தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஜன 22, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 22, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பேனாவும் சுற்றுச்சூழலும்!

உலக அளவில் பயன்படும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்று பேனா. ஆதி காலத்தில் விலங்கு வேட்டைக்கு பயன்படுத்திய கூர்மையான கற்களை எழுதுகோலாக பயன்படுத்தினர் மனிதர்கள். பின், எலும்பை பயன்படுத்தி, களிமண்ணில் குறியீடுகளாக எழுதினர்.

விலங்கு தோலை, எழுத பயன்படுத்தினர் கிரேக்கர்கள். பின், 'பாப்பிரஸ்' என்ற காகிதம் போன்ற ஒன்றை கண்டுபிடித்தனர். அதில், எழுதுகோலை பயன்படுத்தி எழுதினர்.

ஐரோப்பாவில் ரோமை சேர்ந்தவர்கள், மரப்பட்டையில் மெழுகை தடவி, உலோக எழுத்தாணி கொண்டு, கி.மு., 1300ல் எழுதியதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆப்ரிக்க கண்ட பகுதியான எகிப்தில், 'ரீட்' என்ற வகை பேனாவை கண்டுபிடித்தனர். சதுப்பு நில புல்வகையை சேர்ந்த ஒருவகை மூங்கில் தண்டின் ஒரு முனையை கூர்மை செய்து, மறுமுனையில் மை ஊற்றும் வகையில் அமைத்து பேனா போன்ற அமைப்பை உருவாக்கி எழுதினர். இதுதான், மைப்பேனா உருவாக அடிப்படையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதுபோல், கி.பி., 700-ல், 'க்வில்' என்ற பேனா அறிமுகமானது. அதாவது, பறவை இறகின் நுனியை மையில் தொட்டு எழுதும் முறை. இது நீண்ட காலம் புழக்கத்தில் இருந்தது. வாத்து, காகம், கழுகு, நெருப்பு கோழி போன்ற பறவை இறகுகள் இதற்கு அதிக அளவில் பயன்பட்டன.

தொடர்ந்து உலோக நிப் பொருத்திய பேனா பயன்பாட்டுக்கு வந்தது. அடுத்து, 'பவுன்டெய்ன்' பேனா கண்டுபிடிக்கப்பட்டது. பின், 'பால் பாயின்ட்' பேனா பல வடிவங்களில், 1940க்கு பின் பயன்பாட்டுக்கு வந்தது.

தொடர்ந்து, 'ரோலர் பால்' பேனா, 1980ல் அறிமுகமானது. பின், பேனா பரிணாம வளர்ச்சியில் அதிக மாற்றம் ஏற்படவில்லை.

எழுதியபின் துாக்கி வீசும் பல வண்ண பிளாஸ்டிக் பால் பாயிண்ட் பேனாக்கள் இப்போது அதிகம் பயன்பாட்டில் உள்ளன. இவற்றை துாக்கி வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைவதாக கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 6,272 டன் அளவுக்கு மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் குவிந்து சுற்றுச்சூழலைக் கெடுப்பதாக அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரம் கிடைத்துள்ளது.

பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் ஏராளம்; அதை அளவிடமுடியாது. அந்த பட்டியலில், ஒருமுறை பயன்படுத்தி துாக்கி வீசும் பேனாவும் சேர்ந்துள்ளது.

அறிவியல் தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறிவிட்டது.

மலிவு விலையில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எழுதும் கருவிகள் தயாரிக்க வாய்ப்புகள் உள்ளன. அதற்கான வழிவகைகளை காண முயற்சிப்போம்.

மான் மொழி!

காட்டு வழிகளில், வாகனங்களில் சிக்கும் விலங்குகளில், மான்களின் எண்ணிக்கையே அதிகம். இரவு நேர விபத்துகளில் தான், அதிகம் சிக்குகின்றன. காட்டில் சாலையின் குறுக்கே கடக்கும் போது, நான்கு சக்கர வாகன முகப்பு விளக்கு ஒளி, மான்களை நிலைகுலைய வைக்கின்றன. இதனால் தான் அதிகமாக விபத்தில் சிக்கிக்கொள்வதாக ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

குழம்பிய நிலையில் திணறி நிற்பவரை, 'டீர் இன் தி ெஹட்லைட்' என்ற, ஆங்கில முதுமொழியால் குறிப்பர். இந்த சொற்றொடர், சாலை விபத்துக்களில் சிக்கும் மான்களை அடிப்படையாக கொண்டு உருவானதுதான்.

எதிர்பாராமல் ஏற்படும் நிகழ்வுகளை, எப்படி எதிர்கொள்வது என சிந்தித்தால், செயல்பட உரிய வழி கிடைக்கும். மான் போல் சாலை விபத்தில் சிக்கி மடிய வேண்டிய அவசியமிருக்காது.

செல்லங்களே சிந்திப்பீர்.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us