PUBLISHED ON : செப் 02, 2016

அ நிறம் | அளவு
பூச்சி இனங்களில் சில தரையில் வாழ்வதை விட, கடலில் வாழ்வதையே விரும்புகின்றன. 'பாண்ட் ஸ்காட்டர்' என அழைக்கப்படும், பூச்சி தண்ணீரின் மேல் பகுதியில் நடந்து போகும் திறன் படைத்தது.
'வாட்டர் போட்மேன்' என்று அழைக்கப் படும் பூச்சி, கடலில் மேல் பகுதிக்கு வந்து சுவாசித்து விட்டு, கடலடிவரை நீந்திப் போகும் தன்மை படைத்தது. இது தன் வயிற்றுப் பகுதியால் கடலின் மேல் பரப்பில் நீந்தும். கடலுக்குள் போய் உணவைத் தேடிக் கொள்ளும்.
'வாட்டர் ஸ்கார்பியன்' என்றழைக்கப்படும் பூச்சி தட்டையாக இருக்கும். இதுவும் தண்ணீரில் ஒட்டிக் கொள்ளும். சில பூச்சிகள் குழாய் போன்ற அமைப்புகள் துவாரம் மூலம் சுவாசிக்கும். இப்படிக் கடலில் வாழும் பூச்சி இனங்கள் ஏராளமாக உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு விதம்!
