
தேவையான பொருட்கள்:
வாழை பூ - 1
பெரிய வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 2
பூண்டு பல் - 10
இஞ்சி - 1 சிறிய துண்டு
வரமிளகாய் - 1
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
கரம் மசாலா பொடி, மஞ்சள் பொடி, உளுத்தம் பருப்பு, கடுகு, பெருங்காயம் - சிறிதளவு
தண்ணீர், வெல்லம், மல்லித்தழை - தேவையான அளவு.
செய்முறை:
வாழை பூவை ஆய்ந்து, பொடியாக நறுக்கி, கழுவிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டை நைசாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் போட்டு தாளிக்கவும். சிவந்தவுடன், கருவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். பின், தக்காளியை சேர்த்து, நன்கு கிளறவும். அரைத்த இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்க்கவும்.
இந்த கலவையுடன், நறுக்கிய வாழைப்பூவை சேர்த்து நன்கு வதக்கவும்; பின், மிளகாய் துாள், மஞ்சள் துாள், சாம்பார் பொடி கலந்து கிளறி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
வெந்ததும், சிறிது வெல்லம், கரம் மசாலா பொடி போட்டு கிளறி இறக்கவும். இறக்கியவுடன், மல்லி தழையை கிள்ளி போடவும். சுவைமிக்க, 'வாழைப்பூ கிரேவி!' தயார்.
தோசையுடன் இந்த கிரேவியை சுருட்டி கொடுத்தால், சிறுவர், சிறுமியர் விரும்பி உண்பர். இட்லி, சப்பாத்தி, சாதத்துடனும் உண்ணலாம்!
- ஜி.பி.லோகேஸ்வரி, புதுச்சேரி.

