தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : அக் 04, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 04, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எக்ஸ்ரே அதிசயம்!

ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் பிறந்தவர் ரோன்ட்கன்; இயற்பியல் ஆராய்ச்சியாளர்.

ஆய்வுக்கூடத்தில், ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது, அறை மூலையில், சம்பந்தமில்லாமல் வெளிச்சம் வந்தது. அந்த ஒளியின் மூலத்தை அறிய முயன்றார்.

ஒளி வர வழியே இல்லாத அறை அது. பல தடுப்புகளை கடந்து, பக்கத்து அறையில் இருந்து, ஒளி ஊடுருவுவதைக் கண்டார். அடர்த்தியான கறுப்புத் துணியால், மூடிப் பார்த்தார்; தடைபடவில்லை.

முடிவில், இரும்பு போன்ற உலோகங்களை தவிர்த்து, அனைத்தையும் ஊடுருவும், 'ஒளிகதிர்' என, தெரிந்து கொண்டார். அது தான், 'எக்ஸ்ரே' கதிர்.

அது, மருத்துவ உலகில், மிகப்பெரிய மாறுதலைக் கொண்டு வந்தது. 'கால்களுக்கு பொருத்தமான செருப்பை, எக்ஸ்ரே உதவியுடன் கண்டுபிடித்து தயாரிக்கிறோம்...' என, செருப்பு வியாபாரத்திலும் பயன் படுத்தப்பட்டது.

இந்த ஊடுருவும் ஒளிக்கதிரை கண்டுபிடித்த அறிஞர் ரோன்ட்கனுக்கு, 1901ல் நோபல் பரிசு கிடைத்தது.

எக்ஸ்ரேயை பயன்படுத்துவதால், கண்ணில் எரிச்சல் வருவதாக, அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் புகார் சொன்னார்; அந்த புகார் எழுந்த சில நாட்களில், எடிசனின் உதவியாளர் டாலி, தோல் புற்றுநோயால் மரணம் அடைந்தார்.

அவ்வளவு தான்... எக்ஸ்ரேவை பயன்படுத்தியவர்கள் எல்லாம், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என, ஓட ஆரம்பித்தனர்.

மருத்துவ உலகம் விழித்தது. எக்ஸ்ரே பயன்பாட்டுக்கு, கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது.

இன்றைய மருத்துவத்தில், துல்லியமாக நோயைக் கண்டறியவும், விமானம், கப்பல் போக்குவரத்துகளில், ஆபத்தான பொருட்களை கண்டறியவும், எக்ஸ்ரே பயன்படுகிறது.

இந்த கதிர் பயன்பாடு இல்லாத உலகத்தை, இதே வசதிகளுடன் நினைத்து பார்க்க முடியாது. நுாறு ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விடும்.

எக்ஸ்ரே போல, பல அதிசயங்களை கண்டுபிடித்துள்ள அறிவியல் உலகம், இன்று வளர்ந்து செழித்து வருகிறது.

தமிழும், நாசாவும்!

இணையத்தில் கிடைக்கும், இரண்டு முக்கிய அலைபேசி செயலிகள் பார்ப்போம்...

நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்... போன்ற பொது அறிவு கேள்விகளுக்கு, விடை தெரிந்திருப்பது முக்கியமானது.

இது போன்ற, 'முதல்'களுக்கு, 'க்விஸ்' வடிவில் பதில் சொல்லும் அலைபேசி செயலி, 'first indian men and women' என்ற பெயரில் கிடைக்கிறது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'நாசா' ஒரு அலைபேசி செயலியை, 'NASA' என்ற பெயரிலேயே வெளியிட்டுள்ளது. இது, சுவாரசியமான தகவல்களைத் தந்து ஆச்சரியப்படுத்துகிறது. அறிவியலில் ஆர்வம் மிக்க சிறுவர், சிறுமியர் பயன்படுத்தி முன்னேறலாம்.

விண்வெளி ஆராய்ச்சிகளில், இதுவரை நாசா கண்டறிந்த, 15 ஆயிரத்துக்கும் அதிகமான கண்டுபிடிப்புகளை படங்களாகவும், 13 ஆயிரத்துக்கும் அதிகமான வீடியோக்களையும், பதிவேற்றி உள்ளது. நாசா 'டிவி' நேரடி ஒளிபரப்பையும் இந்த செயலியில் பார்க்கலாம்.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us