
குருகுலத்தில் இரு மாணவர்கள் சிறந்து விளங்கினர்.
பொதுவாக, சிறந்திருக்கும் ஒருவருக்கு, முதல் மாணவன் என பட்டம் சூட்டுவது வழக்கம்.
இரண்டு பேர் சிறப்பாக இருந்ததால், 'மேலும் ஒரு பரீட்சை நடத்தலாம்' என எண்ணினார் குரு. மாணவர்கள், காலையில் தனித்தனியே பூஜை செய்வது வழக்கம். அது முடிய, அரைமணி நேரமாவது ஆகும்.
அன்று -
மாணவர்கள் இருவரும், தனித்தனியே பூஜையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, குரு அழைப்பதாக தகவல் வந்தது.
பூஜையை சுருக்கமாக முடித்து, 'அழைத்தீரா குருவே...' என்று பணிந்து நின்றான் ஒருவன்.
'அழைத்தபோது, பூஜையில் இருந்திருப்பாயே; பாதியிலா எழுந்து வந்தாய்...'
'ஆம் குருவே... தங்களை சந்தித்த பின்தான் பூஜை, புனஸ்காரம் எல்லாம் என ஓடி வந்து விட்டேன்...'
'உன் பக்தியை மெச்சினேன்; இந்த சோதனையில் நீயே வென்றாய்... இதே போன்று, உன் நண்பனுக்கும் அழைப்பு விடுத்தேன். அவனோ, பூஜையை முடித்து வருவதாக உட்கார்ந்திருக்கிறான்...' என சிரித்தார்.
'உங்கள் அறிவுரை தானே முக்கியம்...'
'சரியாக சொன்னாய். அறிவுரை எப்போதும் கிடைக்காது. பூஜை செய்ய கால, நேரம் தேவையில்லை... வழக்கத்தை விட, நடைமுறையை கடைபிடிப்பவனே வெற்றிகளை குவிப்பான்...' என்று விளக்கினார் குரு.
பரீட்சையில் தேறியவன் மகிழ்ந்தான்.
குருவின் வார்த்தையை மதிக்க தவறியவன், முதலிடத்தை தவறவிட்டான்.
குழந்தைளே... அறிவுரை கிடைக்கும் போதெல்லாம் கவனமாக கேளுங்கள்

