தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : மே 27, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 27, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!

முதலில் சீனி போட்டால் பணக்காரர் ஆகலாம்!

உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான மூட நம்பிக்கை உண்டு. ஜப்பான் நாட்டில் பாம்புகள் மகாலட்சுமியின் அடையாளங்கள். அதிலும் வெள்ளைநிற பாம்புகள் என்றால் கொள்ளை லாபம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

பல வீடுகளின் வரவேற்பறையில் வெள்ளைப் பாம்பு படத்தை மாட்டி வைத்திருப்பார்கள் ஜப்பானியர்கள். பாம்பை கொல்லவே மாட்டார். வீட்டுக்கு பாம்பு வந்தாலும் விரட்டமாட்டார். பாம்பை விரட்டுவது மகாலட்சுமியை வெளியே தள்ளி கதவை பூட்டுவது போல என்பது அவர்களின் நம்பிக்கை. பாம்பின் தோலை கொஞ்சம் வெட்டி எடுத்து பர்சில் வைத்துக் கொள்வர். இப்படி செய்தால் எவ்வளவு செலவழித்தாலும் பணம் பர்சில் குறையவே குறையாதாம். கொரியாவில் காலையில் வேலைக்குப் போகும் போது காகத்தை பார்த்து விட்டால், அவ்வளவுதான், 'அப்செட்' ஆகிவிடுவர். பள்ளிக்கூட பிள்ளைகள், அதிலும் தேர்வு எழுதச் செல்பவர்கள் காகத்தைப் பார்த்தால் பரீட்சையில் பெயில் ஆவது உறுதியாம்.

ரஷ்யாவில் கண்ணாடியை வைத்தே ஏகப்பட்ட சென்டிமென்ட் கதைகள் சொல்கின்றனர். அங்கே உடைந்த கண்ணாடியை பார்க்க மாட்டனர். மீறிப் பார்த்தல் கெட்டதே நடக்குமாம். அர்ஜென் டினாவில் போகிற பாதையில் கீழே கிடந்து காசு எடுத்தால் உடனே எடுத்து பத்திரப் படுத்திக் கொள்வர். அது அதிர்ஷ்டத்தின் அறிகுறியாம். காசு மேலே காசு வந்து கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம். ஒரெயொரு நிபந்தனை. கீழே கிடந்து எடுத்த பணத்தை செலவு செய்யக்கூடாது.

துருக்கியில் பூனை சென்டிமென்ட் உண்டு. அவர்கள் கறுப்பு பூனையை பார்த்தால், உடனே தங்கள் தலைமுடியை ஒரு கையால் பிடித்துக் கொள்வர்... இல்லையென்றால் கெட்டது நடக்குமாம். பாவம். வழுக்கைத் தலை ஆசாமிகள். நம்மூரில் நரிக்கொம்பு நம்பிக்கை போல் மெக்ஸிகோவில் முயல் வால். முயல் வாலின் ஒரு பகுதியை பர்சில் வைத்துக் கொண்டால் நல்லது மட்டுமே நடக்கும். அதனால்தான் அங்கு முயல்கள் மனிதர்களைப் பார்த்தாலே தலைதெறிக்க ஓடுகின்றன.

பிரேசிலில் எங்கு சென்று காபி கேட்டாலும் கப்பை எடுத்துக் கொண்டு அதில் முதலில் சர்க்கரையைத்தான் போடுவார். தப்பித்தவறி முதலில் காபியை ஊற்றி விட்டு பின் சர்க்கரை போட்டால் அழ ஆரம்பித்து விடுவார். முதலில் சீனி போட்டு பின்னர் காபியை ஊற்றினால் பணக்காரர் ஆகலாம். அதை விட்டு முதலில் காபியை ஊற்றி விட்டு பின்னால் சர்க்கரையை போட்டால் அவன் பணம் கரைந்து ஏழையாகி விடுவானாம். அதனால் அங்கு எப்போதுமே சர்க்கரைக்கு தான் முதலிடம்.

ஜெயிக்க-படிங்க!

நம் எல்லாரிடமும் அளவற்ற ஆற்றல் சக்தி இருக்கிறது. ஆற்றல் என்பது நம்பிக்கை. ஆற்றல் சக்தியை சரியாகப் பயன்படுத்த நாம் தெரிந்து கொண்டு செயல்படும்பொழுது, நமது வளர்ச்சியைக் கண்டு நாமே ஆச்சரியப்படுவோம்.

நாம் எந்தவொரு செயலிலும் வெற்றி பெற நம்பிக்கையெனும் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும். அவ்வாறு செய்தால் வெற்றி எளிது.

1. உங்களுடைய தேவை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு பதிலாக நீங்கள் யாருக்கு அல்லது இவ்வுலகுக்கு என்ன கொடுக்கப் போகிறீர்கள் என்பதை தீர்மானியுங்கள்.

2. நீங்கள் ஆசைப்படும் பொருள்களை அடைவ தில் உறுதியாக இருங்கள். பிரார்த்தனை மூலம் உங்கள் கற்பனையைத் தூண்டி விடுங்கள். ஆசைப்படும் பொருள்கள் உங்களிடம் இருப்பதாகக் கற்பனை செய்யுங்கள். உண்மையிலேயே உங்களுக்குக் கிடைத்துவிட்டது போல பாவனை செய்யுங்கள்.

அடைய விரும்பும் எதையும் முதலில் மனதில் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

3. உங்களுக்கு உள்ளிருந்து வரும் வழி காட்டுதலை ஏற்றுக்கொள்ளுங்கள். அதற்காக எப்போதுமே திறந்த மனதுடன் இருங்கள். உங்கள் திட்டங்களைச் சீரமைக்கும்படியோ அல்லது ஒரு புதிய திட்டதில் இறங்கும்படியோ உங்களுக்குள் பொறி தட்டினால் தயக்கமோ சந்தேகமோ இல்லாமல் உடனடியாக அதைச் செயல் படுத்துங்கள்.

4. தோல்வியை எதிர்கொள்ள நேரிட்டால் நீங்கள் பல வழிமுறைகளில் சோதிக்கப்பபடுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களுக்கான சோதனைக் கட்டங்களில் ஒன்று இந்தத் தோல்வி என எண்ணுங்கள். எழுந்து நின்று விடுவீர்கள்.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!

இது 'கொத்தமல்லி தக்காளி தொக்கு'

தேவையானவை:

பழுத்த தக்காளி - 5, மல்லித்தழை -ஒரு கட்டு, மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன், பூண்டு-6 பல், வெந்தயம்-அரை டீஸ்பூன், பெருங்காயம்-அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும். எண்ணெய்யைக் காயவைத்து கடுகு, சீரகம், தாளித்துப் பூண்டைச் சேர்த்து, நன்கு சிவக்க பொன்னிறமாகப் பொரிந்ததும், தக்காளியைச் சேர்க்கவும். அதனுடன் உப்பு, மிளகாய்தூள் சேர்க்கவும். அரை கப் கொதி நீரில் புளியைக் கரைத்து வடிகட்டவும். இதனுடன் தக்காளி சேர்த்து கொதித்து வரும் போது கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய மல்லித்தழையைப் போட்டு வெந்தயத்தூள் பெருங்காயத்தூளைச் சேர்த்துச் சுருண்டு வரும் வரை கிளறி இறக்கவும்.

அன்பு கலாம் காலம்!

சூரிய சக்தி மிகுதியாக இருக்கிறது. கூடுதல் சக்தியை சேமிக்கும் சூரிய கலன்களை நாம் தயாரித்தால் அது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

நேனோ டெக்னாலஜி இதற்கு பெரும் பங்கு வகிக்கும். கார்பன் நேனோ டியூப் சூரியகலன்களின் சக்தியை அதிகரித்து வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்றும் அன்புடன்,
அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us