தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : அக் 14, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 14, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!

மூட்டையின் வெயிட் குறையுது!

பள்ளி படிக்கும் மாணவர்கள் புத்தக சுமையை தூக்கி கொண்டு நடத்தல், பஸ் கூட்டத்தில் திட்டுகளுடன் பயணித்தல், மழை,வெயில் கால மாற்றத்திலும் நிலைமையை தாங்குதல் என எண்ணற்ற கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.

குழந்தை பருவத்தில் தேவைக்கு அதிகமாக புத்த சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல் நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் இப்புத்தகச் சுமையை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முப்பருவ முறை, அதாவது, 'டிரை செமஸ்டர்' பேர்ட்டன், அறிமுகப்படுத்தப் படும்.

முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப்புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும்.

இதன்மூலம் மாணவர்களின் கவலை, அச்சம், மன அழுத்தம் ஆகியவை பெரிதும் குறைக்கப்படுவதுடன், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு புத்தக சுமையினால் ஏற்படும் இன்னல்கள் நீக்கப்படும். இது, நமது தமிழக முதல்வர் அவர்களின் இனிய அறிவிப்பு. ஒரே புத்தகத்தை ஆண்டு முழுவதும் படிக்கும் தேவை இராது. அதோடு பெற வேண்டிய அறிவையும் பெற்றுவிடுவோம்.

ஷாப்பிங் ஆசை!

பெண்கள் 60 நொடிகளுக்கு ஒரு தடவை 'ஷாப்பிங்' பற்றி நினைக்கிறார்களாம். ஷாப்பிங் பெண்களில் ஐந்து வகை இருக்கின்றனர்.

ஆசை பெண்கள்!

தேவை இருக்கிறதோ இல்லையோ... தள்ளுபடி இலவசம் என்பதற்காகவே பொருட்களை வாங்கி குவிப்பார்கள் இவர்கள். வீடுகளில் வித்தியாசமான பொருட்களை நிறைத்து வைத்திருப்பர். எந்த பொருட்களை எப்போது வாங்கினோம் என்று அவர்களுக்கே தெரியாது.

சிக்கனப் பெண்கள்!

ஒரு பொருளை வாங்க வேண்டுமென்று நீண்ட நாட்கள் நினைத்திருப்பர். அதற்காக பணமும் சேமித்து வைப்பர். பார்த்து பார்த்து கடைசியாக ஒரு நாளில் தனது மனம் கவர்ந்த பொருட்களை வாங்குவர்.

வாக்குவாதப் பெண்கள்!

ஒரு ஆடையை பார்க்கும் 65 சதவீத ஆண்கள் உடனே வாங்கி விடுவர். ஆனால், 75 சதவீத பெண்கள் கடை கடையாக ஏறி இறங்குவர். எவ்வளவு குறைந்த விலையில் தரம் நிறைந்த பொருட்களை வாங்க முடியும் என்பதை இவர்களிடம் தெரிந்துக் கொள்ளலாம்.

செலவாளிப் பெண்கள்!

இவர்கள் தரம் உயர்ந்த பொருட்களை வாங்குவதில் விருப்பமுடன் இருப்பர். இவர்களிடம் எவ்வளவு ரூபாய் கொடுத்தாலும் நொடிப் பொழுதில் செலவு செய்துவிடுவர்.

அடிமைப் பெண்கள்!

தினந்தோறும் வீட்டிற்கு அருகே உள்ள கடைக்கு வழக்கமாக செல்பவர்கள் தரம் பற்றியோ, இலவசம் பற்றியோ இவர்களுக்கு கவலையில்லை. ஆனால், தவிர்க்க முடியாத நேரத்தில் மட்டுமே 'ஷாப்பிங்' செய்வர்.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!

இது 'முருங்கைப்பூ வடை' செய்முறை.

தேவையானவை: முருங்கைப்பூ 3 டம்ளர், கடலைப் பருப்பு, துவரம் பருப்பு தலா 100 கிராம், சோம்பு-தேங்காய் துருவல் தலா 2 தேக்கரண்டி, பச்சை மிளகாய் 4, மிளகாய் வற்றல் 2, நறுக்கிய கொத்துமல்லித்தழை ஒரு கைப்பிடி, பெருங்காயம், மஞ்சள்தூள், எண்ணெய், உப்பு -தேவையான அளவு.

செய்முறை: பருப்பை ஊறவைத்து, முருங்கை பூ தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கரகரப்பாக அரைத்து, முருங்கைப்பூவுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்த கலவையை, வடை மாதிரி தட்டி போட்டு, பக்குவமாக சிவந்தவுடன் எடுங்கள். தேங்காய், கொத்தமல்லி தழை, புதினா என ஏதாவது ஒரு சட்னியுடன் பரிமாறவும்.

இந்த முருங்கைப்பூ வடை, மாலை, சிற்றுண்டிக்கு ஏற்றது; சத்தானது; சுவையாகவும் இருக்கும்.

கடா மீசை கோவிந்தன்!

பூனைக்கு எதற்காக அவ்வளவு பெரிய மீசை?

இயற்கை காரணம் இல்லாமல் எதையும் படைத்ததில்லை. பூனைக்கு மீசையும் உதவி யாகவே உள்ளது. பூனை இருட்டில் இருக்கும் போது எதிரில் ஒரு துவாரம் உள்ளது என்று வைத்து கொள்ளுங்கள். அந்த துவாரத்திற்கும் தன் உடம்பு நுழையுமா?நுழையதா? என்பதை தெரிந்து கொள்ள பூனைக்கு அதன் மீசை உதவுகிறது.

எப்படியென்று கேட்கிறீர்களா?

பூனை அந்த துவாரத்திற்குள் தலையை நுழைத்து பார்க்கும். அப்படி நுழைக்கும்போது மீசை, அந்த துவாரத்தின் இரண்டு பக்கத்திலும் தொடாமல் இருந்தால் பூனையின் உடல் நுழையக்கூடிய அளவுக்கு அகலம் உள்ளதாக அர்த்தம். அதை உணர்ந்து பூனை முடிவு செய்து கொள்ளும்.

என்றென்றும் உங்கள் அன்பில் டான்ஸ் ஆடும் அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us