
தேவையான பொருட்கள்:
பனங்கிழங்கு - 4
தேங்காய் பால் - 1 கப்
கருப்பட்டி - 100 கிராம்
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரி, திராட்சை, ஏலக்காய் துாள், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
பனங்கிழங்கை நன்றாக வேகவைத்து, தோல் மற்றும் தண்டுப்பகுதியை நீக்கி சுத்தமாக்கவும். பின், துண்டுகளாக்கி விழுதாக அரைக்கவும். கருப்பட்டியில், அரை கப் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும். முந்திரி, திராட்சையை, நெய்யில் வறுக்கவும்.
வாணலியில் நெய்யை சூடாக்கி, பனங்கிழங்கு விழுது சேர்த்து சிறு தீயில் மூன்று நிமிடம் வதக்கவும். பின், கருப்பட்டி கரைசலை சேர்க்கவும். கொதித்தவுடன் இறக்கவும்.
இந்த கலவை, சிறிது ஆறியதும், தேங்காய்ப் பால், முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்துாள் கலக்கவும். சத்துமிக்க, 'பனங்கிழங்கு பாயாசம்' தயார். சிறுவர், சிறுமியர் விரும்பி சுவைப்பர்.
- லட்சுமி வாசன், சென்னை.
தொடர்புக்கு: 98402 67273

