வந்த கையெறி குண்டு, பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆசியா கண்டம், ஹாங்காங்க், சாய் குங் மாவட்டத்தில், தின்பண்டங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. அங்கு, உருளைக் கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளியின் கையில், மர்மபொருள் சிக்கியது. அது, கையெறிகுண்டு. இதையடுத்து, பெரும் பதற்றம் உருவானது.

உடனடியாக, போலீஸ் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். முதல் உலகப் போரின் போது தயாரிக்கப்பட்ட குண்டு என, விசாரணையில் தெரிய வந்தது. அதை செயலிழக்க செய்தனர்.

போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'ஐரோப்பா கண்டம், பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்த உருளைக்கிழங்கு மூட்டையில், கையெறி குண்டு இருந்தது. முதல் உலகப் போர் நடந்த இடத்தில், உருளைக் கிழங்கு பயிரிட்ட விவசாயிக்கு கிடைத்த கையெறி குண்டையும், தவறுதலாக மூட்டையில் கட்டி அனுப்பி விட்டார்...' என்றனர்.

கோபம் தணிக்கும் விலை!

கோபம் தலைக்கேறி விட்டால், கையில் இருப்பதை சிலர் விட்டெறிவர்; கண்ணில் படுவதை எல்லாம் உடைத்து நொறுக்குவர். இதனால், கோபம் குறையுமோ என்னவோ...

ஆனால் கோபத்தை தணிக்கும் தொழில் வாய்ப்பாக, இந்த செயல்களை பயன்படுத்துகின்றனர் சீனர்கள்.

பொருட்களை உடைத்து, கோபத்தை தணிக்க, ஆசியா கண்டம், சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஒரு கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு, 'ஆங்கர் ரூம்' என்று பெயர். இந்த கடையில், 'டிவி' பெட்டி, சுவர் கடிகாரம், அலைபேசி என, வீட்டில் பயன்படுத்தும், மின்னணு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உரிய பணத்தை செலுத்தி, கோபத்தை, அந்த பொருட்கள் மீது காட்டலாம். அவற்றை ஆவேசமாக உடைக்கும் போது, பின்னணி இசையும் ஒலிக்கும்.

இந்த கடைக்குள் நுழைந்து, கண்ணில் படும் பொருட்களை துாக்கியெறிந்து உடைக்க, அரை மணி நேரத்துக்கு, ஐந்து ஆயிரம் ரூபாய் கட்டணம்.

உடைப்பவர் மீது காயம் ஏற்படக் கூடாது அல்லவா... அதற்காக, பிரத்யேக உடையும் வழங்கப்படுகிறது; பாதுகாப்பு கவசமும் உண்டு.

உடைத்து கோபம் தணிக்கும் கடைக்கு, 20 முதல், 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், அதிகம் வருவதாக புள்ளி விவரமும் சேகரித்துள்ளனர்.

'மன அழுத்தத்தை போக்கவே, இந்த கடையை திறந்திருக்கிறோம்; வன்முறையை ஊக்குவிப்பது எங்கள் நோக்கமல்ல...' என்றும், கடை உரிமையாளர், நல்ல பிள்ளையாக கூறியுள்ளார். உடைப்பதற்கும் ஒரு விலை உண்டு!

எளிய செயல்!

வெள்ளி நகைப் பெட்டியில், ஒரு சாக்பீசை போட்டு வைத்தால், காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சும்; வெள்ளி நகைகள், கறுத்து போகாது.

வாந்தி வரும் உணர்வு ஏற்பட்டால், ஒரு கிராம்பையோ, சிறிது ஓமத்தையோ, வாயில் போட்டு நிதானமாக மெல்லவும்; வாந்தி உணர்வு விலகும்.

பத்து துத்தி இலைகளையும், ஐந்து சின்ன வெங்காயத்தையும், வாயில் இட்டு, மென்று விழுங்கினால், மூலநோய் குணமாகும்.

அப்பளத்தை, குளிர்சாதனப் பெட்டியில் சிறிது நேரம் வைத்து, பொரித்தால் சிவந்து போகாது; எண்ணெய் தேவையும் குறையும்!

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us