தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஏப் 24, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 24, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உருளைக்கிழங்கு!

உருளைக்கிழங்கு என்பது ஒருவகை செடியின், மாவு நிறைந்த வேர்ப்பகுதி. இதன் அறிவியல் பெயர், சோலானம் டியூபரோசம். இந்த தாவரம் நிழற்செடி குடும்பத்தைச் சேர்ந்தது. அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.

உருளைக்கிழங்கு பற்றி சுவாரசியமான தகவல்கள் பல உண்டு.

தென் அமெரிக்கா, லாம்பா கிராமத்தில் விழா ஒன்று நடந்து கொண்டிருந்தது. அதில் ஒரு ஊர்வலம் நடந்தது. முன் பகுதியில், மேளதாளத்துடன் நடனக்குழு சென்றது; பின் பகுதியில், பட்டுத் நுாலில் நெய்த ஆடைகள் அணிந்து வண்ணமயமாக சென்றனர் மக்கள்.

அதில், ஆறு பேர், ஒரு பெரிய மூட்டையை தாங்கி பிடித்திருந்தனர். அதன் உள்ளே இருந்த வி.ஐ.பி., வேறு யாருமல்ல; உருளைக் கிழங்கே தான். அங்கு, ஐந்து நுாற்றாண்டுகளுக்கு முன், உருளைக்கிழங்கு நடும் திருவிழா தான் இது!

தென் அமெரிக்காவில் உள்ளது ஆண்டிஸ் மலைப்பகுதி. இதுதான் உருளைக்கிழங்கின் தாயகம்; இந்த மலைத்தொடரில், தென் அமெரிக்க நாடுகளான பொலிவியா, சிலி, பெரு ஆகியவை இணைந்துள்ளன.

ஐரோப்பாவிலிருந்து, 16ம் நுாற்றாண்டில் சென்ற ஸ்பானிஷிய படை, தென் அமெரிக்காவை கைப்பற்றியது. அது முதல் உருளைக்கிழங்கின் தலையெழுத்து மாறியது.

ஆண்டிஸ் மலைத் தொடரில் உருளைக்கிழங்கு கண்டு வியந்த ஸ்பானியர்கள், அதன் ருசியை அறிந்து ஐரோப்பாவிற்கு கொண்டுவந்தனர்; பின், அவர்கள் ஆதிக்கம் செலுத்திய நாடுகளுக்கெல்லாம் கொண்டு சென்றனர்.

பிறந்த மண்ணில் தான் வளர்வேன் என பிடிவாதம் செய்யாமல், சென்ற இடங்களில் எல்லாம் செழித்து, மகசூல் தந்தது உருளைக்கிழங்கு. கொஞ்சம் தண்ணீர் குடித்து, வேர் நிறைய புரோட்டீன் பெருக்கி, மனிதர்கள் வயிற்றை நிறைத்தது.

உலகம் எங்கும், 18ம் நுாற்றாண்டில் விவசாயம் வளர்ச்சியடைந்தது; கோதுமை, சோளத்துடன், உருளைக்கிழங்கையும் பயிரிட துவங்கினர். இதை ஊக்குவிக்கும் விதமாக, ஐரோப்பா கண்டத்தில் விவசாயிகளுக்கு போட்டிகள் நடத்தபட்டன.

உலக அளவில், ஆசிய நாடான சீனாவில் அதிக அளவில் உருளைக்கிழங்கு உற்பத்தி நடக்கிறது. அடுத்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இது, 2017 ம் ஆண்டு புள்ளி விவரம்.

பூனை ராஜினாமா!

ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, லண்டன் வெளியுறவு அமைச்சகத்தில் நான்கரை ஆண்டுகளாக பணியாற்றிய, 'சீப் மவுசர்' ஓய்வு பெற உள்ளது. இது,

ஒரு பூனை; பெயர் பால் மார்ஸ்டன். அலுவலகத்தில், எலிகளை நுழையவிடாமல், காவல் பணியை கச்சிதமாக செய்து வந்தது. ஓய்வுபெற்றதும், கிராமத்துக்கு செல்லப்போவதாக, 'டிவிட்டர்' சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில், இரண்டு முறை பிரதமர் பதவி வகித்தவர், பால் மார்ஸ்டன். முதன்முறை பதவி ஏற்றபோது, காலனியாக இருந்த இந்தியாவின் முதல் சுதந்திரப்போரான, சிப்பாய் கலகம் வெடித்தது.

இதையடுத்து, காலனிய ஆட்சி முறையில் மாற்றம் செய்தார். இந்தியாவில், அதுவரை நடந்து வந்த, கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிமுறை முடிவு கட்டப்பட்டது. இங்கிலாந்து அரசே நேரடியாக ஆட்சி நடத்தியது. ஓய்வு பெறப்போகும் பூனைக்கு, மறைந்த பிரதமர் பால் மார்ஸ்டன் நினைவாக, பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள லண்டன், டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் சேவை செய்கிறது, லேரி என்ற பூனை.

பிரிட்டிஷ் நிதியமைச்சக கோப்புகளை, எலிகளிடமிருந்து காத்து வருகிறது, கிளாட்ஸ்டோன் என்ற பூனை. இவை, பணியில் தொடரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயர் வந்தது எப்படி...

உருளைக் கிழங்கை ஆங்கிலத்தில், 'பொட்டேட்டோ' என்பர். இது, ஸ்பானிஷ் மொழி சொல்லான, 'பட்டட்டா' என்பதில் இருந்து பிறந்தது.

ஆஸ்திரேலியா கண்டம் நியூசிலாந்தில் உள்ள விவசாயிகள் உருளைக்கிழங்கை கொடுத்து, துப்பாக்கி, இரும்பு போன்றவை வாங்கினர். தென் அமெரிக்க நாடான பெருவில், 1,400 ரக உருளைக்கிழங்குகள் இருந்தன.

சர்வதேச உருளைக்கிழங்கு மூன்றாம் மாநாடு, குஜராத் மாநிலம், காந்தி நகரில், 2020ல் நடந்தது. ஐக்கிய நாடுகள் சபை, 2008ம் ஆண்டை, சர்வதேச உருளைக்கிழங்கு ஆண்டாக அறிவித்தது.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us