PUBLISHED ON : ஏப் 22, 2011

பெரும்பகுதியான அமேசான் காடு 130 அடி (40மீ) உயர பெரிய மரங்களால் உருவான உடைக்க முடியாத (மூடியால்) போர்வையால் சூழப்பட்டுள்ளது. முதல் பார்வைக்கு தெரிவது போல இக்காட்டின் அமைப்பு அவ்வளவு எளிதானது அல்ல. தாவர ஆய்வாளர்கள் இங்கே பல அடுக்குகளும், வெவ்வேறு வகை தாவர வகைகள் இருப்பதையும் விளக்குகின்றனர். தரையில் தாவர வளர்ச்சி என்பது மிக குறைவு. காரணம், மற்ற அடுக்குகளை தாண்டி சூரிய ஒளி தரையை தொடுவதில்லை. ஆனால், மிக குறைந்த ஒளி தாவர மறைப்பு கீழே மிக அற்புதமான தாவரங்கள் சில மட்டுமே தாக்குபிடித்து வளரும்.இவை வெகு அழகாக இருக்கும். பலவித இலை ஒரே அமைப்புகள், பலவிதமான வண்ண பூக்கள் என இந்த தாவரங்கள் அசத்தும். இதுபோன்ற தாவரங்கள் சிலவற்றின் பெயர்கள் ஆரம், பிகோனியாஸ், பிலோடென்ட்ரான் மற்றும் மான்ஸ்டெராஸ். இந்த தாவரங்களின் கீழ் சிறிய நாற்றுகளோ அல்லது சில வகை புற்களோ மட்டுதான் வளர முடியும். மத்திய அடுக்கு என்பது புதர்கள் மற்றும் சிறிய மரங்களால் ஆனது. இந்த மத்திய அடுக்கு ஆளுங்க! மேலே இருக்கும் பெரிய மரங்களூடே வளர்ந்து மேலே சூரிய ஒளியை சந்திக்க நினைக்கும். இந்த மத்திய பகுதியில் கிளையில்லாத மரவகைகள்தான் காணப்படும்.மேலடுக்கோ மிக உயரமாய் வளர்ந்து கிளை பரப்பும் மரங்களால் ஆனது. பலகொடி தாவர வகைகளும் மத்திய அடுக்கிலிருந்து மேல் அடுக்கு வரை மரங்களை பற்றி கொண்டு வந்துவிடும்.
