PUBLISHED ON : மார் 11, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
சோற்றுக் கற்றாழை ஜெல் - 50 கிராம்
துளசி இலை - 50 கிராம்
தயிர் - 1 மேஜைக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
பனை வெல்லம் - 50 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
கற்றாழை ஜெல்லை, நன்றாக கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும். இதனுடன், துளசி இலை, தயிர், எலுமிச்சை சாறு, பனை வெல்லம், தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும். சத்துமிக்க, 'துளசி,சோற்றுக்கற்றாழை ஜூஸ்!' தயார்.
கோடையில் தாகம் தணிக்க உதவும். உடல் சூடு குறையும். குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்து பயன்படுத்தலாம்.
- ஆர்.அமிர்தவர்ஷினி, விழுப்புரம்.