தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஜாக்கிரதை "பவ், பவ்' கடி!

ஜாக்கிரதை "பவ், பவ்' கடி!

ஜாக்கிரதை "பவ், பவ்' கடி!


PUBLISHED ON : அக் 21, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

மனிதர்கள், அதிகம் பயப்படும் விலங்குகள் இரண்டு அவை, பாம்பு, நாய். நாயிடமிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள...

1.நாய்களை ஒருபோதும் தொந்தரவு செய்யக்கூடாது. குறிப்பாக நாய், உணவு உண்ணும்போது, தூங்கும்போது குட்டிகளுடன் இருக்கும்போது அருகே நெருங்கக்கூடாது. நாய்களை குச்சியாலோ, கல்லாலோ அடிக்கும் பழக்கம் கூடவே கூடாது.

2.கட்டி வைத்துள்ள நாய்கள், கம்பிகளுக்கு பின்னால் இருக்கும் நாய்களுக்கு அருகில் போகக்கூடாது.

3.நாய்களை கண்டு ஓடுவதோ, வேகமாக நடப்பதோ வேண்டாம்.

4. நாயை முறைத்து பார்க்காதீர்கள்.

5.நாய் கடிக்க வந்தால் ஓடக்கூடாது. சிலை போல அமைதியாக நிற்கவும். கத்தவோ, வாயை திறந்து பேசவோ கூடாது.

6. நாய் நெருங்கி வந்து நமது உடலை முகர்ந்து பார்த்தாலும் கூட, பயப்படாமல் மரம் மாதிரி அமைதியாக நிற்கணும்.

7.தடுமாறி கீழே விழுந்துவிட்டால், கால்களை மடக்கி இறுக்கமாக்கி கொள்ளவும்.

8.எதிர்பாராமல் நாய் கடித்துவிட்டால் பயப்படக்கூடாது. கடிபட்ட இடத்தில் உடனடியாக சோப்பு போட்டு, 10 நிமிடங்கள் வரை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவவும். தாமதமின்றி மருத்துவரை பார்த்து சிகிச்சை எடுக்கவும்.

9. வெறிநாய்க்கு எதிரான தடுப்பூசிகள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ளன. குறிப்பாக, நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போட வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us