தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : டிச 02, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 02, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வந்தேமாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!

உயிரையே அர்ப்பணித்த கியூரி!

ரேடியத்தை கண்டுபிடித்தவர் மேரி கியூரி. புற்று நோயை கட்டுப்படுத்தும் ரேடியம் என்னும் பொருளை கண்டுபிடிப்பதற்காக, தன் வாழ்க்கையே அர்ப்பணித்த மேரி கியூரியின், கடைசி காலம் மிகக் கொடுமையானது. போலந்து நாட்டில் 1867-ல் பிறந்த இவர் அந்த நாட்டில் இருந்த கடுமையான கலாச்சார கட்டுப்பாடுகளையும் மீறி அறிவியலின் மீது கொண்ட ஆர்வத்தால் ,பாரீசுக்கு வந்தார்.

பட்டப்படிப்பை முடித்த பிறகு, தனது கணவருடன் பேரியம், பிஸ்மத் போன்றவற்றை கொண்டு ஆராய்ச்சி நடத்திக் கொண்டு இருந்தார். அப்போது தான் யுரேனியத்தை விட பல மடங்கு சக்தி வாய்ந்த ரேடியம் என்ற பொருளை கண்டறிந்தார். அதற்காக 1903-ல் இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மேரி மற்றும் அவருடைய கணவரான பியரிகியூரி இருவரும், ஆய்வங்களில் வேலை செய்தாலும் முதலில் கதிர் வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்டது பியூரி தான். கால் வலியாலும் உடல் நடுக்கத்தாலும் மிகவும் பாதிக்கப்பட்ட அவர் 1906-ல் குதிரை வண்டியில் செல்லும் போது அதில் இருந்து விழுந்து இறந்து போனார்.

இரண்டு பெண் குழந்தைகளை கவனித்துக் கொண்டே பல பல்கலைக் கழகங்களில் பாடம் எடுத்து வந்தார் மேரி கியூரி. மிகவும் ஆபத்து மிகுந்த ரேடியம் சால்ட் எனும் பொருளை மாணவர்களுக்கு காண்பித்தற்காக எப்போதும் அதை தன் பாக்கெட்டில் வைத்திருப்பார். சோதனைக்களுக்காக தன்னையே பயன்படுத்திக் கொண்டவருக்கு, 'லுக்கிமியா' என்ற தோல் புற்று நோய் வந்து விட்டது.

அதையும் தாண்டி தொடர்ந்து தன் உடலை கண்டுபிடிப்புகளுக்கான சோதனைக்களமாகவே பயன்படுத்தினார். அவரது வாழ்க்கையின் இறுதி கட்டம் மிகுந்த வலிகளும் வேதனைகளும் நிறைந்தவை. கேன்சர் கட்டிகளால் கடும் பாதிப்புக்குள்ளான் மேரி கியூரி, 1934-ல் இறந்து போனார். 1935-ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்து. ஆனால், அதைக் காண்பதற்கு மேரிகியூரி இல்லை. ஆனாலும் அவரது கண்டுபிடிப்பு தான் இன்று பலகோடி மக்களின் வலிக்கு நிவாரணம் அளித்துக் கொண்டு இருக்கிறது.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!

இது 'காளான் பிரியாணி' செய்முறை நேரம்.

தேவையானவை: பாசுமதி அரிசி-1கப், காளான்-8, பெரிய வெங்காயம்-2, பச்சைப்பட்டாணி-கால் கப், காலிபிளவர்-1, கேரட்-1, சீரகம்-1 தேக்கரண்டி, மிளகாய்த்தூள்-1 தேக்கரண்டி, பட்டை-1, கிராம்பு-1, ஏலக்காய்-1, நெய் (அல்லது) டால்டா-5 மேசைக்கரண்டி, கொத்தமல்லித்தழை-தேவையான அளவு உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காளானை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்துக் கொõள்ளவும். முதலில் பட்டை, கிராம்பை, ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும், ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் நெய்யை விட்டு, அதில் பொடித்த பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் போட்டு வெடிக்க விடவும். இத்துடன் சீரகம் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வரும்வரை வதக்கவும். பிறகு மிளகாய்த் தூளைப் போட்டு கலக்கவும். இக்கலவையுடன் காய்கறிகளை சேர்த்து 5 நிமிடம் குறைந்த தீயில் வேக விடவும். இத்துடன் அரிசியைச் சேர்த்து தண்ணீர் மற்றும் நெய் வற்றி வரும் வரை வதக்கவும்.

அத்துடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து ஆவி வெளியே செல்லாத அளவிற்கு மூடி 30 நிமிடங்கள் வரை வேக விடவும். இதனை குக்கரிலும் செய்யலாம். குக்கரில் செய்யும் பொழுது 2 அல்லது 3 விசில் வரும்வரை வைக்கவும். இப்போது சூடான பிரியாணி தயார். இதனை கொத்தமல்லித்தழை மற்றும் புதினா வைத்து அலங்கரித்துப் பரிமாறலாம். இதற்கு தொட்டுக் கொள்ள வெங்காயப் பச்சடி சுவையாக இருக்கும்.

ஊட்டச்சத்து விவரங்கள்:- காளான், புரதச்சத்து மிகுந்தது. இது அசைவத்துக்கு ஈடான புரததத்தினைக் கொடுக்கிறது. இதனை மாதம் இருமுறை சாப்பிட்டு வர, உடல் மெலிந்து காணப்படும் குழந்தைகள் நன்கு வளர்ச்சி அடைவர். மேலும், காய்கறிகள், தேவையான அளவு வைட்டமின்களைத் தருகின்றன. பச்சைப் பட்டாணியும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். இதை 5 வயது முதல் உள்ள குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கலாம்.

அன்பு கலாம்!

இன்றைய தொழிற்சாலைகள் பயன்படுத்தும் தொழில் நுட்பங்களில், மிக முக்கியமானது உலோகங்களுக் கிடையேயான இணைப்பு. பெரும்பாலான கார் நிறுவனங்கள், எரிபொருள் சேமிப்பிற்காக வாகனத்தின் எடையை குறைக்க விரும்புகின்றன. அதே நேரத்தில், வலிமையை நிர்ணயிக்கவும் விரும்புகின்றன. இரண்டு வெவ்வேறு உலோகங்களுக்கிடையே செய்யப்படும் பிணைப்பு மிக துல்லியமானதாக தரமானதாக, குறைந்த செலவில் அமைவதற்காக, இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

ஜப்பான், ஜெர்மன், ஆகிய நாடுகளும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. இந்த இளைஞர்களின் புதுமையான சிந்தனைகளும், கண்டுபிடிப்புகளும் மிகவும் பாராட்டத்தக்க வகையில் வளர்ந்து வருகிறது.

பொறியியல் துறையில் மட்டுமில்லாமல், நாட்டின் அனைத்து துறைகளிலும், புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் நிகழ்த்த வேண்டும்.

50 அடி உச்சியில் பூனை!

சிங்கத்துக்கு பயந்து ஓடிய ஒரு பூனை, 50 அடி உயர கற்றாழை செடியின் உச்சியில் ஏறி உட்கார்ந்து கொண்டது. கிட்டத்தட்ட 6 மணி நேரம் அங்கேயே இருந்தது. சிங்கம் அங்கு இருந்து சென்று விட்டது என்பதை உறுதி செய்து கொண்ட பிறகுதான், அது கீழே இறங்கி வந்தது.

இந்த சம்பவம் அமெரிக்காவில் அரிசோனாவில் உள்ள சோனோரான் பாலைவனத்தில் நடந்தது. இதை பார்த்த ஒரு போட்டோ கிராபர் இந்த காட்சியை தன் கேமராவில் பதிவு செய்து விட்டார். இந்த கற்றாழை செடி 300 ஆண்டு பழமையானது. காலை 7 மணி அளவில் இந்த பூனையை ஒரு சிங்கம் விரட்டிக் கொண்டு வந்தது. சாலையின் மறுபக்கம் 50 அடி உயரத்துக்கு உயர்ந்து நின்ற கற்றாழையை பார்த்ததும் ரோட்டை கடந்து அதை அடைந்தது. உடனே கற்றாழையில் ஏறியது. இதை பார்த்த சிங்கம் கற்றாழை செடியை சுற்றி சுற்றி வந்தது. பிறகு உச்சியில் உட்கார்ந்து இருக்கும் பூனையை அன்னாந்து பார்த்தது. பிறகு அது திரும்பி சென்று விட்டது. இருந்தாலும் பூனை உடனே இறங்கி வரவில்லை. 6 மணி நேரம் காத்து இருந்தது. அதன் பிறகு தான் அது கீழே இறங்கி வந்தது. இதை அத்தனையும் வேடிக்கை பார்த்த போட்டோகிராபர் கர்ட் பாங்கா பூனையின் 'உஷார்' குணத்தை பார்த்து ஆச்சரியப்பட்டார்.

என்றென்றும் உங்கள் அன்பில்,
நடனமாடும், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us