தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு

அதிமேதாவி அங்குராசு

அதிமேதாவி அங்குராசு


PUBLISHED ON : ஜூலை 23, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 23, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அனைவருக்கும் எனது அன்பு! 



* வீட்டுக்குறிப்பு உதவி !

* மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.

* சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

* அரிசி மாவு கோலம் போடும்போது ஒரு சிட்டிகை மைதாவை கலந்து கொண்டால் கோலம் சீக்கிரம் அழியாமல் நீண்ட நேரம் இருக்கும்.

* பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

* மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.

* நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

* சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

* சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.

* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.

* ஆரோக்ய ஆலோசனை  : தேவையில்லாத மனப்பதற்றம்தான் மாரடைப்புக்கு பல வழிகளில் காரணமாகிறது. இதய நோயாளிகள்தான் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதில்லை. இளம்பெண்கள் உட்பட எல்லாருக்கும் இந்த எச்சரிக்கை அவசியம்.



* கோஸ் மேக்-அப் :  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாடாய் படுத்துவது மேக்-அப். குழந்தை கிளம்புமுன் ஒரு படி பவுடரை மூஞ்சியில் அப்பி, அம்மா அனுப்பும் போது தொடங்கும் மேக்-அப் ஆயுள் வரை தொடர்கிறது. தவிர்க்க முடியலேன்னா லேசா போடலாம். அழகாய் இருப்பது கலரில், மேக்-அப்பில், டிரெஸ்ஸில் எல்லாம் இல்லவே இல்லை. நம்மோட மனசில்தான் இருக்கிறது. நான் அழகு, நான் பேரழகு என்றெல்லாம் எண்ண வேண்டாம். ஆண்டவன் என்னை நல்லாவே செய்து அனுப்பி இருக்கிறார் என்ற எண்ணம் மட்டும் போதும். நிறைய நிறைய எங்கும் எப்போதும் தண்ணீரை குடித்துக் கொண்டு இருங்கள். எப்பெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் முகத்தை, கண்களை வெறும் பச்சை தண்ணீரால் கழுவுங்கள். தோய்த்த துணிகளை அணியுங்கள். வானிலைக்கு ஏற்ப 1-3 முறை குளியுங்கள், இயற்கையாய் வீட்டில் பாட்டி தயாரிக்கும் சீயக்காய் பொடியை உடல், தலைக்கு பயன்படுத்தலாம். சோப்பு கூட தவிர்த்துவிடலாம். பெண்கள் தினமும் முகத்திற்கு மஞ்சள் பூசியும், வாரம் ஒருமுறை உடல் முழுதும் மஞ்சள் பூசியும் குளிக்கலாம். சரும நோய்கள் வரவே வராது. அப்புறம், நாளை என்று எதையும் தள்ளக்கூடாது. நமது கடமையை அன்றே அப்போதே செய்திட வேண்டும். மனது ஒரு அற்புத இடம். அதில் நீங்கள் பட்ட துன்பம் பிறரை பற்றிய விஷயங்கள் என எந்த குப்பையும் உள்ளே இருக்கக்கூடாது. பயனுள்ள விஷயம், பயனில்லாத விஷயம் என பிரித்து தேவையில்லாததை போகி பண்ணி விட வேண்டும். எப்போதும் சிரித்த முகமும், மகிழ்ச்சி மனமாய் இருக்க வேண்டும். இதெல்லாம் கடைபிடிச்சா எப்போதும் அழகாய் இருப்பீர்கள்; ஆரோக்கியமாய் இருப்பீர்கள்; வெற்றியாய் இருப்பீர்கள்! அதிகாலை சீக்கிரம் எழணும், இரவு 10க்குள் படுத்துவிட வேண்டும். சரி, சரி இதோ ஒரு டிப்... முட்டைக்கோஸை வேக வைத்த நீரை வடிகட்டி முகம் கழுவிப் பாருங்கள். ஒரு இஞ்ச் மேக்-அப் போட்டதுபோல முகம் பிரகாசிக்கும்.



*  வயது 80- மொழி 20 : இந்தியாவில் உள்ள சாதாரண மனிதன் கூட அறிந்திருக்கும் இசை பிரபலம் புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர். அவர் சமீபத்தில் 80 வயதை அடைந்தார். இந்த அற்புத பாடகி இதுவரை 20 மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.

* வயது 28 -லட்சம் 4  : எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு டென்னிஸ். அதில் மிக அற்புத திறமையாளர், நல்லவர் - ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற டென்னிஸ் சாம்பியனும், உலகில் நம்பர் ஒன் விளையாட்டு வீரருமான ரோஜர் பெடரர். இவரது உருவத்துடன் நான்கு லட்சம் தபால் தலைகள், இவரது டென்னிஸ் சாதனைகளுக்காக வெளியிடப்பட்டுள்ளன.



* என்ன செய்ய வேண்டும் ?  : பிரஷர், நீரிழிவு, கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் அவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். மற்றவர்கள் இவை உள்ளனவா என பரிசோதித்து தெரிந்து கொள்ள வேண்டும். புகை பிடிப்பதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். உடற்பயிற்சி அவசியம்.  ஒரு நாளைக்கு தொடர்ந்து 45 நிமிடங்கள் நடப்பது எல்லாவற்றிற்கும் மேல். மூச்சுப்பயிற்சி, தியானம், யோகா, இறை வழிபாடு இந்நான்கையும் பின்பற்றினாலே மனப்பதற்றம் குறையும். பசித்த பின், அளவாக உண்பதை வழக்கமாக கொள்பவர்களுக்கு இதயநோய் வராது. நோய் பற்றி அடிக்கடி பேசக்கூடிய நண்பர்களையும், உறவினர்களையும் தவிர்ந்துவிடுங்கள். நல்ல இதய நோய் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். ஒருவருக்கு இதயநோய் வந்திருந்தாலும், அவர் தன் மனதை ஒருமுகப்படுத்தி, மனப்பதற்றம் அடையாமல் இருந்தாலே, நீடூழிவாழ முடியும். முழுக்க அன்பாய் இருங்கள் - உங்களை சுற்றி அன்பு இருக்கும்.

அன்புடன்,   அங்குராசு.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us