PUBLISHED ON : அக் 11, 2019

தேவையான பொருட்கள்:
துளசி - 50 கிராம்
பூண்டு பல் - 6
மிளகு, சீரகம் - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு, கடுகு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயத்துாள், மஞ்சள்துாள், புளி - சிறிதளவு
உப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
துளசியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மஞ்சள் துாள், மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். புளியுடன், தண்ணீர் சேர்த்து கரைசலாக்கவும்.
வாணலியில், எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து, அரைத்த பூண்டு கலவையை வதக்கவும்.
பின் துளசியையும் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும், புளி கரைசலை ஊற்றி, கொதி வந்தவுடன், தேவையான உப்பு போட்டு இறக்கவும்.
சுவைமிக்க, 'துளசி ரசம்' தயார். வித்தியாசமான சுவையுடன் இருக்கும். சிறுவர் சிறுமியர் விரும்புவர்.
- ஏ.ஜி.பானு, நெய்வேலி
